உறவுகள் மேம்பட...

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
உறவுகள் மேம்பட...

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி
மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,
ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்.

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசி கொண்டேயிருப்பதை விடுங்கள்.
3. எந்த விஷயத்திலும் பிரச்சினைகளையும் நாசுக்காக கையாளுங்கள். விட்டு கொடுங்கள்.
4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
5. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
8. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லி கொண்டிருக்காதீர்கள்.
9. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
11.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
12. மற்றவர் கருத்துக்களில் செயல்களில் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
13. மற்றவர்களுக்குரிய மரியாதை கட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
14. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
15. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத, மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
16. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#4
ஒவ்வொரு தனி மனிதனும் பழகிக்கொள்ள வேண்டிய விஷங்கள்.
Human Ethics என்றே கூட சொல்லலாம்.
நல்ல கருத்தாக்க சிந்தனைகளை தன் பதிவுப் பகிர்வின் மூலம் தூண்டிய லதா -விற்கு நன்றிகள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.