உருகினேன் உந்தன் காதலில் - Uruginen Unthan Kaadhalil By Ilakkikarthi

Status
Not open for further replies.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,403
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our Penmai Family. Please join with me in welcoming our friend Karthiga @
ilakkikarthi.

Below goes her story
"உருகினேன் உந்தன் காதலில்!"
and its introduction. We wish her all the very best and to have a long & fruitful association with Penmai.

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

தலைப்பு: உருகினேன் உந்தன் காதலில்


நாயகன் - மதுசூதன மாதவ் கிருஷ்ணன்
(கோபம் ,வெறுப்பு இந்த இரண்டை மட்டும் தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவன்)

நாயகி - மகிமா
(எப்பவும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைப்பவள் கூடவே அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. அது என்னன்னா... எதிலும் அலட்சியமா இருப்பா)

எதேச்சையாக நிகழும் முதல் சந்திப்பிலே தன்
உயிரை காப்பாற்றிய நாயகியிடம் தன் மனதை பறிகொடுக்கிறான் நாயகன்.... அவளிடம் தன் காதலை சொன்னனா ???????????????அவளை கைபிடிதானா
??????? என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்.

இவர்களோடு சேர்ந்து கதையில் சபிதா, சந்துரு பயணிப்பார்கள்.

ஃபிரண்ட்ஸ்... உங்கள நம்பித்தான் கதை எழுத ஆரம்பிக்கிறேன். உங்களின் ஆதரவை எப்பவும் எனக்குக் கொடுங்க.

By

ilakkikarthi@ karthi



 

Attachments

Last edited:

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#3
hai friends UUK-1 ud potuten padichutu eppdi irukunu soluunga ungal pathilai aavalodu ethirpakkuren.........................


உருகினேன் உந்தன் காதலில்

அத்தியாயம்: 1
இடம் : சென்னை

சாலையில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தவனை யாரோ
அவன் கையை பிடித்து இழுப்பது போன்று தோன்றியது. திரும்பி பார்பதற்குள் அவள் மீதே அவன் விழுந்தான். ஏதோ பஞ்சு மெத்தையில் விழுந்தது போன்ற உணர்வு வந்தது அவனுக்கு .சுய உணர்வு வந்து திரும்பினால் அவர்களை கடந்து மிக அதிவேகத்தில் லாரி ஒன்று செல்வதைக் கண்டான்...
“எக்ஸ் க்யுஸ் மீ கொஞ்சம் எழுந்துருக்றீங்களா வெயிட் தாங்க முடியல “ அப்போதுதான் தெரிந்தது தான் ஒரு பெண்ணின் மீது விழுந்துள்ளோம். சுதாரித்து எழுந்து பின் அவளையும் கை கொடுத்து தூக்கிவிட்டான்.
அவள் தன் சுடிதாரை சரிபடுத்திகொண்டு அவனை பார்த்த அதே நேரம் அவனும் பார்த்தான்.
“hello MR . are you all right? “
அவன் பதிலுக்கு “:yes I am all right and thanks” என்றபோதுதான் அவனை பளார்’னு ஓங்கி கன்னத்தில் அறைந்தாள்.
சே இப்படி நடுரோட்டில் எல்லோர் முன்னாடியும் ஒரு பொண்ணுட்ட அறை வாங்கிட்டோமே’னு அவன் கண்கள் கோபத்தில் சிவக்க
அதெல்லாம கவனிக்காம அவ வேலைய கரக்டா செய்ய ஆரம்பிச்சுட்டா (என்னானு கேட்குறீங்களா அதாங்க அவனுக்கு அட்வைஸ் பண்ற வேலைதா)
“உனக்கெல்லாம் அறிவில்ல ,இல்ல வேஸ்ட் ஆக கூடாதுன்னு வீட்ல வச்சுட்டு வந்திட்டியா. யாரவது இப்படி நடுரோட்டில் நின்னு போன் பேசுவாங்களா கொஞ்சம்கூட கவனமே இல்லாம கேர்ள் பிரெண்ட் கூட கொஞ்சிட்டு இருக்க” (இப்போ உனக்கு என்னமா பிரச்சனை அவன் ரோட்ல நின்னதா இல்ல கேர்ள் பிரெண்ட் கூட பேசிட்டு இருந்ததா என மனசாட்சியின் கேள்வியை ஒதுக்கிவிட்டு அவனுடன் சண்டை போடா தயாரானாள் )
“ உயிரோட மதிப்பு தெரியாம இவ்ளோ அசால்ட்டா இருக்க உன்ன விடு உன்ன நம்பி எத்தன பேர் இருப்பாங்க அவுங்கள நினைச்சு பார்த்தியா அதான நினைச்சிருந்தா நீ இப்படி இங்க கடலை போட்டுட்டு இருக்கமாட்ட” (அதுலயே நிக்கிறாளே )
“அந்த லாரிய பார்த்தியா எவ்ளோ வேகமா வந்துச்சுன்னு விட்டா உனக்கு மூணாவது நாள் பால் ஊத்திருப்பங்க. இனிமே எங்கயாவது இப்படி நின்னு மொக்க போடுறத பார்த்தேன் நானே உன்ன பிடிச்சு வண்டிக்கு முன்னாடி தள்ளிவிட்டுருவேன் ஜாக்ரதை” என்று தன்னை ஒரு விரல் நீட்டி மிரட்டி செல்பவளை கண்ணிமைக்காது பார்த்தான் (அதாங்க நாம ஹீரோ )மதுசூதனன்.
அப்போது அவன் மனதில் நியாபகம் வந்த பாடல் வரிகள்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

கண்டுபிடிசுருபீங்கனு நினைக்கிறன் அவதா நம்ம கதையின் நாயகி மகிமா....
மகிமா ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது மாநிறமா இருப்பா அளவான உயரம், உயரத்திற்கு ஏற்ப எடை இருந்தாலும் கொஞ்சம் கொழு கொழுன்னு இருப்பா, இடைவரை நீண்ட கூந்தல்,அவளுக்கு அழகே கன்னத்தில் விழும் குழிதா. B.sc computer science ****** காலேஜு’ல கடைசி வருடம் படிக்கிறா.ஹோச்டல் தங்கி படிச்சுட்டு இருக்கா அதுவும் காலேஜு பஸ்லதாங்க போவா.
அப்போதா காலேஜு பஸ்சுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கும் போதுதான் ஹீரோவ நோக்கி ஒரு லாரி வேகமா வராத பார்த்து பதறியடிச்சு வந்து அவன பிடிச்சு இழுத்தா. இழுத்த வேகத்துல அவன் அவ மேலே விழுவான்னு எதிர்பாக்கல..அந்த கோபமும் சேர்ந்து அவன லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா (இதாங்க நடந்தது இப்போ நம்ம ஹீரோ என்ன பண்றருனு பாப்போம் வாங்க )
அவன் நம்ம மகி பேச ஆரம்பிக்கும்போதே சிலையகிட்டான். மது பிரெண்ட் சந்துரு வந்து அவன உலுக்குன பின்னாடிதான் சுயநினைவு வந்துச்சு..(ஏன் சிலையாய் நின்னான் அப்புறும் சொல்றேன் )
“என்னடா என்னாச்சு ஏன் இப்படி வேப்பில அடிச்சமாதிரி இருக்க “ என்று கேட்டான் சந்துரு.
“ஒண்ணுமில்லை வா போகலாம் “ என்று மது சொல்லவும் அவ்விடத்தை விட்டு இருவரும் நகர்ந்தனர்.
ஆனால் மதுவுக்கு ஒரு சொல்ல முடியாத உணர்வு தோன்ற திரும்பி பார்த்தான் மகி இவனை பாத்துடே அவ பஸ்ல ஏறினாள். மது ஒரு சின்ன புன்னகையுடன் அவளை பார்த்துக்கொண்டே சென்றான் .


@@@@@@@@@@ காலேஜு கேம்பஸ்
“சே நாம இப்படி அவன பப்ளிக் பிளேசுல அடிச்சுருக்க கூடாது அவன் முகமே மாறி போயிருச்சு அவன் ரொம்ப கஷ்டபட்டுருபான் ஆமா எனக்கு ஏன் இவ்ளோ கோவம் வந்துச்சு அவன் யார்கூட பேசினா நமக்கு என்ன அடிக்காம மெதுவா எடுத்து சொல்லிருக்கலாம் என்னால இன்னைக்கு எல்லார் முன்னாடியும் ரொம்ப அசிங்கபட்டுடான்” என்று மகிமா அவனிடம் நடந்துகொண்டதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டா
என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது அவள யோசிக்க விடாம அவ சிந்தனைய கலைக்கவென்று வந்து சேர்ந்தால் அவள் ஆருயிர் தோழி சபிதா.
சபிதாவும் ,மகிமாவும் ஒரே டிபார்ட்மெண்ட். சபிதா நல்ல கலரா இருப்பா பத்தாததுக்கு ஓவர் மேக்கப் வேற சொல்லவுமா வேணும் குளிக்க மறந்தாலும் மேக்கப் போட மறக்கமாட்டா இவளுக்கு கிளாஸ்ல இருக்க நிக் நேம் “கரகாட்டகாரி “ , ஒல்லியான தேகம் மகிமாவ விட இவ ரொம்பவே உயரம் அதுனாலயே மகிய இவ கிண்டல் பண்ணிடே இருப்பா ஆனா நம்ம மகி அத கண்டுக்கமாட்டா.
ரெண்டுபேருமே காலேஜு பிரஸ்ட் yr ல இருந்து பிரெண்ட்ஸ்.சபிதா சென்னைலதா இருக்க இவ வீடு பக்கத்துல லேடிஸ் ஹாஸ்டல்தா மகி தங்கி இருக்கா..ஒண்ணாதா காலேஜு’கு போவாங்க.அவ இன்னைக்கு பஸ் மிஸ் பண்ணிடா அதா லேட்டா வரா (வாங்க என்ன பண்றங்கனு பாப்போம்)
“ஹாய் டி “ என்றாள் சபி
“ஹாய்” என்றாள் மகி ரொம்பவும் சலிப்பா
“என்னடி என்னாச்சு காலையிலே காயபோட்ட கருவாடு மாதிரி முகத்தை வச்சுருக்க “ என்றவளை முறைத்த மகி
“ஒண்ணுமில்லை “ என்றாள்
“ஒண்ணுமில்லமதா ஒருமணி நேரமா கிளாஸ் ஆரம்பிச்சது கூட தெரியாம இங்க உக்காந்துருக்கியா”
“மூட் இல்லடி “ என்றாள் மகி
“சரி சொல்லுடி என்ன ப்ரோப்ளம் “ என்று கேட்ட சபியிடம் காலைல நடந்த எல்லாத்தையும் கூறினாள்.(ஒன்றை தவிர்த்து கேர்ள் பிரெண்ட் கூட கொஞ்சிட்டு இருந்தியா என்பதை (அத மட்டும் சொல்லிருந்தா சபி அவள ஒரு வழி பண்ணிடுவா ))
இதனை கேட்ட சபி “சரி விடு டி இன்னைக்கு அவன் உன் கையாலதா வேப்பில்லை அடிக்கனும்னு இருந்துருக்கு போல “ என்றவளை முறைத்து “உன்னை ..... ஏண்டி என்ன பாத்தா உனக்கு வேப்பில்லை அடிகிருவ மாதிரியா தெரியுது”
“ஹேய் நான் அப்படி சொல்லல பொதுவா நீ எனக்கு அட்வைஸ் பண்ணி உயிரை எடுப்ப அந்த மாதிரி அவனையும் டார்ச்சர் பண்ணிடனு சொன்னேன்”
மகி எதோ பேச வாயெடுக்க அதற்குள் அவள் கிளாஸ் ரெப் (தலைவி) வந்து அழைத்தாள்
“ஹாய் மகி,சபி உங்க ரெண்டு பேரையும் நம்ம h.o.d கூப்பிடாரு” என்றாள்
“என்ன விஷயம் “ என்று கேட்டாள் சபி
“உங்களுக்கு அவார்ட் குடுக்கதா” என்றாள் ரெப்
“நாங்க இப்போ பிஸியா இருக்கோம் எடுத்து வைக்க சொல்லு அப்புறம் வந்து வாங்கிக்கிறோம் பொய் சொல்லு டி “ என்று சொன்னாள் சபி
“என்னடி கொழுப்பா அவர் உங்க மேல செம காண்ட்ல இருக்காரு உடனே போனீங்கனா கிளாஸ்கு வெளிலதா நிப்பீங்க இல்ல வாட்ச்மேன் தாத்தா பக்கத்துல நிக்க வேண்டிய நிலைமை வந்துரும்”
“எதுக்கு டி கோவமா இருக்காரு” என்று கேட்டாள் மகி
“தெரியல டி உங்க ப்ராஜெக்ட் guide தா உங்கள எங்க பாத்தாலும் உடனே அள்ளி போட்டு வர சொன்னாரு ஓகே பாய் டி”வந்த வேலையை முடித்துவிட்டு சென்றாள்
“எதுக்குடி நம்ம மேல கோவமா இருக்காரு” என்று சபியிடம் கேட்டாள் மகி
“ஹ்ம்ம் நீ காலையில அறைஞ்சலே அவன் உனக்கு எதிரா கம்ப்ளைன்ட் பண்ணிருப்பான் அதான் நம்ம அந்நியன் (hod அவளுக வச்சுருக்க நிக் நேம் அவர் அடிகடி அந்நியன் பிலிம் மாதிரி மாறி மாறி மிரட்டுவாரு )விசாரணை கமிசனுக்கு கூபிடுறான்.
“அப்படியா “ இருந்தாலும் என்ன பத்தி அவனுக்கு ஒண்ணுமே தெரியாதே நான்தா அவன அடிச்சா உடனே எஸ்கேப் ஆயிட்டேனே (எங்க அவன் திருப்பி அடிசுருவான்தா ) எப்பிடி என்று யோசித்தாள் மகி
“நான் என்ன சொன்னாலும் நம்புற ஒரே ஜீவன் நீ மட்டும் தாண்டி நீ இருக்குற வர என் புலப்பு ஓடும்” என்றதோடு “ வா போய் என்னன்னு கேட்போம்”
hod பிஸியாக இருக்குறாரு கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க என்று அட்டெண்டர் சொன்னதுனால ரூம் வெளிய போற வர பாய்ஸ் பாத்துட்டு இருந்தாலுங்க(அதாங்க சைட்)
ரூம் உள்ள இருந்து ப்ராஜெக்ட் guide வெளிய வந்து அவர்களை பார்த்து
“என்னம்மா நீங்க இப்படியா செய்வீங்க” என்றார்
“என்ன நடந்துச்சு சார் “ என்று கேட்டாள் மகி
“நீங்க சப்மிட் பண்ணீங்கள ப்ராஜெக்ட் டைட்டில் “
“ஆமா சார் நான் தான் செலக்ட் பண்ணேன். நான் போன சென்டர்ல அதுத ரொம்ப சீப் அண்ட் பெஸ்ட் அதுமிட்டுமில்ல ரொம்ப கம்மியான விலை சார் அதா உடனே வாங்கி சப்மிட் பண்ணிட்டேன்” என்றாள் சபி பெருமையாக
“ரொம்ப பெருமை படாத நீ சப்மிட் பண்ண ப்ராஜெக்ட் hod இப்போ படிச்சுட்டு இருக்க p.h.d ப்ராஜெக்ட் “ என்றதும் இருவரும் ஷாக் ஆயிட்டாங்க அதுல சபி பயத்துல வாய பொளந்துட்டா
பின் சுதாரித்த சபி “ஏன் சார் நம்ம hod கூட சீப் அஹ தா ப்ராஜெக்ட் பண்ணுவாரு போல “என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை கேட்டாள்
“என்னமா திமிரா அவரே இப்பதா கஷ்டப்பட்டு Phd பண்னறாரு நீ என்னடான்னா அவர் ப்ராஜெக்ட் அஹ வாங்கி அவர்கிட்டயே சப்மிட் பண்ணி இதுல சீப் அண்ட் பெஸ்ட் னு வேற சர்டிபிகேட் கொடுக்குற”
“இப்பொதா நான் அவர்ட்ட அவர்ட் வாங்கிட்டு வெளில வரேன் போங்க உங்களுக்கு கொடுக்காத வெய்ட் பண்றாரு “என்றார்
“ஓகோ அதுனாலதா எங்கள வெளில வெய்ட் பண்ண சொன்னாரா “என்ற சபியை தீயாய் முறைத்தனர் மற்ற இருவரும்
“உள்ள போங்க” என்று தன்னுடைய காதில வச்ச பஞ்சை எடுத்து வெளியில் வீசிட்டு சென்றார்
“எரும மாடு ஏண்டி இப்படி செஞ்ச” என்று கேட்டாள் மகி
“நான் என்னடி பண்ணுவேன் சென்டர் உள்ள போனப்ப யாருமே அங்க இல ஒரே ஒரு பையன் தா இருந்தான் அவனும் டேபிள் எல்லாம் கிளீன் பண்ணிட்டு இருந்தான் பார்க்க ஸ்மார்ட் அஹ வேற இருந்தான் ஒருவேள அவனும் இங்க ஒரு சார்’னு நினைச்சேன் .சரின்னு நான் அவன்கிட்ட போய் நல்ல விலை கம்மியா குறைந்த நேரமே செலவிடகூடிய அளவான கோடிங்கோட இருக்குற ப்ராஜெக்ட் வேணும்னு சொன்னேன்.அவனும் ஒரு பைல் அஹ எடுத்து தந்தான் அப்படியே ஓபன் கூட பண்ணாம சப்மிட் பண்ணிட்டேன் “என்று ப்ளாஷ்பாக் அஹ முடிச்சா
“மகி அந்த பையன் பைல் ஓட சேர்த்து டெலிபோன் புக் தரும்போதே யோசிச்சுருக்கணும் சே “ என்று தன் தன் தோழியின் முகத்தை பார்த்தாள் அவளின் கண்ணில தெரிஞ்ச உஸ்ண ஜுவாலையை கண்டு கப் சிப் என்று வாயை மூடி கொண்டாள்
உங்கள சார் வர சொல்றாரு என்று அட்டெண்டர் சொன்னதும்
“வா போகலாம் “என்ற ஒற்றை சொல்லோடு முடித்துக்கொண்டு உள்ள சென்றாள் மகி
“ஐயோ உள்ள விதி எனக்கு இன்னும் என்னன்ன சோதனை வச்சுருக்கோ கடவுளே முருகா என்ன காப்பாத்து உனக்கு மகி ஓட நீளமான முடில பாதிய தரேன் “என்று நொந்து கொண்டே சென்றாள்(இத மகி கேட்ருகனும் )

கலாட்டா தொடரும்.....................................



fnds mistake iruntha poruthukonga next rime nala poduren.................................


   
   
   
   
 
Last edited:

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#4
அத்தியாயம் :2
HOD ரூம் குள் நுழைந்த அவர்களை “வாங்க வாங்க “ என்று பாசமாக வரவேற்றார் இதனை கவனித்த மகி மனதிற்குள் ஹய்யோ இவன் கோபமா கூப்பிட்டாலே ஆக்சன் கிங் அர்ஜுன் மாதிரி வெளுத்துவாங்குவான் இன்னைக்கு பாசமா வேற கூப்புடுறான் கண்டிப்பா டெர்மினேட்டர் அர்னால்ட் மாதிரி சுட்டு பொசிக்குருவான் போலேயே என்று ஒரு புறம் நினைக்க மறுபுறம் அவளின் தோழியோ அதான் உள்ள வந்துட்டோம்ல அப்புறம் என்ன வாங்க வாங்க என்று வாய் விட்டே புலம்பினாள்
இதனை கேட்ட மகியோ வாயமூடிட்டு சும்மா வரியா இல்ல டேபிள் மேல இருக்க பேப்பர் வெயிட் அஹ கொண்டு மண்டைய உடைக்கவா என்று கேட்க அவளோ இவ இருக்க கோவத்துக்கு செஞ்சாலும் செய்வா என்று நினைத்து அமைதியாகி விட
“என்னமா அங்க சத்தம் “என்று hod கேட்க
“சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் சார் “ என்று இழுத்தாள் மகி
“வாட் இஸ் திஸ் “அவர்களுடய ப்ராஜெக்ட் பைல் அஹ பார்த்து கேட்டார்
“திஸ் இஸ் பைல் சார் “என்றாள் அப்பாவியாக மகி
“தோ பாருடா நான் கூட பிக்காச ஓவியம்னு நினைச்சேன் மா” என்றார் பதிலுக்கு
“சார் அது வந்து “என்று மகி இழுக்க
“எவ்ளோ தயிரியம் இருந்தா என் ப்ரோஜெக்ட்வே அதுவும் என்கிட்டவே சப்மிட் பண்ணுவீங்க “என்றார் கோபமாக
“சார் இது உங்க ப்ராஜெக்ட் எனக்கு சத்தியமா தெரியாது சார் “என்றாள் சபி
இதை கேட்ட மகியோ சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள் (ஏன்னா சபி தா சத்தியத்தை சக்கரை பொங்கல் மாதிரி அள்ளி அள்ளி தருவாளே )
“இதை என்னை நம்ப சொல்றியா “என்றார் விடாபிடியாக
“ஹய்யோ சார் உங்க ப்ராஜெக்ட் மேல சத்தியமா எனக்கு இது உங்களுடையதுன்னு தெரியாது சார் “ என்றவள் தொடர்ந்து “நான் அப்பவே நினைச்சேன் சார் இந்த ப்ராஜெக்ட் பண்ணனுவுங்க ரொம்ப அறிவாளியாதா இருப்பாங்கனு நினைச்சேன் கடைசிலே நீங்கதானா அந்த அறிவாளி” என்றதும் அவர் முகம் பிரகாசமானது இருந்தாலும் அத வெளிபடுத்தாமல் கெத்தாக
“சரி சரி இந்த ப்ராஜெக்ட் நீங்க பண்ணகூடாது அதனால் வேற ப்ராஜெக்ட் பண்ணுங்க “என்றவர் அடுத்து இருந்த மகியை பார்த்து
“அடுத்த ப்ராஜெக்ட் நீயே செலக்ட் பண்ணு நீ தான் பொறுமையா பார்த்து செய்வ “என்றவர் தொடர்ந்து “உனக்கு ஒரு ப்ரீ அட்வைஸ் தரேன் தயவு செஞ்சு சபி கூட சேராத அவ உன்னையும் சேர்ந்து மாத்திருவா சரியா” என்று மகியை கேட்க அவளோ
“சரிங்க சார்” என்றாள் பவ்யமாக
“யாரு இவள நான் மாத்திருவேன் விட்டா இவ ஊரையே வித்துட்டு வந்துருவா உனக்கு தினம் ஒரு நிக் நேம் செலக்ட் பண்றதே இவதா இது தெரியாம நம்புது பாரு முட்டை போண்டா” என்றாள் மனதிற்குள்
“ஓகே நீங்க போகலாம் “ஆள விட்டா போதும்னு கிளம்பிட்டாங்க
வெளியில் வந்த சபி மகியை பார்த்து
“மகி நான் நம்புன க்முருகன் என்ன கைவிடல “என்று சொல்ல
“ஏண்டி சபி அப்படி என்ன வேண்டிகிட்ட “
“உள்ள அந்நியன் கிட்ட இருந்து என்னை காப்பாத்துனா “ என்று சபி இழுக்க
“காப்பாத்துனா???????”என்று மகியும் இழுக்க
“அடிக்க மட்டேன் சொல்லு ந சொல்றேன்”என சபி சொல்ல
“ஓகே சொல்லு “ என மகி உறுதி கொடுக்க
“உன் முடியில் பாதிய காணிக்கையா அவருக்கு தரேன்னு வேண்டிகிட்டேன் “என்றதும்தான் தாமதம் மகி பக்கத்தில் இருந்த தடியை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தினாள்
“யார் முடிய யார் தரது ஏன் நீ மொட்டை எடுக்கிறேன் வேண்டரதுதானா” என மகி துரத்திகொண்டே கேட்க
“பாம்பு மாதிரி வளர்த்து வச்சுருகேல கொஞ்சம் கொடுத்தா என்னவாம் “என சபி சொல்லிகொண்டே ஒருவன் மீது மோதினாள்
“யாரது என்று எண்ணி கொண்டே நிமிர்ந்து பார்த்து வெட்கத்தில் தலை குனிந்தாள் “(யாருன்னு நீங்க கேட்குறது என் காதுல விழுகுது )
சபிதா வோட லவ்வர் அசோக்...சபிக்கு காலேஜ்ல fans அதிகம் ஆனா அவ யாரையும் கண்டுக்கமாட்டாள் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பா...
செகண்ட் yr ல facebook மூலமா அசோக் ஓட அறிமுகம் கிடைச்சுச்சு அப்படியே அது காதலா மாறி final yr ல இருவரும் பகிர்ந்து கொள்ள இப்ப ஓரளவுக்கு முளைவிட்டு வளர்ந்துட்டு இருக்கு (இதை களையெடுக்க ஒருத்தன் வரபோறான் தெரியாதனலாத என்னவோ கிடைக்கும் நேரம் எல்லாம் இப்படி உரம் போட்டு வளர்த்துட்டு வராங்க வாங்க என்ன நடக்குதுன்னு பார்போம் )
“ஹேய் டார்லிங் வாட் ஹாப்பன் “ என கேட்டான் அசோக்
“ஒண்ணுமில்லை “என்றாள் சபி உள்ளே போன குரலில்
(மத்த நேரம்னா ஈபிள் டவரோட பவர் கட் ஆகுற வர பேசுவா இப்ப பாருங்க கார்பரேசன் குழாயாய் திறந்தா வர காத்து மாதிரி புஷ் புஷ் னு பேசுறா இதுதான் லவ் வந்தா புலி கூட பூனைக்குட்டியா மாறிருவாங்க போல )
“என்ன டார்லிங் இதுக்கு முன்னாடி செம்ப உருட்டிவிட்டா வர சத்தம் மாதிரி கல கலன்னு இருந்த இப்போ என்னாச்சு அடிவாங்குன செம்பு மாதிரி அமைதியாயிட்ட “ என்றவனை முறைத்தாள் சபி
சபியை துரத்திகொண்டே வந்த மகி இவனை பார்த்ததும் மனதிற்குள் “வந்துட்டான்யா பனிக்கரடிக்கு பனியன் போட்ட மாதிரி “ என்று அவனை முறைத்துகொண்டே சபியிடம் “நான் கிளாஸ் கு கிளம்புறேன் “சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
ஏனோ மகிக்கு அசோக் கண்டாலே பிடிக்காது அவன் வேண்டாம்னு சபி கிட்ட எத்தனையோ தடவ சொல்லிட்டா மகி ஆனா சபி அவ பேச்சை கேட்கவே மாட்டாள் மகி ஏதோ விளையாட்ட சொல்ரானு விட்ருவா மகிக்கு தா பத்திக்கிட்டு வரும்.. அசோக்கின் கண்கள் எல்லா பெண்கள் மீதும் அலைபாய்வதை பலமுறை கண்டிருக்கிறாள் ஏன் சபிகிட்டா பேசும்போது கூட அவள் கண்ணை தவிர அனைத்து இடங்களை பார்பதைகண்டு சபியிடம் எதாவது காரணம் சொல்லி அவனிடமிருந்து பிரித்துக்கொண்டு வந்துவிடுவாள் இருந்தாலும் அவர்கள் சந்திப்பதை இவளால் தடுக்க முடியவில்லை அந்த கோபத்தில் தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் .
(இதுதாங்க நம்ம மகி கேரக்டர் யாரையும் அவுங்க கண்ணை பார்த்தே எடை போடுறவ..சபி அளவுக்கு வாலு தனம் இல்லனாலும் ஓரளவு சேட்டை பண்ணுவா நாசுக்கா சொல்லனும்னா சபி ஓபன் அஹ செய்றத மகி சத்தமே இல்லாம செய்வா அதுனாலதா இவளுக்கு சைலென்ட் கில்லெர் பேர் வைச்சுருக்கா நம்ம சபி...சபி எல்லோரையும் நம்பிருவா மகி அப்படி இல்ல ஒருத்தர நம்பனும்னா பல தடவ யோசிப்பா அதுனாலதா அசோக்க இவ நம்பமாட்டா)
“நானும் கிளம்புறேன் “ என்றாள் சபி
“வை டார்லிங் “என அவன் கேட்க
“இல்ல கிளாஸ் கு நேரமாச்சு “ என அவள் சொல்ல
“கொஞ்ச நேரம் இரு பேசிட்டு போகலாம் “என்றான்
“வேண்டாம் மேம் வந்துருவாங்க பாய் “என்று சிட்டாக பறந்தாள் சபி
“ஒருநாள் மாட்டாமையா போவ “என்று அவள் மீது பதித்த குரூர பார்வையோடு தன் டிபார்ட்மெண்ட் நோக்கி நடந்தான் .
அசோக் அவர்கள் படிக்கும் காலேஜில் MBA கடைசி வருடம் படிக்கிறான். பார்க்க நல்ல ஸ்மார்டா இருப்பான் ஆனா அவன் ஒரு பொம்பள பொறுக்கி யாருக்கும் அவனோட இந்த கேடித்தனம் தெரியாது அவன் ப்ரிண்ட்ஸ் தவிர.எல்லோர் முன்னாடியும் அவ்ளோ நல்லவனா நடிப்பான்..இவன பார்த்த உடனே கண்டுபிடிச்சுட்டா மகி இவன் நல்லவன் இல்லன்னு அது அவனுக்கும் தெரியும் இருந்தாலும் இவ என்ன சொன்னாலும் சபி நம்ப மாட்டான்னு ஒரு தயிரியம் (சபிக்கு இவன பத்தி தெரியும் போது ??????)
“ஹேய் ஏண்டி என்ன விட்டுட்டு வந்துட்ட “என சபி கேட்க
“நீதான் அவன பார்த்த உடனே உன் கால்களால் தூர்வாற ஆரம்பிசுடுறியே அப்புறம் தண்ணி வந்துருச்சுன யார் நீச்சல் அடிக்குறது எனக்கு வேற நீந்த தெரியாது அதான் நீயா வந்து கரை சேருவனு நம்பிக்கைல நான் எஸ்கேப் ஆயிட்டேன் “ என்றவளை முறைத்தால் சபி
“இங்க பாரு சபி அவன பார்த்தா நல்லவன் மாதிரியே எனக்கு தெரில முதல அவன கிளீன் கட் பண்ணு “ என்ற மகி தொடர்ந்து
“அவன் பார்வையே சரியில என்னமோ ஜொள்ளு விடுற நாய் மாதிரி பாக்குறான் எனக்கு பிடிக்கல அவன “என்றாள் மகி
“உனக்கு ஏண்டி பிடிக்கணும் எனக்கு பிடிச்ச போதும் “என வெட்கபட்டாள் சபி
“ஆனா ஊனா வெட்கம் என்ற பேர்ல வழியாத”என்ற மகியின் முதுகில் ஒரு போடு போட்டாள் சபி
“ஹேய் இதெல்லாம் உனக்கு புரியாது நீயும் லவ் பண்ணி பாரு அப்போதா லவ்வர்ஸ் பீலிங்க்ஸ் புரியும் உனக்கு “
நீயும் லவ் பண்ணி பாருன்னு சொன்னதும் ஏனோ மகிக்கு காலையில் பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது. மனதின் ஒரு ஓரமாக சில்லென்று ஓர் உணர்வு பரவுவதை உணர்ந்தாள். தான் அடித்த போது சிலையாக நின்றவனின் நிலையை நினைத்து அவள் உதட்டின் ஓரம் புன்னகை பூத்தது
“என்ன அதுகுள்ள ட்ரீம்ஸ் அஹ “என அவள் முன் சொடக்கு போட்டு கொண்டே கேட்டாள் சபி
“ஹி ஹி இல்லடி அது வந்து சும்மா “என இழுத்தவாறே பதில் சொன்னாள் மகி
“வழியாத கிளாஸ் ஸ்டார்ட் ஆச்சு பாரு “என சொல்லிவிட்டு மனதிற்குள் லவ் பண்ணி பாருன்னு தான சொன்னோம் அதுக்கே இப்படி வழியுறா(அதுக்கு நீ கலையில அங்க இருந்திருந்தேனா உனக்கு புரிஞ்சுருக்கும் ) இவ எல்லாம் லவ் பண்ணா நாம எல்லாம் கப்பலதா காலேஜு வரும் போல இருக்கே (அதுதாங்க அவ விடுற ஜொள்ளு அஹ சொல்றா )
ஒருவழியா கிளாஸ் முடிஞ்சு ஸ்டாப் ல வந்து இறங்கியதும் மகிக்கு அவனின் முகமே மீண்டும் மீண்டும் வந்து போனது
“சே என்ன இது எப்பாவது அவன பார்த்த ஒரு சாரி கேட்கணும் “என எண்ணிக்கொண்டே சபியிடம் சொல்லிவிட்டு ஹோஸ்டல் நோக்கி நடந்தாள்
@@@@@@@@@@
மதுசூதனன் இல்லம் :
இதுவரை இல்லாத உணர்விது


இதயத்தில் உண்டான கனவிது

பலித்திடும் அந்நாளை தேடிடும்

பாடல் கேட்டாயோ
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்

மலர்ந்ததே முத்தான உணர்வுகள்

திறந்ததே தன்னாலே கதவுகள்

நமக்கு முன்னாலே

(மனதிலே..)



தேகம் இப்போது உணர்ந்தது

தென்றல் என் மீது படர்ந்தது

மோகம் முன்னேறி வருகுது முன்னே

( கொஞ்ச சாங் ஓடட்டும் நாம அதுக்குள்ள மதுசூதனன் பத்தி தெரிஞ்சுக்கலாம் )
மதுசூதனன் மாதவ் கிருஷ்ணன் பேருக்கு ஏற்ற மாதிரி அவனோட கேரக்ட்டர் என்று நான் சொல்லமாட்டேன் ஏன் என்றால் அவன் அப்படியே அதற்கு எதிர்மாறாக இருப்பான்..ஆறடி உயரம் ,திரண்ட தோள்களும் கூர்மையான கண்களும் யாரையும் பார்வையாலே தள்ளிவைக்கும் பழக்கத்தை கொண்டவன். அவன் வாழ்வில் பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் தான் அதிகம்(அதுக்கும் காரணம் இருக்கு பின்னாடி பார்போம் )
தொழில் துறையில் முன்னேறி கொண்டிருக்கும் 27 வயது இளைஞன் (இவனின் மறுபக்கம் யாரும் அறியாத ஒன்று )
மது தன் சிந்தனை முழுவதையும் தன்னை காப்பற்றியவள் மீதே வைத்திருந்தான்....ஏனோ அவள் கண்ணில் தெரிந்த பரிதவிப்பைக் கண்டவன் தன் உயிர் தன்னை விட அவளுக்கு முக்கியம் என்பதை அவளது விழிகள் தனக்கு உணர்துவதை உணர்ந்தான்...
முதன் முதலாக அந்த கருமை விழிகளில் கட்டுண்டான்.தன் மீதான கோபத்தை,உரிமையை அவள் விழிகளின் ஓரத்தில் வழிந்த கண்ணீரிலும்,பேசிய வார்த்தையிலும் உணர்ந்தான்..(அதாங்க அவ திட்டுனத சொல்றான் ) அவள் தன்னிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டான்..(என்னமோ அவார்ட் வகுந்த நினைப்பு )
இரவெல்லாம் அவளை பற்றியே நினைத்து அதி காலையில் தான் கண்ணயர்ந்தான்...
அவளோ அவனை பற்றி சில நேரம் தா நினைச்சா அதுவும் அவன பார்த்தா சாரி கேட்கனும்னு மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு அலட்சியமா விட்டுட்டா (அத பத்தி அவ அப்பவே யோசிசுருந்தா ஏன் அப்படி பெசுநோம்னு அவளுக்கே புரிஞ்சுருக்கும் )
மகிக்கு இன்று எழுந்ததிலிருந்தே எதோ நடக்க போகுதுன்னு உள் உணர்வு சொல்லி கொண்டே இருந்தது இருந்தாலும் அத வெளி காட்டாம உற்சாகமா காலேஜுக்கு தயாரானாள்
மது இரவில் சரியாக துங்காததால் காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்தான். தான் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி கூட செய்யாமல் குளியலறைக்குள் புகுந்தான்
குளித்து முடித்து வந்தவன் நேராக தன் ஆளுயர கண்ணாடி முன் நின்றான் .முன்பெல்லாம் கண்ணாடி முன் நிற்க நேரமில்லாமல் அலுவலகம் சென்று விடுவான் இன்றுதான் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்தான்..மதுவுக்கோ இன்றுதான் புதிதாக பிறந்துள்ளோம் என்ற உணர்வு.
காலையில் இருந்தே மனதிற்குள் ஏதோ இனம் புரியாத பரவசம் பரவுவதை உணர்ந்தான..
எதனால் இந்த உணர்வு இதற்கு முன் நான் இப்படி உணர்ந்ததில்லையே எல்லாம் அந்த ராட்சசினால எப்படி மிரட்றா எல்லோரையும் இப்படித்த மிரட்டுவா போல சரியான சொர்னாக்கா என தனக்குதானே பேசி சிரித்துகொண்டான்..
அதே புன்னகையுடன் கீழே இறங்கி வந்தவனை வாயை பிளந்துகொண்டு ஆ என பார்த்தான் சந்த்ரு அவன் மட்டுமில்லை மது வீட்டில் வேலை செய்யும் அனைவரும் அப்படிதான் பார்த்தனர்.
சந்த்ரு அறிந்த வகையில் மதுவின் முகத்தில் புன்னகையை பார்த்ததில்லை தேவை என்றால் கூட சிறு கீற்று போல் புன்னகை புரிபவன் இன்று இவளோ சந்தோசமாக இருப்பதை பார்த்து அவன் கண் கண்ணீரில் தேங்கி நின்றது அதை அவன் அறிய வண்ணம் துடைத்துக்கொண்டு கடவுளிடம் எப்பவும் இவன் இப்படியே சந்தோசமா இருக்கணும்னு வேண்டிகொண்டான் ..
அவன் அருகில் வந்த மதுவிடம் சந்த்ரு
“என்னடா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க போல” என்று கேட்டான்
அதற்கும் அவன் சிரித்துகொண்டே “அப்படியெல்லாம் இல்ல டா நீ இன்னைக்கு ஆபீஸ்க்கு முன்னாடி போ நான் வேறொரு இடத்துக்கு போகணும் வர லேட்டாகும்”என்று சொன்னவனை ஆச்சர்யமாக பார்த்தான் சந்துரு (ஏன் என்றால் சந்துரு இல்லாம மது எங்கயும் போனதில்ல அதான் )
“ஓகே டா “ என்றான் சந்துரு
மது காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றவன் ஓரிடத்தில் நிறுத்தினான்
தங்கள் முன் கார் வந்து நிற்பதை ஆச்சர்யமாக பார்த்தார்கள் மகியும்,சபியும் ...
அதிலிருந்து இறங்கியவனை பார்த்த மகியோ ஒரு நிமிடம் யோசனையில் சுருங்கி பின் விழிஅகல பார்த்தாள்
உருகுதல் தொடரும் ............................................................
 
Last edited:

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#5

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#9
fnds UUK-6 main scene oru mistake irunthathu ippo maathiten keela iruka linkah padinga sorry fnds
UUK-6
Uuk 6
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#10
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.