உணவில் இருக்கு ஆரோக்கியம்!!!

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#1
சித்த மருத்துவ அடிப்படையில் ஒருவரின் உடல் நலத்தில் வாதம்-பித்தம்-கபம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாதம்-பித்தம்-கபம் ஆகியவற்றை உடலில் மிகாமலும் குறையாமலும் சீராக வைத்திருக்க உதவுவது உணவுகளே ஆகும்.

இந்த நிலையில் வாதம்}பித்தம்-கபத்தின் மிகு-குறை குணங்களைச் சீர்படுத்தும் உணவுகள் குறித்துத் தெரிந்து கொள்வது உடல் நலன் காக்க உதவும்.

வாதம் மிகு குணம்: 1. உடல் இளைத்துக் கருத்தல்; 2. சூடான உணவுப் பொருள்களின் மீது விருப்பம்; 3. உடல் நடுக்கம்; 4. வயிறு உப்பல்; 5. தூக்கம் கெடுதல்; 6. வாய் பிதற்றல், தலை சுற்றல்.

வாதம் குறை குணம்: 1. தாழ்ந்த குரல்; 2. அறிவு மங்கல்; 3. மூர்ச்சை அடைதல்; 4. தொழிலில் அதிக சோர்வு.

வாத நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. தேன்; 2. மிளகு; 3. நல்லெண்ணெய்; 4. பெருங்காயம்; 5. விளக்கெண்ணெய்; 6. உளுந்து.

பித்தம் மிகு குணம்: 1. கண்-தோல்-சிறுநீர்-மலம் ஆகியவை மஞ்சள் நிறம் அடைதல்; 2. அதிக பசி மற்றும் அதிக தாகம்; 3. உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுதல்; 4. குறைந்த தூக்கம்.

பித்தம் குறை குணம்: 1. குளிர்ச்சி; 2. நிறக் குறைவு.

பித்த நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. வாழை இலையில் உணவு சாப்பிடுதல்; 2. நாவல் பழம்; 3. தென்னை இளம்பூ 4. வெள்ளை பூசணிக்காய்.

கபம் மிகு குணம்: 1. மந்தமான செரிமானம்; 2. வாயில் நீர் ஊறுதல்; 3. ஊக்கம் குறைதல்; 4. உடல் கனமாக தோன்றுதல்; 5. உடல் வெண்ணிறத்தையும் குளிர்ச்சியையும் அடைதல்; 6. உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் தளர்வடைதல்; 7. அதிக தூக்கம், இருமல்.

கபம் குறை குணம்: 1. தலை சுற்றல்; 2. மூட்டுகள் தளர்ச்சி அடைதல்; 3. மயிர்க்கால்களில் அதிக வியர்வை; 4. இதயத்தில் படபடப்பு ஒலி.

கப நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. முள்ளங்கி; 2. தூதுவளை; 3. விளாம்பழம்; 4. ஓமம்; 5. தேன்; 6. சர்க்கரை.

நன்றி: தினமணி
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.