உங்கள் வருங்கால கணவர் நல்லவரா? கெட்டவரா? &#297

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
உங்கள் வருங்கால கணவர் நல்லவரா? கெட்டவரா?
சில கண்டுபிடி டிப்ஸ்


இன்றைய இளம் பெண்கள், தானே சுயமாக கை நிறைய சம்பாதிக்கிறார்கள். தன வாழ்க்கைக்கான தேவைகளை, தானே தேர்ந்தெடுத்து நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை விசயத்தில் பெற்றோரே இன்று மகளின் விருப்பப்படிதான் தேடுகிறார்கள். சரி, மாறிவரும் இன்றைய கால கட்டத்தில் மணமகனை எப்படி தேடித் பிடிக்க வேண்டும்? எதை கவனிக்க வேண்டும்?

எப்படிப்பட்ட ஆணை செலக்ட் செய்வது, எப்படிப் பட்டவர்களை ரிஜெக்ட் செய்வது என்பது பற்றி பேசுகிறார் டாக்டர் ஷாலினி.

மாப்பிள்ளை பற்றி ஏதாவது நெகடிவான விஷயங்கள் கடைசி நிமிடங்களில் தெரிய வந்தால், 'ஹூம் ... கமிட் ஆகிவிட்டோமே! இனி என்ன செய்வது?' என்று தயங்காதீர்கள்.
தாலி கட்டுகிற நிமிடத்தில் கூட மாப்பிள்ளை பற்றி தவறான விஷயம் கவனத்திற்கு வந்தால் திருமணத்தை நிறுத்துவது தான் எல்லாவிதத்திலும் சிறந்தது.

ஒரு ஆண் மகன் தப்பு செய்யாமல் இருப்பது பெரிய விசயமே இல்லை. சிலருக்கு தப்பு செய்வதற்கு சந்தர்பங்கள் அமைந்திருக்காது, அல்லது சிலருக்கு தப்பு செய்யும் அளவிற்கு தைரியம் இருந்திருக்காது. இதை வைத்து "என் பிள்ளைக்கு உலகமே தெரியாது, எந்த தப்பு தன்டாவிற்கும் போனதே இல்லை" என்று உங்களுக்கு பார்த்திருக்கும் வரன் பற்றி மாப்பிள்ளை வீட்டார் சொன்னால் அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

காரணம், தப்பே செய்யாதவனை விட தப்பு செய்து, அது தப்பு என்று உணர்ந்து மாரியவனே பெஸ்ட் சாய்ஸ்.

தப்பு செய்யாதவன் எப்போது சந்தர்பம் அமையும் என காத்திருக்க வாய்ப்புண்டு. அந்த சந்தர்ப்பம் திருமணத்திற்கு பின் அமைந்தால், பாதிக்கப்படப்போகும் பெண் நீங்கள் தான்.

அதனால் திருமணத்திற்கு முன்பே உங்களுக்கான வரன் பற்றி தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு ச்டேப்பிலும் கவனம் செலுத்துவது சிறந்தது.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
Re: உங்கள் வருங்கால கணவர் நல்லவரா? கெட்டவரா? &

"எனக்கு எல்லாமே எங்க அப்பா அம்மா தான். எதுவாயிருந்தாலும் அவங்க எடுக்கற முடிவு தான் " என்று தொட்டதற்கெல்லாம் சொல்லும் மாபிள்ளை சுலபத்தில் நம்பாதீர்கள்.

எந்த ஒரு முடிவையும் சுயமாக தனித்து எடுக்க முடியாத ஒருவனை, அல்லது அந்த பொறுப்பை தான் சும்மக்க தயங்குபவனை நம்பி உங்கள் வாழ்கையையே ஒப்படைக்க முடியுமா? சொல்லுங்கள்.

நீங்கள் வாழப்போவது யாருடன்? இந்த கேள்விக்கு விடை யோசித்து பாருங்கள்....

"எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உன்னை பிடிச்சிருக்கு, அதனால எனக்கும் ஓகே" என்று சொல்லும் வரன் விசயத்தில் உசாராக இருங்கள்.

நீங்கள் உங்களுக்கான ஒரு பொருளை செலக்ட் செய்யும்போது உங்களின் தேவைக்கேற்ப தான் செலக்ட் செய்வீர்கள்....

இந்த மனநிலை தான் உங்களை செலக்ட் செய்த அவரின் பெற்றோருக்கு இருக்கும். அவரின் தாய், நீங்கள் அவர்களுக்கு அடங்கியவராக, வீட்டு வேலை செய்பவராக, எதிர்த்து பெசாதவராக இருப்பீர்கள என்றே அவர் பார்ப்பார்.

ஆகவே, உங்களை உங்கள் வருங்கால கணவருக்கு பிடிப்பதே இதில் முக்கியம். தவிர, அப்பா, அம்மா சொல்றங்களே என்று கல்யாணம் செய்துகொள்ளும் வரன் திருமனத்திற்கு பின் அல்லது கொஞ்ச நாளில் "நான் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லை. எனக்கு வர பொண்ணு சிவப்பா இருக்கணும்னு எதிர்பார்த்தேன். ஆனா, நீ கலர் கம்மிய இருக்கே. ஆனாலும் உனக்கு நல்ல சமைக்க வரும், வீட்டை நல்ல கவனிச்சுக்குவ, பெரியவங்க கூட அட்ஜஸ்ட் பண்ணி குடும்பம் நடத்தற பொண்ணுன்னு கேள்வி பட்டு எங்க அம்மாவுக்கு உன்னை பிடிச்சு போச்சு. அவங்க பேச்சை தட்ட முடியாம தான் உன்னை கல்யாணம் செய்துகிட்டேன். இப்ப பீல் பண்றேன்." என சொல்லி பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடுபவர்களும் உண்டு.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Re: உங்கள் வருங்கால கணவர் நல்லவரா? கெட்டவரா? &

ஆகவே, அவர்கள் வீட்டினரை விட, நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறீர்களோ அந்த வரனுக்கு உங்களை பிடிதிருக்கணும் என்பது தான் முக்கியமான பாயிண்ட்.

அதை உறுதிபடுத்தி கொள்ளாமல் நீங்கள் தாளிக்காக கழுத்தை நீட்டினால், உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே குழி தோண்டி கொள்வதாக தான் அர்த்தம்.

மனதுக்கு பிடிக்காமல் உங்களை ஒருவன் ஏதோ கட்ட்டயதினால் ஏற்றுக்கொண்டிருந்தால் பின்னாளில் அவனுடைய அப்பா, அம்மா "இவ நம்ம குடும்பத்துக்கு செட் ஆகா மாட்டா" என்று ஏதாவது உப்பு பெறாத விசயத்தை காரணம் காட்டினால் கூட, கண்ணை மூடிக்கொண்டு உங்களை கலட்டி விட்டுவிடலாம், ஜாக்கிரதை!

உங்களுக்கு என்று ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். பெண் பார்க்கும் படலம் தாண்டி இரண்டு பேருக்கும் பிடித்துவிட்டால் நிச்சயத்திற்கு முன்போ பின்போ அந்த பய்யன் உங்களுடன் போனிலோ, நேரிலோ பேச விரும்புபவனாக இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் சிநேகிதிக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும், அதற்கு அவரை அழைத்தொபோக விரும்பி விருப்பத்தை சொன்னால், அவர் ஏற்றுக்கொண்டு உங்களுடன் வர தயாராக இருக்க வேண்டும்.

"எதுவாயிருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு பார்த்துக்கலாம்" , என்று சொல்பவனின் பின்னணியை ஆழமாக விசாரிக்க வேண்டும்.

பேச்சை வைத்தே மனிதர்களை எடை போடா முடியும் என்பதால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் பேசும்போது அவனை பற்றி ஓரளவு ஜட்ஜ் பண்ணி விடலாம்.

"நான் செலக்ட் செய்த சேலையை தான் நீ வாங்க வேண்டும்... நான் சொல்கிரவர்களிடம் தான் நீ பேச வேண்டும்" என்று பெண்ணின் விருப்பம் தெரிந்து கொள்ள விரும்பாமல் நிர்பந்திக்கிற ஆணையும் புறம் தள்ளி விடுங்கள். பின்னாளில் சுயநலத்துடன் அவன் ஆட்டுவிக்கிற ஆட்டுவித்தளில் பட்டு ஏலவே உங்களால் முடியாது.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#5
Re: உங்கள் வருங்கால கணவர் நல்லவரா? கெட்டவரா? &

சில பெண்களுக்கு உலகமே தேராது. அதாவது பெற்றோர் அப்படி வளர்த்திருப்பார்கள். "ஒரு கால் கட்டு போட்டுட்டா வர்றவன் பாடு...இவ பாடு" என்று சில மக்கு பேர்வழிகளை பெண்கள் தலையில் கட்டிவைத்து விடுவதுண்டு.

குறிப்பாக வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என்பவர்களும், ஒரு பெரிய சொத்து தங்கள் கைக்கு வர வேண்டும் என்றோ சிலர் இப்படி செய்வதுண்டு.

அப்படி ஒருவனை நீங்கள் கட்டிக் கொண்டால், ஒருவேளை அவன் மூலம் நீங்கள் தாயாகலாம் தவிர உங்கள் ஆயுள் முழுவதும் அவனை திருத்துவதற்கே சரியாக இருக்கும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். காலம் முழுவதும் பிரச்சனைகளுடன் நிம்மதி இன்றி தவிப்பதர்க்கல்ல.

பெண் பார்த்து போனவருக்கு உங்களை பிடித்து விட்டது. அடுத்து நிச்சயத்திற்கு தேதி குறிக்க வேண்டும். ஆனால், சரியான காரணம் இல்லாமல் நிச்சயதார்த்தத்தை மாச கணக்கில் கடத்தி மாப்பிள்ளை வீட்டார் தயக்கம் காட்டினாலோ, அல்லது ரொம்ப நாள் இழுத்தடித்தாலோ 'சம்திங் ராங்..." என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விடலாம்.

இதெல்லாம் உங்கள் எச்சரிக்கைக்கு ஒரு சில சாம்பிள்கள் தான். அவரவர் சூழ்நிலை பொருத்து சில விஷயங்கள் மாறுபடலாம். முடிந்தவரை எல்லா விசயங்களிலும் விழிப்போடு இருந்து இல்வாழ்க்கையில் நுழைந்து சமர்த்தாக ஜெயிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆல்தி பெஸ்ட்!

-டாக்டர் ஷாலினி
(சினேகிதி இதழில் இருந்து)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.