உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்


மணவாளன் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்

த்தடம்... இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்... என்று இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்? விரிவாக விளக்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மணவாளன்.


ஒத்தடம் கொடுப்பது எப்படி?


ஹாட் வாட்டர் பேக்கில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம். ஹாட் வாட்டர் பேக் இல்லாதபட்சத்தில் ஏதாவது ஒரு துணியின் நுனிப்பகுதியைச் சுடு நீரில் லேசாக நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இல்லையென்றால் வாட்டர் கேனில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஐஸ் பேக்கில் தேவையான ஐஸ் க்யூப்களைப் போட்டு, ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் பேக் இல்லாதவர்கள், ஐஸ் க்யூப்களைத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதுதவிர உப்பைச் சூடுபடுத்தி துணியில் வைத்துக்கட்டி, உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். மணலை வறுத்து, துணியில் கட்டி மணல் ஒத்தடம் கொடுக்கலாம். வாதநாராயணன் இலை, நொச்சி இலை, மஞ்சணத்தி இலை ஆகிய மூலிகைகளைச் சூடுபடுத்தி மூலிகை ஒத்தடம் கொடுக்கலாம்.எப்போது வெந்நீர் ஒத்தடம்?

நீர்ச் சிகிச்சை முறையில் மிகவும் முக்கியமான ஒன்று வெந்நீர் ஒத்தடம். இந்த ஒத்தடம் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கை, கால்களில் வெந்நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம்பட்ட இடத்துக்கு ஒத்தடம் கொடுக்க நினைத்து, புதிய காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.

முதுகிலோ, கழுத்திலோ ஒத்தடம் கொடுக்கும்போது, முதலில் அந்த இடத்தில் ஓர் ஈரத்துணியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மீதுதான் ஹாட்பேக்கை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சருமத்தின்மீது கொடுக்கக் கூடாது. நேரடியாகக் கொடுத்தால், அந்த இடம் பொசுங்கி (Burn) புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

குறிப்பாக, சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், சூட்டை உணர முடியாதென்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்துமா, இரைப்பு (Wheezing) போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முதுகுத்தண்டின் மேற்பகுதியில், கழுத்துப் பகுதியில் ஒரு துணியை வைத்து அதன் மேல் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் மூச்சுக்குழல் விரிவடைந்து, சுவாசம் சீராகும்.

கழுத்துவலி, இடுப்புவலி, மூட்டுவலி, தசைவலி, நாள்பட்ட வீக்கம் மற்றும் நாள்பட்ட வலிகளுக்கு (Chronic pain) வெந்நீர் ஒத்தடம் மிகச்சிறந்த நிவாரணி. ஓர் இடத்தில் அடிபட்டால், உடனே சுடு நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது. காயம்பட்ட இடம் ஏற்கெனவே சூடாகவும் கடுமையான வீக்கத்துடனும் (Acute Inflammation) இருக்கும். அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால், சூடு அதிகமாகி ரத்தக்கசிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேறு சில ஒத்தடங்கள்!

மூட்டுவலிக்குக் கடுகை நன்றாக அரைத்து, பசைபோல் ஆக்கிப் பூசி வந்தால் சரியாகும். இதுவும் ஒத்தடத்தில் ஒரு வகையே. மூலிகையை நன்றாக வதக்கித் துணியில் வைத்தும் ஒத்தடம் கொடுக்கலாம். மணல் அதிகநேரம் சூட்டைத் தாக்குப்பிடிக்கும் என்பதால், மணலைச் சூடுபடுத்தியும் ஒத்தடம் கொடுக்கலாம்.

மேற்கண்ட அனைத்து ஒத்தடங்களிலும் முக்கியம் சூடுதான். வெப்பத்தின் காரணமாகத்தான் பல வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், நாம் கவனமாக இருக்கவேண்டிய இடமும் அதுவே. நிவாரணம் பெற இவ்வளவு வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்ற எந்த அளவுகோலும் (Standard temperature) இல்லை. ஆனால், ஒருவரால் எந்த அளவுக்குச் சூட்டைத் தாங்க முடியுமோ அந்த அளவுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். நிவாரணம் பெற அதுவே போதுமானது.

யார் யாருக்கு ஒத்தடம் கொடுக்கலாம்?


5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒத்தடம் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரையுடனே ஒத்தடம் கொடுக்கப்பட வேண்டும்.[HR][/HR]நன்மைகள்

* தசைகளைத் தளர்த்தும்.

* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

* நுண் ரத்த நாளங்களை மேம்படுத்தும்.

* காயம் ஏற்பட்ட இடத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கிடைக்கச்செய்யும். அதனால், காயம் விரைவாக ஆறும்.

[HR][/HR]
ஐஸ் ஒத்தடம் எப்போது?

ஓர் இடத்தில் அடிபட்டால், அடிபட்ட 48 மணி நேரம் வரை ஐஸ் ஒத்தடம் மட்டுமே கொடுக்கலாம். அடிபட்ட இடத்தில் வீக்கம் இருந்தால், இந்த ஒத்தடம் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடும்.

தீராத வலி என்கிற நிலையில் இந்த ஒத்தடம் நல்ல பலன் தரும். உதாரணமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியின்போது (Acute Pain ) ஐஸ் ஒத்தடம் நிவாரணம் தரும். ஐஸ் இல்லையென்றால், அவசரத்துக்கு வீட்டில் ஃப்ரிட்ஜில் இருக்கும் பால் பாக்கெட்டைக்கூட ஒத்தடத்துக்குப் பயன்படுத்தலாம். இது, மருத்துவரிடம் செல்லும்வரை வலியைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். பல் வலி உள்ளவர்கள், தீராத வலியால் அவதிப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் அந்த இடம் மரத்துப்போய் வலி தெரியாது. அதிகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால், அது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவும். நேரடியாக ஐஸை வைக்காமல், பஞ்சு அல்லது துணியில் தொட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் வந்தவர்களுக்கு, மருத்துவரிடம் போவதற்கு முன்னால் ஐஸ் க்யூப்களைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது, மூளையில் கசியும் ரத்தத்தைத் தடுக்கும்.

ஐஸ் ஒத்தடம், ரத்தக்கசிவைத் தடுக்கவும் (Hemostasis), வலியைக் குறைக்கவும் (Analgesic), ஓர் இடத்தை மரத்துப்போகச் செய்யவும் (anesthetic) உதவும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.