உலகின் முதல் மேயராகுமா இந்த ரோபோ?

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,848
Likes
75,285
Location
Chennai
#1
1523869932901.png


னிதர்களின் வேலைகளை ரோபோக்கள் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிவிட்டது. ரோபோக்கள் அரசியலில் குதித்து, அரசாங்க நிர்வாகத்திலும் பங்கேற்கும் நாள் தொலைவில் இல்லை. சாமுராய், விடுதி வரவேற்பாளர், தொழிற்சாலை ஊழியர் போன்ற பணிகளில் ரோபோக்களை ஜப்பானியர்கள் ஏற்கெனவே கொண்டுவந்துவிட்டனர். ஆனால் சட்டப்பூர்வமான அரசாங்கப் பணிகளில் இதுவரை எந்த ரோபோவும் வேலை செய்யவில்லை. தற்போது ஜப்பானின் டாமா நகரில் நடைபெறும் மேயர் தேர்தலில் மனிதர்களுடன் சேர்ந்து முதல் முறையாக ரோபோவும் களத்தில் குதித்திருக்கிறது. ரோபோவை தேர்தலில் இறக்கியிருக்கும் 44 வயது மிச்சிஹிடோ மட்சுடா, 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மேயர் தேர்தலில் நின்று தோற்றார். இந்தத் தேர்தலில் தான் நேரடியாக இறங்காமல், ரோபோவை இறக்கியிருக்கிறார். “உலகிலேயே மேயர் தேர்தலில் நிற்கக்கூடிய முதல் ரோபோ இதுதான். இந்த நகரத்தைப் பற்றிய அத்தனை விஷயங்களும் ரோபோவுக்குத் தெரியும். நியாயமான, பாரபட்சம் இல்லாத, துரிதமாக வேலை செய்ய, வேகமாக முடிவெடுக்க இந்த ரோபோவால் முடியும். மனிதர்களை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரு முறை இந்த ரோபோவுக்கு வாக்களித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்வீர்கள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறார். நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் வேட்பாளர்கள் படங்களுடன் ரோபோவின் படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரச்சாரத்திலும் ரோபோ ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் தேர்தலில் நிற்கும் ரோபோவை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ரோபோ மேயரானால் ஊழல் குறையும் என்றும் நல்ல நிர்வாகம் அமையும் என்றும் கருதுகிறார்கள். இது தேர்தல் ஏமாற்று வேலை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஏப்ரல் 15 தேர்தல் நடக்கிறது. இதில் ரோபோ வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படலாம்.
உலகின் முதல் மேயராகுமா இந்த ரோபோ?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.