உங்க டீ யில பால் இருக்கா?

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
நீங்க குடிக்கறதெல்லாம் டீயே கிடையாது. அது வெறும் சர்க்கரை தண்ணீர். உண்மையான டீயில் பாலோ சக்கரையோ சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால் அதோட ஒரிஜினல் குவாலிட்டியே போயிரும்” என்று சொல்கிறது கோவையில் இயங்கிவரும் ஒரு கேட்ரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனம்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் அந்நிறுவனம் 'கேடீ' திருவிழா, அதாவது ‘கேக் மற்றும் டீ’ திருவிழாவினை நடத்தியது.

ஹைபிஸ்கஸ் கிவி, மாஸ்கோ, ஹரி சாய், கிளாஸிக் இங்கிஷ்லேஃப், இயர்ல் க்ரே , பேரடைஸ் இலேண்ட்- என்னடா இதெல்லாம்-னு யோசிக்கறீங்களா? தினமும் காலை மாலை –னு விரும்பி குடிக்கிற டீ-யோட வகைகள். இது மாதிரி, டீ-ல கிட்டத்தட்ட 45 வெரைட்டீஸ் வெச்சு ,”டீ-ல இவ்ளோ டைப்ஸ் இருக்கும்போது , ஏன் ஒரே டீ குடிச்சிட்டு இருக்கீங்க?, வந்து ஒரு கை பாருங்க”,னு கண்காட்சி நடத்துறாங்க ஏ.கே.ஜி கல்லூரியின் மாணவர்கள்.

உலகத்திலேயே டீ தயாரிப்புல இந்தியாதான் இரண்டாவது இடம். ஆனா நமக்கு இஞ்சி டீ, லெமன் டீ , பிளாக் டீ , க்ரீன் டீ ,இத தவிற வேற தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா உலகத்துல கிட்டத்தட்ட 45 வெரைட்டி டீ இருக்கு. ஒயிட் டீ, மில்லீங் கிரின் டீ ,ஓலாங் டீ, ஃபளவர் டீ, ப்ளூமிங் டீ-ன்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு டேஸ்ட். ஒவ்வொரு ட்ரெடிஷன்.
இன்னொரு முக்கியமான விஷயம். இங்கு வழங்கப்பட்ட எந்த தேநீர் வகைகளிலும் சக்கரையோ, பாலோ கலக்கல. சர்க்கரைக்கூட நாம வேணும்னா கலந்துக்கலாம். ஆனா பாலுக்கு ஸ்ட்ரிக்ட்லி நோ. ஒரு முறை இந்த வகை தேநீர்களுக்கு நாக்கு பழக்கப்பட்டுவிட்டால், அப்புறம் இந்த டீயை விடமாட்டீங்கனு சர்டிஃபிகேட் வேற குடுக்குறாங்க.
தேநீர்வகை மட்டும்தானா, கேக் எங்கப்பா-னு கேக்குறீங்களா?, இருக்கவே இருக்கு தாஜ்மஹால், நாடாளுமன்றம், ஈஃபில் டவர், இன்னும் பல பில்டிங்ஸ். அட நிஜமாதாங்க, கேக்கினாலேயே இந்த பில்டிங் எல்லாம் செஞ்சிருக்காங்க அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.

சின்ன குழந்தைகள் முதல் பெரியவங்க வரை கண்காட்சியை ரசிச்சி பாத்தாங்க. பார்க்க மட்டும்தானா? சாப்பிடறதுக்கு? அதுக்கும் இருக்கு, விதவிதமான கேக் வெரைட்டீஸ் விற்பனைக்கு வெச்சிருக்காங்க. ரசிக்கலாம்...ருசிக்கலாம்.

- பா.நரேஷ்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.