உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயணர&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயணரெட்டி

'ஒரே ஒரு தடவை உடல் உறவுகொண்டால் கர்ப்பம் உண்டாகிவிடுமா?’ என்பதுதான். இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள சில விஞ்ஞான விளக்கங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின்போது முதிர்ச்சி அடைந்த ஒரு கரு முட்டையின் ஓடு உடைந்து முட்டை வெளிவரும். இதற்கு 'ஓவலேஷன்’ (Ovulation) என்று பெயர். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சியானது மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால்... மாதவிடாய் வந்த நாளில் இருந்து 14-வது நாள் இந்த 'ஓவலேஷன்’ நடக்கும். இந்த 14-வது நாளில் இருந்து கருப்பையின் உட்சுவர் (Endometrium) தடிமனாகிக்கொண்டே வரும். ஒருவேளை கர்ப்பம் தரித்தால் கரு வந்து தங்குவதற்குத்தான் இந்த ஏற்பாடு. இந்தக் காலகட்டத்தில் உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.

பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி.லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந்து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இருக்கும். எப்போது உடல் உறவு வைத்துக்கொண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிர் அணுக்கள் கருமுட்டையைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின்போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திக்க கிட்டத்தட்ட 1 முதல் 5 மணி நேரம் ஆகும். இந்தப் பயணத்தில் லட்சக்கணக்கான உயிர் அணுக்கள் இறந்துவிடும். கடைசியாக சுமார்

3,000 உயிர் அணுக்கள் மட்டுமே ஃபெலோபியன் குழாயைச் சென்றடையும். இதிலும் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திப்பது சில நூறு உயிர் அணுக்கள்தான். இவற்றில் ஒரே ஓர் உயிர் அணு மட்டும்தான் முதிர்ச்சி அடைந்த முட்டையைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து கருவாகும்.

உயிர் அணுவை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தால் அதற்கு ஒரு தலை, உடம்பு, வால் பகுதி இருப்பதைப் பார்க்கலாம். இந்த வால் பகுதியால்தான் உயிர் அணு நீச்சல் அடித்து முன்னேறுகிறது. உயிர் அணுவின் தலைப் பகுதியில் சில ரசாயன என்சைம்கள் இருக்கும்.

அந்த என்சைம்கள் கருமுட்டையின் சுவரை அரித்து ஒரு சிறு துவாரம் உண்டாக்கும். அது வழியாக ஒரே ஓர் உயிர் அணுவின் தலையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் உள்ளே நுழைந்துவிடும். உயிர் அணுவின் தலை, உடம்பு, வால் பகுதிகள் உள்ளே போகாது. கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸும் உயிர் அணுவில் இருக்கும் நியூக்ளியஸும் ஒன்று சேருவதனால் கர்ப்பம் உண்டாகிவிடும். பின்னர், இப்படி ஒன்று கலந்த நியூக்ளியஸ் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகும்... இப்படியே பல்கிப்பெருகி ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய பந்து மாதிரி உருவாகி எண்டோமெட்ரீயத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும்.

ஒரு பெண்ணின் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து இருந்தால் ஒரே ஒரு தடவை உறவுவைத்துக்கொண்டால்கூட கர்ப்பம் தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

இன்னும் சிலர் 'சில குறிப்பிட்ட நாட்களில் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்காது’ என்று உத்தேசமாகச் சொல்வார்கள். அது, அந்தந்தப் பெண்ணின் மாதவிடாய்ச் சுழற்சி சரியாக உள்ளதா என்பதைப் பொறுத்தது. மாதவிடாய் தொடங்கிய தினத்தை முதல் நாளாக வைத்துக்கொண்டால் சரியாக 9-வது நாளில் இருந்து 18-ம் நாள் வரையில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், 'உலகம் முழுவதும் 8 சதவிகிதம் பெண்களுக்குத்தான் மாதவிடாய் சுழற்சி மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை வருகிறது’ எனக் கண்டறிந்துள்ளது மருத்துவ உலகம்.

எனவே, 'இந்த நாட்களில் இவர்கள் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்காது அல்லது தரிக்கும்’ என்று எவராலும் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடியாது.
'எந்த நிலையில் (position) உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும்?’ என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. உறவின்போது பெண் கீழ் இருக்கும் நிலைதான் கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற நிலை. கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விரும்பும் பெண் உடல் உறவுக்குப் பின்னர் படுக்கையில் இருந்து உடனே எழுந்துகொள்ளாமல் 20 நிமிடங்கள் அதே நிலையிலேயே படுத்து இருக்க வேண்டும்.

இப்போது சில நவீன ஸ்ட்ரிப்புகள் வந்துள்ளன. இதனை பெண்ணின் சிறுநீரில் நனைத்து சோதித்தால் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியாகும் நாட்களை ஓரளவு கணிக்க முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் கண்டறியலாம்.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&#29

ரொம்ப எளிமையான அறிவியல் விளக்கம். ஒரே ஒரு உயிரணு தான் முட்டையை அடைகிறதென்றால் , எப்படி இரட்டையகள், மற்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல குழந்தைகள் உருவாகின்றன?
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#3
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&amp

Hi @RathideviDeva

இரட்டைக் குழந்தை உருவாகும் விதம்...

ஆணிடம் இருந்து வரும் ஆயிரக் கணக்கான விந்து செல்களில் ஒரு செல் பெண்ணின் கருப்பையில் உள்ள அண்ட செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகும்.

மற்ற விந்து செல்கள் அழிந்து விடும்.இந்த கருமுட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக மாரும்.

மொருலாவானது மேலும் வளர்ச்சியடையும் போது...மொருலாவின் குறிப்பிட்ட பகுதிகள்...குழந்தையின் குறிப்பிட்ட உடல் உறுப்புகளாக மாறும்.

மொருலாவின் உறுப்புகளின் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னால் மொருலாவானது இரண்டாக பிரியுமானால்....அது இரண்டாக பிரிந்து....,இரண்டு மொருலாவும் வளர்ச்சியடைந்து.....இரண்டு குழந்தைகளாக வளரும்....இதே போல் பத்து குழந்தைகள் வரை கூட வளரலாம்.
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#4

Arumaiyaana vilakkam...Thanks for sharing sister....
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#5

Vilakkam sonnadharkku nandri thozhi. Appadiyaanaal seyarkkai muraiyil karuththarippu nadakkumbodhu pala kuzhandhaigal pirakkavum idhuve kaaranamaa, illai, pala fermented muttaigal ulle seluththuvadaal(adhil edho ondraavadhu pizhaikkum endra nambikkaiyil) pirakkiradhaa?
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#6
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&amp

கண்ணுக்குத் தெரியாத பெண் அணுவுடன் அதாவது ஓவத்துடன், அதிலும் சிறியதோர் ஆண் விந்து சேருவதாலேயே பிள்ளை அணு உண்டாகிறது. கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்ணியதாக இருப்பினும் இவ்வணுக்கள் தந்தையும் தாயும் தம் குழந்தைக்குத் தரப்போகும் குணங்களையும் லட்சணங்களையும் தம்முள் அடக்கியிருக்கின்றன. இவ்வாறு உருவான கரு அணு இரண்டாகப் பிரிந்து, இரண்டு நாலாகி, நாலு எட்டாகி... இப்படிப் பலதரம் பிரிந்து, வளர்ந்து சில நாட்களில் பல அணுக்களைக் கொண்ட ஒரு சிறு பந்தாகக் காட்சி தரும். இப்போது கரு, கருப்பையில் நன்றாகப் புதைந்து தனக்கு வேண்டிய சத்தைப் பெற்றுக் கொள்கிறது.

கரு உற்பத்தியான இரண்டாம் கிழமையில் பந்து போலிருக்கும் கருவின் அணுக்கள் மூன்று பிரிவுகளாகின்றன. ஒரு பிரிவு அணுக்கள் குழந்தையாக உருவெடுக்கும். இரண்டாம் பிரிவு சூல்வித்தகமாக மாறும் (Placenta). மூன்றாவது பிரிவு குழந்தையைக் காப்பாற்றச் சூலுறையாக அமையும்.

மூன்றாம் கிழமையிலே தான் கரு கண்ணுக்குத் தெரிகிற அளவில் உருவில்லாத ஒரு பிண்டமாக இருக்கும். எனினும் அதில் உறுப்புக்கள் தோன்றுவதற்குரிய அறிகுறிகள் காணப்படும். இனி, கரு அதிகம் வேகமாக வளரும்.

நாலாம் கிழமையின் முடிவில் கருவின் நீளம் நான்கு மில்லி மீற்றர் ஆகும். இத நேரத்திலே குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

ஆறாம் கிழமையில் கரு 1.3 சென்றி மீற்றர் நீளமிருக்கும். தலைப்பக்கம் பெரிதாக இருக்கும். கால்களும், கைகளும் சிறுவாலும் நன்றாகத் தெரியும்.

ஏழாம் கிழமையில் கருவின் முகம் நல்ல தோற்றமெடுக்கும். கண் இமைகள் தோன்றும். காதுகள் உருவாகும்.

இரண்டாம் மாதமுடிவில் சூல்வித்தகமும் சூலுறையும் பூரணமாகத் தோன்றிவிடும். பனிநீரில் கரு நீந்தும்.

மூன்றாம் மாதத்தில் கை, கால், விரல், காது எல்லாம் சரியாக அமைந்துவிடும். விரல்களில் சின்னஞ்சிறு நகங்களைக் காணலாம். வால் மறையும். பார்க்கச் சின்ன மனிதனாகவே கரு காட்சி தரும். ஆகையால் இனிக் கருவைச் சிசுவென்று அழைப்போம்.

நாலாம் மாத இறுதியில் ஆண் பெண் குறிகள் தோன்றுகின்றன. சிசு துடிப்பதைத் தாய் உணரத் தொடங்குகிறாள். டாக்டர், சிசுவின் இருதயத் துடிப்பின் ஓசையைக் கேட்க முடியும். இந்த நிலையிலேதான் ஒரு பெண் கர்ப்பவதியாக இருக்கக் கூடுமெனப் பிறர் ஊகிக்குமளவுக்கு வயிறு பெருப்பமடைகிறது.

சிசுவின் நீளம் சுமார் 20 செ.மீ. நிறை 170 கிராம்.

ஐந்தாம் மாதக்கடைசியில் சிசுவின் நீளம் ஓரடியாகவும் நிறை 455 கிராமாகவும் அதிகரிக்கும். தலை உரோமம் வளரத்தொடங்கும்.

ஆறாம் மாதத்தில் சிசுவின் தலையில் உரோமம் நன்றாகக் காணப்படும். தேகம் வழுவழுப்பான ஒரு பசையால் மூடப்பட்டிருக்கும்.

ஏழாம் மாதத்தின் இறுதியில் சிசு சுமார் 40.6 சென்றிமீற்றர் நீளமும் 1700 கிராம் நிறையுமாகும். ஏழாம் மாதத்தில் குழந்தை பிறந்தால், போதிய நல்ல பராமரிப்பு இருக்குமாயின் அது வாழ்வதற்கு நூற்றுக்கு ஐம்பது சதவீதத்தில் நல்வாய்ப்பு உண்டு. ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தை எட்டாம் மாதக் குழந்தையிலும் பார்க்க வாழ வல்லமையுள்ளது என்று ஒரு தவறான அபிப்பிராயம் உலக வழக்கில் உண்டு. அது எப்படி முடியும்? எட்டாம் மாதக் கடைசியில் பிறக்கும் குழந்தை ஏறத்தாழ 2270 கிராம் எடையுள்ளது. அதன் வளர்ச்சியும் ஏழு மாதக் குழதையிலும் பார்க்க ஒரு மாத காலம் அதிகமாக நிறைவேறிவிட்டது. ஆகையாலேதான் எட்டு மாதக் குழந்தைகள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் உயிர் வாழ்கின்றன.

சரியான மாதத்தில், அதாவது நாற்பது கிழமைகளின் முடிவில் பிறக்கும் குழந்தை பூரண வளர்ச்சியடைந்திருக்கும். பெரும்பாலும் கருப்பையில் நிறைமாதக் குழந்தை தலைகீழாகத்தான் இருக்கும். இத்தகைய குழந்தையின் அளவு வருமாறு:-

நீளம் - 51 சென்றி மீற்றர்
நிறை - 3 கிலோ
தலையின் சுற்றளவு - 33 செ. மீற்றர்

குழந்தை பிறக்கும்போது அதன் நிறை 3 கிலோ.
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#7
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&#29

இரட்டைக் குழந்தைகள் இருவிதங்களில் தோன்றலாம். தந்தையின் அணு ஒன்று தாயின் ஓர் அணுவுடன் (ஓவத்துடன்) சேர்ந்ததால் உண்டான கரு இரண்டாகப் பிரிந்தும், தனித்தனியே வளர்ந்தும் இரு குழந்தைகளாகலாம். இப்படி உருவான குழந்தைகள் தோற்றத்தில் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட விக்கிரகங்களைப் போல் வேற்றுமை இல்லாது காணப்படுவார்கள்.

அவர்கள் ஒரே ஓவத்திலிருந்து தோன்றியவர்கள் அல்லவா? அதனால்தான் பிரசவத்தின்போது டாக்டரோ அல்லது மருத்துவச்சியோ இதை அறிய முடியும்.

ஏனெனில் இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு சூலுறைகள் இருப்பினும் ஒரே சூல்வித்தகம்தான் காணப்படும். குழந்தைகள் பெரும்பாலும் இருவரும் ஆண்களாகவோ பெண்களாகவோ இருப்பார்கள்.

இரட்டைக் குழந்தைகள் தோன்றும் மற்றொரு விதம் தாயின் இரு ஓவங்களுடன் தந்தையின் இரு அணுக்கள் தனித்தனியே சேருவதால் ஏற்படுகின்றன.

இப்படி உருவான இரு கருக்கள் இரு குழந்தைகளாக வளருகின்றன. இந்த பிரசவத்தில் இரு சூலுறைகள் மாத்திரமல்ல, இரு சூல்வித்தகங்களும் காணப்படும். குழந்தைகளில் ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் இருக்கலாம்.

அல்லது இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பிள்ளைகள் தோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பார்களென்றும் சொல்வதற்கில்லை.

தனிப் பிள்ளையின் தாயிலும் பார்க்க இரட்டைப் பிள்ளைகளின் தாய்க்கு மசக்கை அதிகமாக இருப்பது வழக்கம்.

அதேபோல் மூச்சுவாங்கக் கஷ்டமாக இருப்பது, குழந்தை துடிப்பது, இரத்தச்சோகை ஏற்படுவது, கால்கள் வீங்குவது, கால்களில் நாளங்கள் தடிப்பது போன்ற சிறு இன்னல்கள் அதிகமாகவும் அடிக்கடியும் தோன்றலாம். வயிறும் பெரியதாக இருக்குமென்பது நாம் அறிந்தது.

இரட்டைக் குழந்தைகளின் பிரசவம் நாம் கணக்கிட்டு அறிந்து கொண்ட குழந்தை பிறக்கும் நாளுக்குப் பல தினங்களுக்கு முன்னர் ஏற்படலாம். குழந்தைகள் பிறக்கும்போது அளவில் சிறியவர்களாக இருப்பார்களாகையால் பிரசவம் இலகுவாக இருக்கும்
 
chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&#29

Hi @RathideviDeva

சில சமயம் more than one கருமுட்டைவெளிவரும் அப்போது உருவாகும் கரு இரண்டும் ஆணாகவும் or இரண்டும் பெண்ணாகவும் or ஆண் ,பெண்ணாகவும் இருக்கலாம் ,இவர்கள் சில சமயம் உருவதோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பார்களென்றும் சொல்வதற்கில்லை

கரு உருவான பின் உடைந்தால் ஒரே பால் குழந்தைகள் பிறக்கும் , இப்படி உருவான குழந்தைகள் தோற்றத்தில் ஒரே ஒரேமாதிரி இருப்பார்குணத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள் , இயற்கையாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பது பரம்பரை சார்ந்தது
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#9
Re: உயிர் உருவாகும் ரகசியம்-டாக்டர் நாராயண&amp

Hi @RathideviDeva

சில சமயம் more than one கருமுட்டைவெளிவரும் அப்போது உருவாகும் கரு இரண்டும் ஆணாகவும் or இரண்டும் பெண்ணாகவும் or ஆண் ,பெண்ணாகவும் இருக்கலாம் ,இவர்கள் சில சமயம் உருவதோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பார்களென்றும் சொல்வதற்கில்லை

கரு உருவான பின் உடைந்தால் ஒரே பால் குழந்தைகள் பிறக்கும் , இப்படி உருவான குழந்தைகள் தோற்றத்தில் ஒரே ஒரேமாதிரி இருப்பார்குணத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள் , இயற்கையாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பது பரம்பரை சார்ந்தது
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, sis.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.