உடல் வறட்சியாக இருந்தால், பிரசவம் சிக்கல

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்தானது அதிகம் இருந்து, பிரசவமானது எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் அந்த பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.மேலும் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு டம்ளர் பழ ஜூஸ் ஆவது குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் சக்தியானது வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, பிரசவத்தின் போது உடல் வறட்சியாக இருந்தால் என்னென்ன சிரமங்கள் வரும் என்று மருத்துவர்கள் சொல்வதைப் பார்ப்போமா!!!

கைகால் ஊனம் : பிரசவத்தின் போது உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இருக்க வேண்டிய நீர்மத்தன்மையுள்ள பொருளை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும் கருப்பையில் இருக்கும் ஆம்னியான் நீர் குறைவாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையானது கருப்பையில் இருக்க முடியாமல், விரைவில் வெளியே வந்துவிடும். இந்த நிலையிலேயே குறைபிரசவம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கு கைகால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

மூளைக்குறைபாடு : சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது உடலிலேயே தங்கிவிடும். இதற்கு காரணம் நீர்ச்சத்து உடலில் இல்லாததே. ஆகவே உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைக்க அதிகமாக தண்ணீரானது குடிக்க வேண்டும். மேலும் அவ்வாறு வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வருவது போல் இருக்கும், அப்போது அந்த காய்ச்சலானது குழந்தைக்கும் வரும். இந்த நிலை முடிவில் குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

மற்ற பக்கவிளைவுகள் : உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டுபண்ணும். அதுமட்டுமல்லாமல் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துதை விட குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும். மேலும் தாயின் உடலில் இரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும். சொல்லப்போனால், தாய், சேய் இருவருக்குமே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஆகவே 'ஒரு தையல் ஒன்பது கிளிசல்களை தடுக்கும்' என்னும் பழமொழிக்கேற்ப, முதலிலேயே உடலை சரியாக முறையாக பராமரித்து, பாதுகாத்து வந்தால் தாய் சேய் ஆகிய இரு உயிருமே நலமோடு ஆரோக்கியமாக இருக்கலாம்.

எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க!!! குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.