உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் !

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.


 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முரு&#29

Very nice share ji. Naan idhu kuda oru tomato vum serthu pannuven :cheer:
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Re: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முரு&#29

இரத்த விருத்திக்கு பாட்டி வைத்தியம்


முருங்கைக் கீரையைக் கொண்டுவந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழிமுட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.


பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.


அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.


தினசரி உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டுவர ரத்தம் தூய்மை பெறும்.


தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.


அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் ( நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும் ) தினசரி 3 எடுத்து காய்ச்சிய பசும்பாலில் போட்டு வேகவைத்து தேன் 1 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடம்பில் இரத்தம் ஓட்டம் பெருகிப் பருத்துப் பூரித்துக் காணும். உடல் வெப்பம் தணித்து மலக்குடல் தூய்மை ஆகி, உடம்பெங்கும் புத்துணர்வு மலரும்.

புதினாக் கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்க்கவும்)

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.