உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

மனித சரீரத்தை சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். இதில், நீங்கள் பித்த உடம்புக்காரராக இருக்கலாம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மட்டுமே உடல் சூடு தணிந்துவிடாது. அது ஒரு வழி மட்டுமே.

பொதுவாக உடல் சூட்டைத் தணிக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை. புளிப்பு, கார்ப்புச் சுவைகளைத் தவிர்த்துவிட்டு இனிப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடல்சூடு தணியும்.

சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்க்க வேண்டும்.

தினந்தோறும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும்.


எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அரக்கு தைலம், சந்தனாதி தைலம் போன்ற சூடு தணிக்கும் தைலங்களைப் பயன்படுத்தினால், அதிக நன்மை கிடைக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உச்சந்தலை, கட்டை விரல், தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும்.


கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெள்ளை நிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் நல்லது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும&#30

Very good tips! thank you!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.