உங்கள் கணவருக்கு எப்படி உதவலாம்?

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
உங்கள் கணவருக்கு எப்படி உதவலாம்?

அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, பிஸினஸாக இருந்தாலும் சரி... ஆண்கள் அல்லும்பகலும் அல்லாடுவதை வீட்டில் உள்ள பெண்கள் கவலையோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணவரின் வேலைப்பளுவைக் குறைக்கவேண்டும் என்று எல்லா மனைவிமார்களும் நினைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதோ சில ஐடியாக்கள்:


1. ஆபீஸில் பர்மிஷன் போட்டுவிட்டு கரன்ட் பில், டெலிபோன் பில், குடிநீர் பில் கட்ட உங்கள் கணவரை அனுமதிக்காதீர்கள். லேட்டாவதாலோ, பர்மிஷன் போடுவதாலோ அவருக்கு அலுவலகத்தில் கெட்ட பெயர்தான் வரும். அவருக்குப் பதிலாக அந்த வேலையை பொடி நடையாகப் போய் நீங்கள் முடித்துவிடுவது நல்லது. எலெக்ட்ரிக் பில், கேஸ் புக்கிங், டெலிபோன் பில், இன்டர்நெட் பில், குடிநீர் பில், இன்னபிற பில்களை ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிய காலத்தை ஓர் அட்டவணையாகத் தயார் செய்து உடனுக்குடன் செலுத்திவிட்டால், அபராதத்தை எளிதாகத் தவிர்த்துவிடலாம். வீட்டு பட்ஜெட் கையைக் கடிக்காமல் இருக்க இது முக்கியம்.

2. வீட்டுக்கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன், இன்ஷூரன்ஸ் போன்றவற்றையெல்லாம் வங்கிக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தே செலுத்தும் வசதிகள் வந்துவிட்டன. உங்கள் வீட்டில் இன்டர்நெட் இருந்தால் வீட்டிலிருந்தபடியே இந்த வேலைகளை எளிதாகச் செய்து முடித்துவிடலாம்.

3. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெரிய கனவுகளோடு ஷேர் மார்க்கெட்டிலும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருப்பவர்கள் பலர். ஆனால், தினசரி வேலை நெருக்கடி காரணமாக ஷேர் மார்க்கெட்டை அவர்களால் தினம்தினம் கவனிக்க முடிவதில்லை. அந்த வேலையை வீட்டில் இருந்தபடி டி.வி-யைப் பார்த்துக்கொண்டே செய்யலாம். இதனால் உங்கள் கணவர் நிம்மதியாக வேலையைப் பார்ப்பார். சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்வதும் நிதியை நிர்வகிப்பதும் கம்ப சூத்திரமல்ல. ஆர்வம் இருந்தால் எளிதில் கற்றுக்கொண்டு, உங்கள் கணவரின் 'போர்ட்ஃபோலியோ மேனேஜர்களாக' மாறலாம். இதனால் நஷ்டம் என்கிற பெரும் பிரச்னையை மிக எளிதாகத் தீர்த்துவிடலாம்.

4. ஓர் இணையதளத்தை நிர்வகிப்பது உங்கள் வீட்டுத் தோட்டத்தை நிர்வகிக்கிற மாதிரிதான். உங்கள் கணவர் ஒரு பிஸினஸ்மேன் எனில் அவரது நிறுவனத்துக்கான இணையதளத்தை நிர்வகிப்பது, அப்-டேட் செய்வது, வர்த்தக விசாரணைகளுக்குப் பதில் அளிப்பது போன்ற வேலைகளை நீங்களே செய்துவிடலாம். இதனால் பெரும் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.

5. எல்லா நிறுவனங்களிலும் எப்போதும் சில பணிகள் காலியாகவே இருக்கும். தோட்டக்காரர், செக்யூரிட்டி, அட்டெண்டர், சமையல்காரர், கார் டிரைவர், ஹெல்பர் போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்கான ஆட்களை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடுவதைவிட நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லித் தேடிப் பிடிக்கலாம். இதன் மூலம் ஒரு மினி ஹெச்.ஆர்-ஆகக் கூட இருக்கலாம்.

6. உங்கள் கணவரது கம்பெனியின் செய்திகளை, முக்கிய நிகழ்வுகளை, லேட்டஸ்ட் சாதனைகளை வாடிக்கையாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிற 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸ'ராகவும் நீங்கள் இருக்கலாம்.

7. வரி செலுத்துதல், வரிச் சலுகைக்குத் திட்டமிடுதல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு ஒரு மினி ஆடிட்டர் மாதிரி உதவலாம்.

8. எப்போதும் பிஸினஸ், பிஸினஸ் என்று அலையும் உங்கள் கணவருக்கு, அவரது துறையில் நிகழும் மாற்றங்கள், போட்டியாளர்களின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள தாமதம் ஏற்படலாம். இது மாதிரியான 'காம்படிட்டர் ஆக்டிவிட்டி' குறித்த தகவல்களை உடனுக்குடன் சேகரித்துக் கொடுக்கலாம். உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இது இருக்கும்.

மேற்சொன்ன ஐடியாக்களைச் செயல்படுத்த ஆர்வமும் அக்கறையும் இருந்தாலே போதும். பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை. இதன்படி நீங்கள் நடந்தால் உங்கள் குடும்பப் பொருளாதார நிலை எங்கேயோ போய்விடும்!

- திருக்குறள் அரசி
நன்றி : நாணயம் விகடன்
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.