உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப&amp

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப்ஸ்கள்!டம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு செல்கிறோம். தேடித் தேடி ஆர்கானிக் உணவுகளை உண்ணுகிறோம், விதவிதமான டயட்டை பின்பற்றுகிறோம். இன்னமும் இதைத்தான் செய்கிறீர்களா....இதெல்லாம் பழைய கதை பாஸ்...உங்க வீட்டில் சில விஷயங்களை மாற்றினாலே நீங்கள் ஃபிட்டா இருப்பீங்க.

உங்க வீட்டுச் சுவற்றின் வண்ணத்திலோ, வெளிச்சமாக வீட்டை அலங்கரிப்பது துவங்கி வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மாற்றுவது வரை எதையாவது செய்துகொண்டே இருங்கள். அப்புறம் பாருங்கள்...உங்க ஃபிட்னஸ் ரகசியம் எதில் அடங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் பார்க்கும் சிறு சிறு வீட்டு வேலைகள் எல்லாமே ஒரு ஃபிட்னெஸ் தான்....

உங்கள் வீட்டை 'ஜிம்'மாக்கும் 5 விஷயங்கள் இதோ...

1. நமக்கு பிடித்த உணவு வகை மூன்று தடவைக்கு மேல் கண்ணில்பட்டால் அதனை எடுக்க வேண்டும் என்ற ஆவல் எழுமாம். அதனால் திண்பண்டங்களை உங்கள் கண்ணில் படாதவாறு பாத்துக் கொள்ளுங்கள். பழங்களை உங்கள் கண்ணில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வீணாய்ப் போகிறதே என்று அவற்றை சாப்பிடத் தொடங்குவீர்கள்.

சமையலறையில் செல்ஃப் இருந்தால் நடு செல்ஃபில் பழங்கள், நட்ஸுகளை வைத்துவிட்டு, கண்ணில் படாமல் இருக்கும் மேல் செல்ஃபிலோ, கீழ் செல்ஃபிலோ மற்ற உணவுகள் வைக்கப் பழகுங்கள். நாளடைவில் உடலுக்குக் கேடான நொறுக்குத்தீனிகளை குறைக்க ஆரம்பிப்பீர்கள். நல்ல விஷயத்தை தொடங்குவதற்குதான் பாஸ் தயங்குவோம். சாப்பிடப் பழகிவிட்டால் அது பழகிவிடும்.

2. உங்களுக்கு பிடித்த பாடலையோ, படத்தையோ பார்க்கும்போது அதிகமாக சாப்பிடுவீர்கள். பசிக்கு சாப்பிடுவது போய் தேவையில்லாமல் உணவு உள்ளே இறங்கும். அதனால் சாப்பிடும்போது டி.வி பார்ப்பது, பாட்டு கேட்பது என்று இல்லாமல் சீக்கிரம் உணவு சாப்பிடப் பழகுங்கள். அது சரியான உணவையும் உங்கள் தேவைக்கு சரியான அளவு உணவையும் எடுத்து கொள்வீர்கள்!3. வீட்டில் அதிகமான சோஃபாக்களை தவிருங்கள். வீட்டில் எங்கு பார்த்தாலும் சொகுசு இருக்கைகள் இருந்தால், சோம்பேறித்தனத்துடன் அமரதான் மனம் எண்ணும். வேலை செய்ய தோன்றாது. அதில் அமர்ந்து டி.வி பார்த்தால் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். உங்கள் வீட்டில் ட்ரெட் மில் அல்லது உடற்பயிற்சி உபகரணங்கள் இருந்தால் அதனை மூலையில் வைக்காமல் ஹாலில் இடம் மாற்றுங்கள். அதில் நடந்து கொண்டே டி.வி பாருங்கள். செடிகளைப் பராமரிப்பது, நாய்க்குட்டி வளர்ப்பது என* சின்னச்சின்ன விஷயங்களை மாற்றினால் ஆக்டிவாக இருக்கத் தொடங்குவீர்கள்.

பருமனான ஒருவர் சராசரியாக ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ஒன்றரை மணிநேரம் சோஃபாவிலேயே அமர்ந்திருப்பதாக மயோ கிளினிக் ஆய்வு ஒன்று சொல்கிறது.

4. தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் நீங்கள் அதைவிட குறைந்த நேரம் தூங்குகிறீர்கள் என்றால் நீங்கள் ஆரோக்கியமான இருப்பதற்கு சான்ஸ் மிகவும் குறைவு. தூக்கமின்மைக்கு ஸ்ட்ரெஸ், செரிமானக் கோளாறு என பல காரணங்கள் உள்ளன.

பிடித்த நிறத்தில் தலையணை, கர்ட்டன்ஸ், சுவற்றின் நிறத்தை மற்றுவது, இரவுகளில் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடுவது, தூங்கச் செல்லும்போது போனை நோண்டாமல் கைக்கு எட்டாத இடத்தில் வைத்து தூங்குவது என சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் தூக்கம் நன்றாக வரத்தொடங்கும். எட்டு மணிநேரம் தூங்குகிறீர்கள் என்றால் அதிகாலை சீக்கிரம் எழுவது, உடற்பயிற்சி செய்வது.. என நல்ல தூக்கத்தால் உங்களது லைஃப் ஸ்டைல் உங்களை அறியாமலேயே மாறத்துவங்கும்.5. பெரும்பாலான உயர்தர உணவகங்களில் லைட்டிங் மிகவும் டல்லாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பீர்கள், சமைக்கப்பட்ட உணவினை அதிக நேரம் வைத்து அதன் தன்மையே மாறும் அளவுக்கு மாற்றிவிடுவீர்கள்.

அதிக நேரம், சாப்பிடுவது உங்கள் உடலுக்கு கேடு என்பதால் சீக்கிரம் சாப்பிடுங்கள். அதுமட்டுமின்றி வீட்டிலும் இருட்டில் அமர்ந்தோ, டல்லடிக்கும் லைட்டிங்கிலோ சாப்பிடாதீர்கள். எப்போதும் பளிச் லைட்டில் உண்பதால் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், தேவையானதை மட்டும் சாப்பிடுவீர்கள்.

என்ன பாஸ் வீட்டிலேயே ஜிம் அமைக்க தயாராகிட்டீங்களா...
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப

Hi @chan, very nice suggestions! thank you!
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப

Very nice sharing. Thanks ji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.