உடலில் உள்ள கொழுப்பை உருக்கி வெளியேற்ற ….

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#1
உடலில் உள்ள கொழுப்பை உருக்கி வெளியேற்ற ….


பயறுகளும் தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ அமிலங்களும், சல்பர் குறைவாகவும் லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்கள் லைசின் குறைவாகக் கொண்டவை. பயறு வகைகளில் அதிகமாக விட்டமின் பி காம்ப்ளக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்மின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேக வைத்த பாசிப்பயிறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேக வைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்
சின்னம்மை, பெரியம்மை, தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களைக் குணமாக்குவதில் பாசிப்பயிறு சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றது.
நினைவுத்திறன் கூடும்
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் பால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க்கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பாசிப் பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.
முளைக்கட்டிய தானியம்
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துகளும், தியாமின், நியாசின் போன்ற விட்டமின்களும் இவற்றில் அதிகம் காணப்படுகிறது. 100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மி.கி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5 மி.கி, தயாமின், 0.3 மி.கி. ரிபோபிளேவின், 20 மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரிசக்தியும் உள்ளன. பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் & சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் அதிகமாக வைட்டமின்கள் காணப்படுகின்றன. ஜீரண குறைவு மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் பயறு வகைகளை குறைத்து உட்கொள்வது அவசியம்.
இரத்த அழுத்தம் குறைய
இரத்த அழுத்த நோயால் அல்லல்படுவோர் நாள்தோறும் அரைக்கப்பட்ட 15 கிராம் பாசிப்பயறு மாவை வெந்நீரில் கரைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 மாதங்கள் குடித்து வந்தால் லேசான இரத்த அழுத்த நோயாளியின் நோய் நிலைமை குறையும். அதிக இரத்த அழுத்த நோயினால் அல்லல்படுவோர் தொடர்ச்சியாக இன்னொரு 3 மாதங்களுக்கு பாசிப்பயறு மாவை பச்சையாக வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடம்புக்கு பக்க விளைவு எதுவும் வராது. தினந்தோறும் தொடர்ச்சியாக குடிக்க வேண்டும். ஒரு நாள் கூட நிறுத்தக் கூடாது. இரத்த அழுத்த நோய்க்குள்ளானவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாமாஈ உங்கள் விருப்பப்படி செயல்படலாம். உங்கள் உடம்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கலாம்.
மேலும், முளைகட்டிய பயறுவகைகளில் அதிகமாக வைட்டமின்கள் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் ஐசோபிளோவின் பையோ கேனின் ஏ & எனும் ஹார்மோன் அதிகமாக காணப்படுகின்றது. இந்த ஹார்மோன் ஒரு சிறப்பான குணத்தைக் கொண்டது. அதனால், இந்த ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. இரத்த நாளங்களில் உட்புறம் படிந்துள்ள கொழுப்பை உருக்கி வெளியேறும். மேலும், கொழுப்பு இரத்த நாளங்களில் படியாத வகையில் உதவிடும்.
/ஆயுர்வேதம்/ 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.