உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? – &amp

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? – உடனடி கவனம் தேவை!


உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? – உடனடி கவனம் தேவை! ஆமாங்க உங்க
மணிக் கட் டில் தோன்றும் இந்த வகையான நோயை, மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம் என்று குறிப்பிடு கிறோம். அதை ப்பற்றி விரிவாக பார்ப்போம்
மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்-GANGLION

மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப் படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது. (போ யரிக் இதனை An encysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ (on top of wrist) , கீழ்ப்புறத்திலோ , விரல்கள் முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாத ங்களிலோ உருவாகக்கூடும். இது நோயின் விளைவா க தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப் பை (cyst) இத னுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவ தற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில் லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? –

இந்த மணிக்கட்டு வீக்கம்பெரியளவில் காணப்பட்டா ல் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகை யிலும்விகாரமாகவும் தெரியும்; தோல் பரப்பின் அடி யில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொ ண்டேயிருக்கும். சிலருக்கு இவ்வலிமணிக்கட்டுப் பகு தியில் (Localised) மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப்பரவி வேத னை தரும்
ஆங்கில மருத்துவத்தில்இவ்வீக்கத்திலுள்ள திரவச் சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்றஅறுவைச் சிகிச்சை (Gangilonectomy)வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப் பினும்இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமியோபதிமருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யேக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்றமருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசி யோ காயப்படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics)இல்லாமல், உடம்பில் தழும்புஏற்படுத்தா மல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம்பெற முடிகிறது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? –

மணிக்கட்டு நரம்பணுமுடிச்சு வீக்கத்திற்கும் பயன்ப டும் முக்கிய முன்று மருந்துகள் 1.ரூடா (Ruta) 2.பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonicAcid) 3.சிலிகா (Sililca). வீக்கத்துடன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போ து ரூடா உயர்வீரியம்அற்புதமான பலன் தருகிறது. இ ருப்பினும் ரூடா 30 மற்றும் 200C வீரியத்திலேயே சிகிச்சையைத் துவங்கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால்உயர்வீரியத்திற் கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப் பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்சியப் படிவங்கள் காணப்பட்டால்கல்கேரியா கார்ப் மருந்தும் தேவைப் படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM வீரியத்தில் காலைநேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம்.. மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்புமுடிச்சு வீக்கத் தைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன்சுட்டிக்காட்டுகிறார்.
Ganglion வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியா கார்ப் போன்ற மரு ந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்ப ரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந் துகளும் உதவுகின்றன.

=> மருத்துவர் வெங்கடாசலம்
=> மருத்துவர் ஆவுடேஸ்வரி

 
Joined
Feb 24, 2014
Messages
70
Likes
70
Location
Chennai
#4
Re: உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? –

hi,can u pls send the contact details of the doctor u have mentioned in ur message to my pm?Raji
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? –

hi,can u pls send the contact details of the doctor u have mentioned in ur message to my pm?Raji
contact details r not given
if i get ,i will send to ur pm
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.