உற்சாகமாக இருப்பதற்கு வர்ணங்கள்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
உற்சாகமாக இருப்பதற்கு வர்ணங்கள்

பொருத்தமான வர்ணங்களே வந்துவிட்ட நோயில் பாதியாவது தீர்க்கும். மனத்துக்குச் சாந்தி தரும். வரக்கூடிய நோய்களையும் கூட ஓரளவுக்குத் தடுக்கும் வல்லமை வர்ணங்களுக்கு உண்டுதான்.

நம் வாழ்க்கையில் வர்ணங்கள் எவ்வளவு முக்கியமானவை தெரியுமா? நம்மில் அநேகம் பேருக்கு இது தெரியாது.

ஆகாயம் நிர்மல நீலமாகச் சூரிய ஒளியுடன் விளங்கும்போது உள்ளத்தில் ஊக்கம் ஏற்படுகிறது. ஆனால் மப்பும் மந்தாரமுமாகப் பொழுது விடியும்போதோ மனதுக்குச் சோர்வு மூள்கிறது. அதிலும் நோயாளிகளுக்கு ஊக்கம் இன்னும் குன்றிச் சோர்வு ஏற்பட்டுவிடும்.

வர்ணங்களைப் பற்றி ஆராயும் பிரிட்டிஷ் கலர் கவுன்சில் என்ற சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், வீட்டுக்குள் சுவருக்குச் சிவப்பு வர்ணம் அடித்திருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் மிகுதியாகும் என்றும் உணர்ச்சி வேகம் காரணமாக ஒரு நிலையில் இல்லாமல் பரபரப்பும் எரிச்சலும் கொண்டிருக்கும் நோயாளிகள் சச்சரவிடத் தொடங்கிவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.

நீல வர்ணம் அடித்திருந்தால் குளுகுளு என்று இருப்பது போல் ஒருவித அமைதி ஏற்படுகிறது.

அதிக மஞ்சள் கலப்பில்லாத லேசான பச்சை, நோயாளிக்கு இதமாக இருப்பதோடு உற்சாகமும் ஊட்டும்.

அம்பர் நிறம் என்று சொல்லக்கூடிய மஞ்சள் வகை மன நோய்க்காரர்களுக்கு இதம் தரும்.
சுவர் அலங்காரம் மிகுதியாக இராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் நோயாளிக்கு ஏதோ பாரம் தம்மை அழுத்துவது போல் கவலை மூண்டுவிடும். குழந்தைகளுக்கோ அவைகளைப் பார்த்தால் திகில் மூளும்.

இரண்டு மூன்று நாள் ஜுரம் மட்டுமே இருந்தால் இப்படி வர்ணம், அலங்காரம் எல்லாம் அவசரப்பட்டு மாற்றி அமைக்கத் தேவையில்லை. சற்று யோசித்து சொந்த யுக்தியைப் பயன்படுத்தினால் போதும். படுக்கை விரிப்பு கவர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதில்தான் பாதியளவு சிரமமும் இபுருக்கிறது. டிராஃப்ட் (வரைந்து பிளான் எடுக்கும்) ஸ்கிரீனில் பத்திரிகைகளிலிருந்து கத்தரித்து எடுத்த படங்களைப் பசை தடவிய பளிங்கு போன்ற கடிதத் துண்டால் ஒட்டி வைத்தால், பார்வைக்குப் புது தினுசாகவே இருக்கும்.

குழந்தைகளுக்கு இப்படிக் கத்தரித்து எடுப்பதென்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படங்களை அடிக்கடி மாற்றி அமைக்கலாம். ஒரு நாள் மிருகங்களின் படங்கள் கண்காட்சியாக ஒட்டி வைக்கலாம். இன்னொரு நாள் பலர்களின் படங்கள் ஒட்டி வைக்கலாம். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே போகலாம்.

ஜன்னலுக்கு அருகில் ஒரு கண்ணாடி தொங்க விட்டிரந்தால் வெளியில் நடப்பதையெல்லாம் நோயாளி கவனிக்க வசதியாக இருக்கும். மரங்களின் பசுமை, தெருவில் போவோர் வருவோரின் ஆடை நிறம், பளிச்சென்ற வெயில் ஒளி, மேகம் எல்லாவற்றையும் நோயாளி தம் அறையிலிருந்து கவனிக்கலாம்.

மலர்கள் அவசியம் அறையில் இருக்க வேண்டும். ஆனாலும் அவையும் மிதமிஞ்சி இருக்கக்கூடாது. பறித்தெடுத்த மலரை விடச் செடியையே அறையில் வைத்திருப்பது நல்லது. நோயாளி தாமே அதைப் பாதுகாத்துப் புதுப்புது மலர்கள் அரும்புவதைத் தாமே சின்னஞ்சிறு தோட்டம் போட்டு, அதைக் கவனித்து வந்தால், உடல் விரைவில் குணமாகும். மேனியில் பளபளப்பும் வாழ்வில் விருப்பமும் ஏற்படும்.

பசி மந்தித்து விட்டவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது அவசியம். இந்த விஷயத்திலும் வர்ணம் முக்கியமாகும். சின்னப் பூக்கிண்ணம் ஒன்றை அழகிய சிறு மேஜை விரிப்பில் வைத்து, அருகே வண்ணப் பீங்கான் கூஜா, தட்டு இவைகளையும் பொருத்தமாக வையுங்கள். கறிவேப்பிலை, பச்சை மிளகுக் கொத்து, இது மாதிரி ஏதாவது ஒன்றை, மசித்து உருளைக் கிழங்கு, அவரைக் கறி இவற்றுடன் பரிமாறுங்கள். மணமில்லாது தோன்றும் காலிஃப்ளவர் மட்டும் வேண்டாம்.

இன்னொரு கிண்ணத்தில் முட்டையும் பாலும் கலந்த மணமான அவியலின் மேலோ, ஐஸ்கிரீம் மேலோ சிவப்பு ஜெல்லிக் குழம்பு ஒரு கரண்டி அளவு போட்டு, வைத்து பாருங்கள். பாலை வர்ணக் கண்ணாடிக் கோப்பையில் வைத்துக் கொடுங்கள். அதிலிருந்து உறிஞ்சுவதற்கு வசதியாக அழகான பிளாஸ்டிக் குச்சிகளையும் தாருங்கள்.

பல மாத காலம் நோயுற்றுக் கிடந்தால், இன்னும் அக்கறை எடுத்துக் கொண்டு ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும். வெவ்வேறு நிறமுள்ள திரை, படுக்கை விரிப்பு இவைகளைப் போட வேண்டும். அடிக்கடி இவைகளைச் சலவைக்கு அனுப்ப வேண்டும்.

பலவகைச் சித்திரங்களைச் சுவரில் மாட்டி வைக்கலாம்.

வெளுப்பு நிறத்தால் அதுவும் இரவில் கண்ணுக்குச் சலிப்பே ஏற்படும். ஆகவே, படுக்கையருகில் ரோஜா நிற ஷேட் விளக்க இருப்பதே நல்லது.

கடைசியாக, அழகான படுக்கை ஜாக்கெட்டும், ஒரு ஸ்டாண்டில் நல்ல நிலைக் கண்ணாடி ஒன்றும் இருந்தால் போதும். பெண்களுக்கு அவர்கள் இளம் பெண்களாயிருந்தாலும் சரி, வயசு ஆனவர்களாயிருந்தாலும் சரி சோர்வு நீங்க உற்சாகம் ஏற்படும்.

-Manjari

Ganga
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.