உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?


மிளகு, இஞ்சி, பட்டை, சீரகம் போன்ற செரிமானத்தை மேம்படுத்தி, பசியைத் தூண்டும் மசாலா சுவையூட்டிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெரிய உணவுத்தட்டைத் தேர்ந்தெடுக்கவும். உணவைச் சாப்பிடும் முன், தங்களுக்குத் தேவையானதை சீராக அந்தத் தட்டில் அடுக்கிவைத்துச் சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க கலர்ஃபுல் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிறத்தில் கீரை, சிவப்பு நிறத்தில் சிவப்பரிசி, மஞ்சள் நிறத்தில் பருப்பு, நெய், பிரவுன் நிறத்தில் ரசம், மஞ்சளும் கறுப்பும் கலந்த வேகவைத்த மிளகு, உருளைக்கிழங்கு எனப் பல நிறங்களில் சாப்பிடுவதால், சாப்பிடும் எண்ணம் தூண்டப்பெற்று, நன்கு சாப்பிட முடியும்.

வாசனையான உணவுகளைச் சாப்பிடலாம். கறிக் குழம்பு, தேங்காய்ப் பால் ஊற்றிய புலாவ், மிளகு சேர்த்த வறுவல், இஞ்சி சேர்த்த தயிர் சாதம் போன்ற மணமூட்டிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.

ஒரே உணவைச் சாப்பிடுவதால் சலிப்பு ஏற்படலாம். அதனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சாப்பிடவும்.

சாப்பிட்ட பிறகு, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனுடன், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுப் பழச்சாறுகளும் பருகலாம்.

உருளை, கருணை போன்ற வேர்க்கிழங்குகளைத் தினமும் ஒரு கப் அளவுக்குச் சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளை வாரம் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.
உலர் பழங்களான அத்தி, காய்ந்த திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பேரீச்சை ஆகியவற்றைக் கலந்து, தினமும் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம்.

சோயா பீன்ஸ், ராஜ்மா, கொண்டைக்கடலை, நிலக்கடலை ஆகியவற்றை மாலை நேரத்தில் ஒரு கப் சாப்பிடலாம்.

போதுமான தூக்கம் இல்லாவிட்டால், பசியும் இருக்காது. சாப்பாட்டை உண்ணும் அளவு குறைந்துபோகும் எனவே, தினசரி நிறைவான தூக்கம் அவசியம்.

 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
thank you lakshmi, noted paaa...... i must increase my weight... (en vaazhkkai latchiyam... ha ha ha....)Hi 5
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.