உணவுக்குழாய் புற்றுநோய் - Esophageal Cancer

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#1
உணவுக்குழாய் புற்றுநோய்..!
வளர்ந்த நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும், புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின் றனர். பொதுவாக இந்தியாவில் 1 லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.


உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாய் என்பது (Esophagu) தொண்டை முதல் வயிற்றின் மேல்பகுதிவரை (cardia) அமைந்துள்ள ஒரு குழாய். இக்குழாயைத் தாக்கும் புற்றுநோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உணவுக்குழாயின் அடிப்பகுதி, ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ போல் செயல்படுகிறது.


வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்). இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் சண்டையிடுகின்றன.
அதேநேரத்தில், இந்தக் காரத்துக்கும் அமிலத்துக்கும் நடைபெறும் சண்டை விரைவில் தீராது. இந்தச் சண்டையில் அமிலம் ஜெயித்தால், உணவுக்குழாயில், குறிப்பாக `லைன் ஆஃப் கன்ட்ரோலில்’ புண் ஏற்படும். அந்தப் புண்கள், அங்கிருக்கும் செல்க ளால் தானாக `சரி’ செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்கள் புத்துயிர் பெறும் வகையில் இயற்கை படைத்திருக்கிறது.


ஒருவேளை அந்தப் புண்கள், ஆறாமல் இருந்துவிட்டால் என்ன ஆகும்? இங்கு பயப்படாதீர்கள் என்று சொல்லமாட்டேன். பயந்துதான் ஆக வேண்டும். அதாவது, ஆறாத புண்களால், புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. `உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்று நோயும் ஒன்று. பொதுவாகப் புற்று நோயால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறும் அதே வேளையில் உணவுக்குழாய் புற்றுநோய்கள், பொதுவாக ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


1. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma)
2. அடினோ கார்சினோமா (adenocarcinoma)

உணவுக் குழாயின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்று நோய் வரலாம். இந்த புற்றுநோய்கள் பெண்களை விட ஆண் களுக்கு அதிகம் வரும்.


இது வருவதற்கான காரணங்கள் சிகரெட், மது பானங் கள் இவை முக்கிய காரணங்கள். மிகச்சூடாக உணவு, பானங்களை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது.


வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்து (vitamin A) குறைபாட்டால் வருகிறது.அயர்ன் எனப்படும் இரும்புச்சத்து குறைபாட்டால் வருகிறது

ரிபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் vitamin B விட்டமின் குறைபாட்டால் வருகிறது.


சரிவிகித உணவு (balanced diet) இல்லாமை யால் வருகிறது. நெஞ்சு எரிச்சல் போன்ற நோய்களுக்கு பல ஆண்டு களாக சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் அதாவது தொடர் சிகிச்சையினாலும் வருகிறது. தொடர்ந்து அகாலாசியா என்ற நிலையில் இருக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அகாலாசியா என்பது நீண்ட நாட்களாக வயிறு தொடர்பான, உணவுக்குழாய், ஜீரண உறுப்பு தொடர்பான எந்த நோயையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (ஜீ53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.


அறிகுறிகள்


ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் காண இயலாமல் இருக்கலாம். முற்றிய நிலையில் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு வலி, அனிமியா, டிஸ்பெப்ஸியா, தீராத முதுகு வலி போன்றவை இருக்கலாம். தொண்டையில் முழுங்க முடியாமல் வலி இருக்கலாம். எடை குறையலாம். இன்னும் சிலருக்கு இப்படிப் பட்ட அறிகுறிகள் எதுவும் தோன்றாமலே கூட இருக்கலாம்.

உறுதிப் படுத்துதல்


இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சாதாரண எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. இக்காலத்திலும்.
எண்டோஸ்கோபி மூலம் டிஸ்யூ எடுத்து பயாப்ஸி செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ் கோபி பிரசித்தி பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.