உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#1
உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள்

1. க்ளென்சிங்:
சருமப் பாதுகாப்பிற்கு மிக அடிப்படையான விடயம் தான் க்ளென்சிங் செய்வது. இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி எண்ணெய்ப்பசையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் விட்டமின்கள் மற்றும் சன்ஸ்கிரீன் போன்றவை சருமத்துள் ஊடுருவிச் சென்று ஊட்டமளிக்கத் துணைபுரிகின்றது.

எல்லா க்ளென்சரும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியாது. பேசியல் க்ளென்சர் சோப் இல்லாததாக இருக்க வேண்டும்.

நீங்கள் உடலின் ஏனைய பாகங்களுக்குப் பயன்படுத்தும் சோப் முகத்திற்கு தீங்கிழைக்கக் கூடியது. அத்தோடு சருமப் பாதுகாப்புத் தயாரிப்புகள் மலிந்துகிடக்கும் நிலையில் உங்கள் சருமத்திற்குப் பொருந்தக் கூடிய ஒன்றைத் தெரிவு செய்வது முக்கியமானது.

உங்களுடையது மிக உலர்ந்த சருமமாயின் கண்டிப்பாக நீங்கள் க்ரீமி க்ளென்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.

உலர்ந்த மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய (sensitive) சருமமாக இருந்தால், க்ரீமி க்ளென்சராக இருந்தாலோ இல்லாவிட்டாலோ கண்டிப்பாக ஆல்கஹால் கலந்ததாக இருக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் alpha-hydroxy கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

2. நீர்:
மனித உடல் நீரினால் நிரப்பப்பட்டது. நமது உடற்செல்கள் ஊட்டப்பொருட்களை உறிஞ்சிக் கொள்வதற்கும் ஜீரண நடவடிக்கைகளை சீராக்குவதற்கும் நீர் மிக முக்கியமானது.

சுவாசிக்கும்போதும் வியர்வை வெளியேறும்போதும் செல்களில் உள்ள நீரின் அளவில் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுசெய்ய நாம் தொடர்ச்சியாக நீர் அருந்த வேண்டிய தேவை உள்ளது.

நீர் சருமத்திலுள்ள அழுக்குகள் மாசுக்களை அகற்றி பருக்கள் ஏற்படுவதைத் தடுத்து சருமத்தை மென்மையாக்குகிறது. சருமத்தை ஊட்டமுள்ளதாக வைத்திருக்க நாளொன்றிற்கு கட்டாயமாக 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

3. கொழுப்பு அமிலம்(EFAs):
கொழுப்பு அமிலங்கள் இல்லாவிட்டால் சருமக் கலன்கள் உலர்ந்து கறைகள் படிந்ததாய்க் காணப்படும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பொலிவுறச் செய்கின்றன.

ஒமேகா-6 கொழுப்பு அமிலம் கோழி இறைச்சி, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது சிலவகை மீன்கள், சூரியகாந்தி எண்ணெய், கிட்னி பீன்ஸ், வால்நட்ஸ் மற்றும் ஸ்பைனாக் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.

சில சரும நிபுணர்கள் Gamma Linolenic Acid (GLA) இணையும் தற்போது பரிந்துரை செய்து வருகின்றனர்.

இந்த கொழும்பு அமிலமானது தாவர எண்ணெய்யில் அதிகம் காணப்படுகிறது.

4. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:
சன்ஸ்கீரின்களை நீங்கள் பாவிக்கின்ற பொழுது சருமப் புற்றுநோய்களிலிருந்தும் ஏனைய சரும நோய்களிலிருந்தும் உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாப்பதோடு சூரிய ஒளியினால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை விரைவில் பெறுவதிலிருந்தும் பாதுகாப்புச் செய்கின்றீர்கள்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது நிறமாற்றம், சுருக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகையில் சன்ஸ்கீரின் UV கதிர்களை ஊடுருவ விடாமல் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

5. அன்டியக்சிடன்ட்ஸ் (Antioxidants):
கார்டியோவஸ்குலார் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பிற்கு அன்டியக்சிடன்ட்ஸ் பயன்படக்கூடிய ஒன்றாக நம்பப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கடல் உணவு மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படுகிறது.

பலதரப்பட்ட அன்டியக்சிடன்ட்ஸ் இருக்கின்ற போதும் இரண்டு வகை மட்டுமே சருமப் பராமரிப்பில் அதிக கவனத்தைப் பெற்றவை.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்க&#2

Thanks for sharing this beautiful tips.....
 
Joined
Sep 20, 2013
Messages
6
Likes
3
Location
Chennai
#4
Re: உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்க&#2

you have given the very useful tips
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.