உங்க டிபன் பாக்ஸுக்குள் என்ன இருக்கு

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
உங்க டிபன் பாக்ஸுக்குள் என்ன இருக்கு


[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
யாரும் எதிர்பாராத வகையில், திடீரென ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்கே இருக்கும் காஷியர், மேனேஜர், ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் ஒரே சமயத்தில்... டிபன் பாக்ஸ்களைத் திறக்கவைத்து எத்தனை பேர் சமச்சீரான உணவு சாப்பிடுகிறார்கள் என்று பரிசோதிப்பதுதான் நமது 'ஆபரேஷன் டிஃபன் பாக்ஸ்’ திட்டம்!
மதிய நேரம்.... டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியுடன் நாம் முற்றுகை இட்ட இடம், சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி. நோக்கத்தைச் சொன்னதுமே, வங்கியின் துணைப் பொது மேலாளர் செல்வராஜ் உற்சாகமாகி நம்மைச் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார்.
'உங்க டிபன் கேரியரை எல்லாம் திறந்து மேஜை மேலே வெச்சுட்டு ஒரு அடி பின்னாடி போங்க’ என்று டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி சஸ்பென்ஸோடு சொன்னதும் அங்கிருந்த ஊழியர் பிரேமா, 'நீங்க என்ன ஹெல்த் இன்ஸ்பெக்டரா?’ என்று கிண்டலாகக் கேட்டபடி தன் டிபன் பாக்ஸைத் திறந்து நீட்டினார். தக்காளிச் சாதமும் தொட்டுக்கொள்ள வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு சேர்த்த பொரியலும் இருந்தது. பிரேமாவைத் தொடர்ந்து அவரது தோழிகள் ஒவ்வொருவரும் சாம்பார் சாதம், காரக்குழம்பு சாதம் என்று ஒவ்வொரு சாதமாக நீட்டினார்கள்.
''கலந்த சாதங்கள் 350-லிருந்து 400 கிராம் வரைதான் இருக்கும். இதனால், 300 கிலோ கலோரி கிடைக்குது. காய்கறிகள் குறைவா இருக்கிறதால், குறைந்த அளவுதான் நார்ச் சத்து இருக்கு. கீரை இல்லாததால், இதில் இரும்புச் சத்து இல்லவே இல்லை. கூடவே, ஆனியன், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி கொண்டுவந்திருந்தால் உணவில் ஒரு நிறைவு இருக்கும். தக்காளி சாதத்தில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கண்ணுக்கு ரொம்பவே நல்லது. தொட்டுக்க வெந்தயக் கீரை சேர்த்த உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டும் இரும்புச் சத்தும் கிடைக்குது. ஆனா, இதில் புரதம் கொஞ்சம்கூட இல்லை. இதோட கொஞ்சம் பருப்புக் கூட்டு, தயிர் சேர்த்துக்கிட்டா, மதிய நேரத்துக்கு ஃப்ரெஷ்ஷா இருக்கும். நல்ல எனர்ஜியும் கிடைக்கும். எலுமிச்சை சாதம்னா வைட்டமின் சி-யும் கார்போஹைட்ரேட்டும் கொஞ்சம் கிடைச்சிடும். ஓரளவு எண்ணெய் சேர்ப்பதால் கொழுப்பும் இருக்கும்.
பொதுவா, கலந்த சாதமாகக் கொண்டுவரும்போது, தொட்டுக்க வெறும் பொரியல் மட்டுமே போதாது. பருப்பு, கீரை, பச்சடி, சாலட்னு கொஞ்சம் எடுத்துட்டு வாங்க'' - என்று கலந்த சாதம்பற்றி ஆலோசனைகளை அடுக்கினார் கிருஷ்ணமூர்த்தி.
கேரியரில் இருந்து சாதம், சாம்பார், பருப்பு உசிலி, கீரை, மோர், திராட்சை பழங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து 'மாயாபஜார்’ ஸ்டைலில் தட்டில் பரப்பிக்கொண்டு இருந்தார் ராஜேந்திரன். அவரிடம் வந்த கிருஷ்ணமூர்த்தி,
''சூப்பர் சார்... இதுதான் ஐடியல் ஃபுட். சாதம், சாம்பார், கீரை, கூட்டு, அப்பளம், மோர்னு எல்லாமே இருக்கே... கலோரி, இரும்பு, நார்ச் சத்தும் கிடைச்சிடுது. சாம்பார் சேர்க்கிறதால் புரதமும் கிடைக்குது. சுமார் 500 கிலோ கலோரி கிடைச்சிடும். இப்படித்தான் சாப்பிடணும். ஆனால், மதியம் சாப்பாடு சாப்பிட்டதும் பழம் சாப்பிடாதீங்க... பழங்களை மதியம் 4 மணிக்குச் சாப்பிடுறதுதான் நல்லது'' என்று டிப்ஸும் கொடுத்தார்.
''சாப்பிடறப்ப அடிக்கடி தண்ணி குடிக்கறதும் ரொம்பவே தப்பு. வயிற்றில் அமிலம் சுரக்கிறதே, உணவை ஈசியா உள்ளே தள்ளத்தான். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு நிறையத் தண்ணி குடிக்கலாம். அப்பதான் சத்துக்களை உடம்பினால் கிரகிக்க முடியும். உணவும் நல்லா ஜீரணமாகும்'' என்று கிருஷ்ணமுர்த்தி கூற, வங்கி ஊழியர்கள் அத்தனை பேரும் கோரஸாக கிருஷ்ணமூர்த்திக்கு தேங்க்ஸ் சொன்னார்கள்.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
Useful info Yuvan!!!Thanks for sharing here
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.