உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக&

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
தற்போது நான் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன, நான் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நான் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும். பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும்.

அதிலும் அன்றாடம் நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும். தொடர்ச்சியாக நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும். தொடர்ச்சியாக தினமும நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.

தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நான் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மண்பாண்டங்களில் உணவு செய்து சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

:typing:
Malaimalar
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#2
Re: உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டி&#29

Thanks for sharing the useful info.
 

roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#3
Re: உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டி&#29

useful info....thank u lekha
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#5
Re: உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டி&#29

Pleasure is mine :welcome:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.