உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும்?
மனிதனின் ஓய்வுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உறக்கம். மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும்.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றியும், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம், இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதி. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி, இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால், இன்றைய நிலை வேறு, இரவில் வேலை பார்க்கும் பலரும், கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். பகலில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன. இரவில் உறங்காதவர்களுக்கு புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, பயம், படபடப்பு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் வரும் என கூறியுள்ளனர். எவ்வாறு உறங்க வேண்டும் என்பது குறித்தும் சித்தர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது பற்றிய தகவல்களும் உள்ளன. இவற்றை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி, தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள்,
நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப்படுத்தும் தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே, சுவாசம் வெளியே செல்வதால் ஆயுள் வளரும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து, பித்தநீரை அதிகரிக்கச்செய்து, உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால், இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால், பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்வதால், உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும் என்றெல்லாம், சித்தர் பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் எப்படி படுத்து தூங்குகிறீர்கள்...?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.