உடல் குண்டான காரணத்தால் 10 கோடி தம்பதிகளு&#296

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
உடல் குண்டான காரணத்தால் 10 கோடி தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை

இந்தியாவில் 10 கோடி தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்கு, உடல்பருமனே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நமது சமூகத்தில் அம்மாவான பெண்களுக்கு தரப்படும் மரியாதை குழந்தை இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், மணமாகி ஓரிரண்டு ஆண்டுக்குள் குழந்தை பிறக்காத பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது.

சிலர் இந்த காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டு, இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி கோயில் கோயிலாக செல்வதையும் அனைத்து ஊர்களிலும் காண முடிகிறது. மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடமும் சிகிச்சையும் ஆலோசனையும் பெறுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் 10 கோடி தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்னாள் இயக்குனர் சாந்தி தினகரன் கூறியதாவது:

நாட்டில் குழந்தையின்மை பிரச்னை பரவலாக காணப்படுகிறது. இதற்கு உடல் பருமன்தான் முக்கியமான காரணம். ஃபாஸ்ட்புட், பீசா, பர்கர் போன்ற செயற்கை உணவு முறைகளை உட்கொள்கின்றனர். வெளிநாட்டு கலாசாரத்திற்கு மக்கள் மாறிவருகின்றனர். உணவு கட்டுப்பாடு இல்லை. உடற்பயிற்சி செய்வது இல்லை. இதனால், உடல் பருமன் அதிகரிக்கிறது. அதனால் பெண்களுக்கு மாதம் தோறும் கருமுட்டை வெளியேறுவது தடைபடுகிறது. இதன் காரணமாக பெண்கள் கருத்தரிக்க முடியவில்லை.

ஆனால் குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களும் காரணமாக இருக்கின்றனர். உடல்பருமனால் ஆண்களின் விந்தணுக்களில் உயிரணு குறைகிறது. இதே போல், அதிக அளவில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும், குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.

நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காலம் தாழ்த்தி (30 வயதிற்கு மேல்) திருமணம் செய்வது, கொஞ்ச நாள் ஜாலியாக இருக்கலாம் என்ற காரணத்தால் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, கரு கலைப்பது போன்றவைகளும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைக்கு

ஆண்கள் 25 வயதிலும், பெண்கள் 21 வயதிலும் முடிந்த அளவு திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பு வரை டாக்டரிடம் தொடர்ந்து ஆலோசனை பெற வேண்டும். உணவு முறைகளில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Dinakaran
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
Re: உடல் குண்டான காரணத்தால் 10 கோடி தம்பதிகளு&

informative post for the present generation....

now a days some couples avoiding pregnancy early... they are taking tablets too...

simple they are postponing their pregnancy ... this is the fashion for present generation...

you have posted a good article ...

thanks for sharing...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
Re: உடல் குண்டான காரணத்தால் 10 கோடி தம்பதிகளு&

romba romba therinchukka vendiya vishayam ganga... ippothaiya generation kandippa yosikka vendiya vishayam...
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#4
Re: உடல் குண்டான காரணத்தால் 10 கோடி தம்பதிகளு&

Thank you Parasakthi n Latha chechi....It is 100% true these days....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.