உறவு, நட்புக்களின் அருமை !!

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
ஓர் தனவந்தர், "என்னிடம் எல்லாமே இருக்கிறது, யார்துணையும் எனக்கு அவசியம் இல்லை,நான் இடும் பணிகளை செய்ய என் பணியாட்கள் காத்துக்கிடக்கிறார்கள்.நான் ஏன் என் சொந்தங்களையோ, நன்பர்களையோ,மற்றவர்களையோ மதிக்க வேண்டும்" என்று இருமாப்புடனும், ஆணவத்துடனும் இருந்தார்.


ஒருநாள் அவர் ஓர் சாதுவை சந்திக்க நேர்ந்தது.

அந்த சாதுவிடமும் அவர் மிகவும் ஆணவமாய். தனக்கு நிகர் இங்கு யாருமே கிடையாது, இங்கு தான்வைத்தது தான் சட்டம்

என்று இருமாப்புடனும்,தற்பெருமையுடனும்,சொல்லிக்கொண்டிருந்தார்.


எல்லாவற்றையு
ம்
கேட்டுக்கொண்டிருந்த சாதுவுக்கு, " எப்படியாவது இவருக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்"
என்று தோன்றியது.


அந்த சாது தனவந்தரை தன்னுடன் ஒருநாள் வந்து இருக்கும்படி கூறினார்.அதற்கு
அவரும் சம்மதித்தார்.

தனவந்தர் மறுநாள் காலையில் சாதுவின் குடிலுக்கு வந்தார்.இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு அந்த சாது, "வாருங்கள் நாம் சற்று நடந்து விட்டு வரலாம்" என்று கூறி தன்வந்தரை அழைத்தார்.

அவரும் சரி என்று கூற இருவரும் நடக்கத்தொடங்கினார்கள்.நடந்து கொண்டே இருந்தார்கள்.

"நாம் எங்கே செல்கிறோம் இப்பொழுதே எனக்கு கால் வலிக்கிறதே!" என்றார் தனவந்தர் .

"இன்னும் கொஞ்ச தூரமாவது நடக்கலாம்" என்று கூறிய சாது வேகமாக நடந்து முன்னே சென்றார்.

இவருக்கோ மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. வெய்யிலோ சுட்டெரித்தது.

"என்னால் இனி தாங்காது.இங்கு எங்காவது நிழல் இருந்தால் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு பிறகு செல்லலாமே" என்றார்.


அதற்கு அந்த சாது "இதோ உங்கள் நிழலே உங்கள் பின் இருக்கிறதே! அதில் அமர்ந்து இளைப்பாருங்களேன்" என்றார்.

"இதில் எப்படி நான் இளைப்பாறுவேன்" என்றார் தனவந்தர்.

"உங்களின் நிழல் கூட உங்களுக்கு உதவ முன் வரவில்லையே! நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களாலோ,அல்லது பணங்களாலோ,எப்படி உங்களுக்கு உதவமுடியும்".என்றார்சாது.


தன்வந்தருக்கு அப்பொழுதுதான் உறவு ,மற்றும் நண்பர்களின், அருமை புரிந்தது.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.