உன்னையே நீ அறிவாய்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உன்னையே நீ அறிவாய்!

லெஃப்ட்டா? ரைட்டா?

மூளையில் வலம், இடம் என இரண்டு பக்கங்கள் உண்டு. எந்தப் பக்க மூளை ஆதிக்கம் நிறைந்ததோ, அதற்கேற்ப நமது செயல்பாடுகளிலும் மாற்றங்கள் இருக்கும். நீங்கள் வலப்பக்க மூளையின் ஆதிக்கமுள்ளவரா, இடப்பக்க மூளையின் ஆதிக்கமுள்ளவரா? தெரிந்து கொள்ள ஒரு க்விஸ்...1. உங்கள் நண்பர்கள் பெரும்பாலும் உங்களைப் பற்றிச் சொல்வது...
a) அலுவலகத்தில் நீங்கள் மிகவும் பிரபலமானவர்.
b) பிறருடன் அதிகம் பழகாதவர்.

2. காலை அலுவலகம் செல்ல தயாராகும் நீங்கள், அன்று அணியும் உடையைத் தேர்ந்தெடுப்பது...
a) எது கைக்கு கிடைக்கிறதோ அதை அணிவீர்கள்.
b) முதல் நாள் இரவே தயாராக எடுத்து வைத்துவிடுவீர்கள்.

3. உங்கள் மேலதிகாரி ஒரே நேரத்தில் இரண்டு முக்கியமான வேலைகளை உங்களுக்கு கொடுக்கிறார்...
a) ஒரு வேலையை முடித்தபிறகுதான் அடுத்த வேலையை எடுத்துக் கொள்வீர்கள்.
b) ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் எடுத்து செய்வீர்கள்.

4. ஒரு வாரம் கடற்கரை சுற்றுலா செல்வதற்கான பரிசு உங்களுக்கு கிடைத்தால்...
a) பெற்றோரை உங்களுடன் அழைத்துச் செல்வீர்கள்
b) உங்கள் நண்பர்கள்/ காதலன்/ காதலி இவர்களில் ஒருவரை அழைத்துச் செல்வீர்கள்.

5. மிகவும் சோகமான சினிமாவை பார்க்கும் போது...
a) கொஞ்சம் அழுதுவிடுவீர்கள்.
b) பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள்...அல்லது உங்கள் உணர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.

6. பெற்றோர் /நண்பர்கள் அல்லது உங்கள் துணையுடன் ஒரு சம்பவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது...
a) சொந்த கற்பனைகளை அளந்துவிடுவீர்கள்.
b) நடந்ததை அப்படியே - உண்மையான தகவல்களை மட்டும் கூறுவீர்கள்.

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலும் உங்கள் பதில்கள் a ஆக இருந்தால் நீங்கள் இடது மூளை ஆதிக்கம் நிறைந்தவர். இடது மூளை ஆதிக்கம் உள்ள நீங்கள் முறையான வாழ்க்கையை கடைப்பிடிப்பீர்கள். மற்றவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை சொந்த வாழ்வில் சோதித்துப் பார்க்க முயல்வீர்கள். மிக எளிதாக சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். அதே வேளையில் பிரச்னைகளுக்கான தீர்வை அலசி ஆராய்ந்து எடுப்பீர்கள். ஒரு விஷயத்தை தர்க்கரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் கையாள்வதில் வல்லவர். உணர்வுகளுக்கு எளிதில் வளைந்து கொடுக்காதவர்!

உங்களுடைய பெரும்பாலான பதில்கள் b ஆக இருக்குமானால், நீங்கள் வலது மூளை ஆதிக்கம் நிறைந்தவர். ஒரு விஷயத்தைப்பற்றி யோசிப்பதையே கடினமாக நினைப்பீர்கள். மற்றவர்களுக்கு நல்லவராக தெரியும் நீங்கள் உண்மையில் ஒரு வன்முறையாளர். எப்போதும் கனவுலகில் மிதக்கும் நீங்கள் தெளிவற்ற சிந்தனைகளை உடையவர். நடைமுறைக்கு ஒத்துவராதவராகவும் தர்க்கவாதியாகவும் இருப்பீர்கள். ஓவியம், இசைக் கலைகளிலும் கற்பனைக் கதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவராக இருப்பீர்கள். சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரான நீங்கள் அனைவரையும் கவர்வீர்கள். மற்றவர்களின் வழிகாட்டுதலின்றி தன்னிச்சையாகச் செயல்பட்டு அதில் வெற்றியடைவீர்கள். உணர்வுகளுக்கு வளைந்து கொடுப்பவர்!
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.