உடல் அதிக சூடாவது ஏன்? - Reason for Body Heat

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல் அதிக சூடாவது ஏன்?

உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அநேகரால் சொல்லப்படும் ஒரு பாதிப்பு. இதற்கான பொதுவான காரணங்கள்...

* இறுக்கமான ஆடை

* ஜுரம்

* தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல்

* கடும் உழைப்பு

* மருத்துவ காரணங்கள்

* சில மருந்துகள்

* நரம்புக் கோளாறுகள்


அதிக வெய்யில் உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்

* இளநீர் குடிக்க வேண்டும்.

* கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

* வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.

* ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.

* காய்கறி உணவு சிறந்தது.

* ஒரு பேசினில் குழாய் நீர் பிடித்து பாதங்களை அதில் சிறிதுநேரம் அமிழ்த்தி வைக்கலாம்.

* வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.

* சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.

* ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.

* பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்.

* ஏலக்காய் டீ, பால் சிறந்தது.

* மோர் சூட்டை நன்கு தணிக்கும்.

* 92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி' சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.

* கிர்ணி பழம் வெய்யில் காலத்தில் உண்ண வேண்டிய ஒன்று.

* வெள்ளரிக்காயினை அடிக்கடி தினமும் சாப்பிடுங்கள் அல்லது தோல் சீவி ஜுஸ் செய்து குடியுங்கள்.

* புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.

* முள்ளங்கி சூட்டை தணிக்கும். எதிர்ப்பு சக்தியினைத் தரும். வைட்டமின் `சி' சத்து நிறைந்தது. வீக்கங்கள் குறைக்கவல்லது.

* எள் உண்பதும், நல்லெண்ணை உடலில் தேய்ப்பதும் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

* சோம்பு ஊற வைத்த நீர் உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும்.

* குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.

* பாதாம் பிஸின் சிறிது, இரவில் நீரில் ஊற வைத்து காலை பாலுடன் கலந்து பருக சூடு தணியும்.

* நனைத்த பருத்தி ஆடையினை உடலில் 15-20 நிமிடம் சுற்றி இருக்க உடலில் சூடு தணியும்.

* சாதாரண நீர் குடிப்பது உடலை குளிரச் செய்யும்.

* துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.

* தனியா, சீரகம், சோம்பு இவற்றினை பொடித்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உஷ்ணம் குறையும்.

* தேங்காய் எண்ணை உடலில் தேய்த்துக் குளிக்க சூடு தணியும்.

* கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.

* மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.

* தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.

* தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.

* ஆப்பிள் உடல் சூடு தணிய உதவும்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.