உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்&#

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை அதிகம் பாதிப்பது உடல் பருமன். உடல் உழைப்பு குறைவினாலும், மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவிலும் உடல் பருமன் நோய் பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நீரிழிவு, இதயநோய்க்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் ஊட்டச் சத்துணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


நேரம் தவறிய உணவுமுறை


ஆண்களுக்கு உடல் பருமன் ஏற்பட முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, நேரந்தவறிய உணவுப் பழக்கம் தவிர, கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. அதேபோல் பெண்களுக்கும் உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான ஊட்டச் சத்துணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.


எனவே உடல் பருமனால் நீரிழிவு, இதயநோய்கள் போன்றவைகளுக்கும் ஆளாகி எண்ணற்ற சிக்கல்களை சந்திக்கின்றனர். எனவே உடல் பருமனை குறைக்க எளிய உணவு முறையை அறிவுறுத்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.


பூண்டு வெங்காயம்


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைக்கும். இதனால் உடல் கட்டமைப்பு பெருவதோடு புத்துணர்ச்சி ஏற்படும்.


பப்பாளிக்காய்


உடல் குண்டானவர்கள் பப்பாளிக்காயைச் சமைத்து சாப்பிடலாம். இதனால் உடல் மெலியும். சுரைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்


மந்தாரை வேர் கசாயம்


அமுக்கிராவேருடன், பெருஞ்சீரகம் சேர்த்து பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் பருமன் குறையும்.


வாழைத்தண்டு சாறு


சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த*ண்*ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் உடம்பில் ஊளைச்சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்
.


இது எல்லாவற்றையும் விட தினமும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரைமணி நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
 
Last edited by a moderator:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்&a

really thanks for this useful healthy tips...
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Re: உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்&a

thanx for the useful info saranya
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்&a

thanks for ur info,aanal ellorum seeraga thaanithan kudika vendumnu solluvaanga, neenga sombu solliurkeenga,vithiyaasama iruku.
 
Joined
Aug 7, 2015
Messages
1
Likes
0
Location
Chennai
#5
Re: உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்&a

Very useful comment
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.