உலகின் வயதான மனிதர்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,848
Likes
75,302
Location
Chennai
#1
ஜப்பானின் மசாசோ நொனாகா: கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம்டோக்யோஉலகின் வயதான மனிதர் என்பதற்கான உலக சாதனை அமைப்பின் சான்றிதழை பெற்றுக்கொண்ட மசாசோ நொனாகா. - படம்: ராய்ட்டர்ஸ்ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள அஷோரா நகரில் வசிக்கும் மசாசோ நொனாகா, 1905 ஜூலை 25-ம் தேதி பிறந்தார். இவர் உலகின் மிக வயதான மனிதர் (112 வயது) என கின்னஸ் உலக சாதனை அமைப்பு நேற்று முன்தினம் அங்கீகரித்தது. இதற்கான சான்றிதழை இந்த அமைப்பின் அதிகாரிகள் மசாசோவின் வீட்டுக்கே சென்று வழங்கினர்.இதுகுறித்து மசாசோவின் பேத்தி யுகோ கூறும்போது, “எனது தாத்தா நலமாக உள்ளார். இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். தினமும் செய்தித்தாள் படிக்கிறார்” என்றார்.மசாசோவுக்கு 7 சகோதரர்கள் 1 சகோதரி உள்ளனர். மசாசோ 1931-ல் ஹட்சுனோ என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என கின்னஸ் தெரிவித்துள்ளது.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,848
Likes
75,302
Location
Chennai
#2
உலகின் வயதான மனிதர்: ஆரோக்கியத்தின் ரகசியம் - 112 வயதிலும் ‘இனிப்பு’இன்று காலை ஜப்பானில், மாசாஸோ நொனாகா வீட்டுக்கே சென்று உலகின் வயதான மனிதருக்கான பட்டயத்தை வழங்கி கௌரவித்தது கின்னஸ் | படம்: கின்னஸ் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ்ஜப்பானைச் சேர்ந்த 112 வயதுமிக்க, பழுத்த மனிதரான மசாஸோ நொனாகா, உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது ஆரோக்கியத்தின் ரகசியத்துக்குக் காரணம் இனிப்புப் பலகாரங்களும் வெந்நீர் குளியலும்தான் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.நொனாகா 1905 ஜூலை 25ல் பிறந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்ப்புத்துவக் கொள்கை ( தியரி ஆப் ஸ்பெஷல் ரிலேடிவிடி) கண்டுபிடித்த சில மாதங்களுக்கு முன்ம்புதான் அவர் பிறந்தார்.ஜப்பானில் உள்ள வடக்குத் தீவு ஹொக்காய்டோவில் உள்ள அவரின் வீட்டுக்கே வந்து 'கின்னஸ் வேர்ல்ட் ரிக்காட்ஸ்' அமைப்பு வழங்கிய உலகின் வயதான மனிதர் என்ற சான்றிதழை இன்று காலை அவர் பெற்றுக்கொண்டார்.நூற்றாண்டைக் கடந்த மனிதர் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு சூடான நீரூற்று குளியல் விடுதியையும் நடத்திவருகிறார்.''அவர் செல்வதற்கு ஒரு சக்கர நாற்காலி தேவை. அதேநேரம் அவர் நல்ல நிலையில் இருக்கிறார்'' என்கிறார் யூகோ நொனாக்கா, அவரது பேத்தி.நொனாகாவின் பேத்தி மேலும் கூறுகையில், அவர் ஜப்பானிய அல்லது மேற்கத்திய எந்தவகையான இனிப்புகளையும் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொருநாளும் செய்தித்தாள்களை அவர் வாசித்துவிடுவார். அடிக்கடி வெந்நீர் குளியலில் மூழ்கிவிடுவார். என்றார் ஏஎப்பியிடம்ஹொகாய்ட்டோ தீவில் அஷோரோ நகருக்கு அருகே வசிக்கும் நொனாக்கோவுக்கு 7 சகோதரர்கள் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.அவர் 1931ல் ஹட்சுனோ என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 குழந்தைகள் என்கிறது 'கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ்'.உலகின் வயதான மனிதர் என்று இதற்குமுன் அறிவிக்கப்பட்டிருந்த ஸ்பெயினைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ நனேஸ் ஆலிவெரா என்பவர் கடந்த பிப்ரவரியில் தனது 113 வயதில் காலமானதை அடுத்து அந்தப் பட்டத்தை அதிகாரப்பூர்வமாக நொனாக்கா பெற்றுள்ளார்.கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்டு தற்போது உலக அளவிலான சாதனைக்காக அதற்கு பொருந்திவரும் போட்டியாளர்களை தொடர்ந்து தேடி விசாரித்து வருகிறது.ஜப்பானில் மட்டும் கிட்டத்தட்ட 100 வயதைக் கடந்தவர்கள் 68,000 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.