உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?-Is your weight increasing?

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
அன்று...
1. அம்மி, ஆட்டுரல், தண்ணீர் குடம் சுமப்பது என்று வீட்டு வேலைகளே பெண்களுக்கான உடற்பயிற்சியாக இருந்தன. அதிலும், கோலம் போடுவது சிறந்ததொரு யோகாசனம். கவிழ்ந்து கிடக்கும் கருப்பையை நேராக்கவும், இடுப்பு எலும்பு விரிவடையவும் வழிவகுக்கும். இதேபோல் ஆண்கள் சுமை தூக்குவது, ஏர் உழுவது என உடலுக்கு ஆரோக்கிய மான வேலைகளை விரும்பிச் செய்தார்கள்.
2. குழந்தைகள் ஓடியாடி விளையாடிய தால் உடலின் அத்தனை பாகங் களுக்கும் இயக்கம் கிடைத்தது. இதனால் ஒபிஸிட்டி அவர்களை நெருங்க பயந்தது.
3. பிரசவத்துக்குப் பின்னரே பெண்கள் உடல் எடை அதிகரித்தார்கள்.
4. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம்.
5. உடலுக்கு பயிற்சி தரக்கூடிய விளையாட்டுகளும், வேலைகளுமே பொழுதுபோக்கு விஷயம். அதனால் சாப்பிடும் உணவின் கொழுப் புகள் உடனுக்குடன் கரைந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
[HR][/HR]​
இன்று...
1. அனைத்து வேலைகளும் ஒரு ஸ்விட்சை ஆன் செய்து முடித்துவிடும் அளவுக்கு எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. அநேகம் பேர் ஒரு நாளின் பாதி தினத்துக்கு மேல் கணினி முன் அமர்ந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல். இதனால், 'மென்டல் ஸ்ட்ரெய்ன்’ அதிகரிக்கிறதே தவிர, எந்தவித 'ஃபிஸிகல் எக்சர்சைஸும்’ கிடைப்பதில்லை.
2. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை. அதனால், வீடியோ கேம் அடிமைகளாகவும், நோய் சங்க உறுப்பினர்களாகவும் இளைய சமூகம் மாறிவருகிறது.
3. ஜங்க் ஃபுட் மோகத்தால் வளரிளம் வயதுப் பெண்களில் பலர் இரண்டு மடங்கு எடையுடன் இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
4. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்கள் பலரையும் இன்றைக்கு சோம்பேறிகளாக மாற்றி வர, பக்கத்து கடைக்கு சென்று வரக்கூட பைக் எடுப்பதும்... ஆன்லைனில் வீட்டுக்கே பொருட்களை வரவழைத்து பயன்படுத்தும் அவலமும் அதிகரித்துள்ளது.
5. டி.வி. முன்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன், சாக்லேட், ஸ்வீட் போன்றவற்றுடன் ஆஜராகி சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், ஏ.சி அறையில் உட்கார்ந்தபடியே சாட்டிங் செய்வதும் இன்றைய பொழுதுபோக்கு. இதனால் உடல் இயக்கம் முற்றிலும் குறைந்து... உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புகளைக் கரைக்க வழியின்றி சேமித்து, ஒபிஸிட்டியை பரிசளிக்கிறது.
[HR][/HR]​
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
Re: உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

உணவைத் தவிர்த்தாலும் ஒபிஸிட்டி!
அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை 'ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும்.

இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், சாதரண நோய் தொடங்கி... குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குத் தரப்படும் உளுத்தங்களி போன்ற பாரம்பர்ய உணவுகள், ரத்த விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லவை. ஆனால், இன்றைய டீன் ஏஜினரோ... காலை எழுந்தவுடனே பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடவே விரும்புகின்றனர்.
[HR][/HR]​
உயரத்துக்கேற்ற எடை அவசியம்..!
ஒருவரின் சரியான எடையைக் கண்டறிய ஓர் எளிய வழி. உயரம் (செ.மீ) 100 = சராசரி எடை (கிலோவில்). அதேபோல், ஒருவரின் பி.எம்.ஐ (BMI-Body mass Index) 24-க்கு மேல் இருந்தால், அவர் 'உடல் பருமன்’ வகையில் சேருவார். அதாவது, ஒருவரின் எடை (கிலோ) / உயரம் (மீ)2 = பி.எம்.ஐ. உதாரணமாக, உங்கள் மகளின் எடை 45 கிலோ, உயரம் 155 செ.மீ என்றால், 45 / (1.55ஜ்1.55) = 18.7. உங்களது மகள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம்.


குறிப்பு: சென்ற தலைமுறையில் செப்பு மற்றும் மண்பானையில் வைத்து தண்ணீர் குடித்தார்கள். அதனால், அதில் உள்ள தாதுப்பொருட்கள் உடலில் சேர்ந்து கருமுட்டை மற்றும் கருப்பை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றோ, பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதால்... அதில் உள்ள ஸினோ ஈஸ்ட்ரோஜென்' (Xeno Estrogen) எனும் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென்னை வேலை செய்ய விடாமல் தடுத்து, கருமுட்டை வளர்ச்சியின்றி சினை உறுப்பில் நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை, பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்' (Polycystic Ovary Disease) என்று சொல்லுவார்கள். இந்த பிசிஓடி, அதிகமான உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குளறுபடிகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தீர்வுகள் என்ன?
போதிய உணவுக் கட்டுப்பாடு.
ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், சீரான உடற்பயிற்சியும்.
இளம் பருவத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு களும், கட்டமைக்கும் ஆரோக்கியமுமே வாழ்க்கை முழுவதற்குமான அடிப்படை என்பதால்.. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்களை முற்றிலும் தவிர்த்தல்.
கேழ்வரகு, கம்பு, வரகு, தினை போன்ற தானியங்கள். காய்கறிகள், பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது.
பீன்ஸ், நாட்டு அவரை, காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட், புரோக்கோலி உள்ளிட்ட அதிக நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது.

பூச்சிக்கொல்லி தெளிப்பில்லாத ஆர்கானிக் உணவுகளைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது.
வறுத்த, பொரித்த, எண்ணெய் சார்ந்த உணவுப் பொருட்கள் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது.
வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு இருக்குமாறு அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வது.
விளையாட்டைவிட சிறந்த மருந்தில்லை என்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, தினமும் விளையாட அனுமதித்தல்... இதுபோன்றவற்றால் உடல் பருமன் பிரச்னையை முற்றிலும்
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.