உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க தர்பைப்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
#1
உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க தர்பைப் புல்

உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்குத் தர்பைப் புல் பயன்படுத்தலாம் என, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் முனைவர் பி. மீரா தெரிவித்திருப்பதாவது:

நானோ தொழில்நுட்பம் பல அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கி வருகிறது. நானோ தொழில்நுட்ப ஆய்வு விண்கலன் போன்ற உயர்ந்த தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமே புரட்சி செய்துள்ளது என எண்ணுகிறோம். ஆனால், இந்திய பாரம்பரிய வழக்கங்களில் நானோ தொழில்நுட்பவியலின் பங்கு தொன்று தொட்டு வந்துள்ளது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.

கோயில்களிலும், இல்லத்திலும் உணவுப் பதார்த்தங்கள் பிரசாதமாக அளிக்கப்படும்போது தர்பைப் புல் கொண்டு புனிதமாக்கப்படுகின்றன என்பது நம்பிக்கை. மேலும், கிரகண காலங்களில் நொதிக்கும் தன்மையுடைய உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்காக அவற்றில் தர்பைப் புல்லைப் போடுவது வழக்கம். கிரகணம் முடிந்தவுடன் அந்தப் புல்லை நீக்கிவிட்ட பின்னர் அந்த உணவு உண்பதற்குத் தகுந்ததாக இருக்கிறது.

தர்பைப் புல்லின் தன்மையைக் கண்டறிய சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டு, பல தகவல்களை பயோ நானோ சயின்ஸ் என்ற அமெரிக்க ஆய்விதழில் வெளியிட்டுள்ளது.

தர்பையின் செயல்பாட்டை புரிந்து கொள்ள கெட்டிப் பசுந்தயிர் எவ்வாறு நொதிக்காமல் இருக்கிறது என்பது விளக்கம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அருகம்புல், மூங்கில் முதலான மேலும் ஐந்து வகைப் புல்கள், அவற்றின் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை, நீர் ஒட்டாத இயல்பு ஆகிய தன்மைகளின் அடிப்படையில் முடிவுகளை ஒப்புநோக்கிப் பார்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அணுக்கூறு நுண்நோக்கியின் மூலம் உற்று நோக்கும்போது விளக்கத்தக்க நானோ நுட்பக் கூறுகள் படிநிலை இயல்புகளாகத் தர்பைப் புல்லின் மேற்பரப்பில் காணப்பட்டன. இந்த வகையான இயல்புகள் மற்ற புல் வகைகளில் காணப்படவில்லை.

மேலும், பசுந்தயிரில் உள்ள நொதித்தலுக்குக் காரணமாக இருக்கும் நுண் கிருமிகள் தர்பைப் புல்லின் மேற்பரப்பில் இருக்கும் நானோ, நுண்கூறுகளில் ஈர்க்கப்படுவது தெரியவந்தது. கிரகண காலங்களில் பூமிக்கு வரும் ஊதா, புற ஊதா கதிர் வீச்சுகள் குறைந்து விடுகின்றன.

இந்தக் கதிர் வீச்சுகளுக்குத்தான் இயற்கையான நுண்ணுயிர் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது.

எனவே, முற்காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத நிலையில் நொதிக்கும் தன்மையுடைய உணவுப் பொருள்களான தயிர், மாவு போன்றவற்றை கிரகண காலத்தில் கெடாமல் இருப்பதற்குத் தர்பைப் புல் போடப்பட்டது. தர்பையை சேர்ப்பதால் உணவுப் பொருள்களின் சுவையோ, நிறமோ மாறுவதில்லை.

உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க வேதிப்பொருள்களை உபயோகிப்பதற்கு பதிலாக தர்பையை உபயோகிக்கலாம். மேலும், தர்பையின் படிநிலை நானோ நுட்பக் கூறுகளை ஒத்த செயற்கை மேற்பரப்புகள் மருத்துவப் பயன்பாட்டில் நுண்கிருமிகளால் வரும் தொற்று நோய்களைத் தடுக்க உதவும் என்றார்.

source dinamani
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க தர்பைப&#30

Arumaiyaana thagaval Viji.

Tharpaip pullil ivlo visayam adangi irukku parunga.
Thanks for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.