உலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#1
1525443198048.png

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நேற்று (மே 3) ஜியோ இன்டெராக்ட் (JioInteract) எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தளத்தை துவங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ செயலிகளில் ஏற்கனவே ஹெச்டி வீடியோ கால்கள் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய முடியும். இவர் 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்ரப்படுத்துவார் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.6 கோடி வாடிக்கையாளர்களையும், சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்டிருப்பதாக ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ இன்டெராக்ட் சேவை திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும், பிரான்டு ஊக்குவிக்கவும் முன்னணி தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் வாரங்களில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால் சென்டர்கள், வீடியோ கேடேலாக், விர்ச்சுவல் ஷோரூம்கள் உள்ளிட்டவற்றை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் ஜியோவின் புதிய தளம் உலகில் முதல் முறையாக துவங்கப்பட்டிருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது.

மே 4, 2018 முதல் ஜியோ இன்டெராக்ட் சேவையை கொண்டு ஜியோ மற்றும் இதர ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அமிதாப் பச்சனுக்கு வீடியோ கால் மேற்கொள்ள முடியும். வீடியோ கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் 102 நாட் அவுட் திரைப்படம் குறித்த தகவல்களை கேட்டறிந்து கொண்டு, திரைப்படத்திற்கான டிக்கெட்களை புக்மைஷோ மூலம் முன்பதிவும் செய்ய முடியும்.

சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோவின் புதிய சேவை வாடிக்கையாளர்கள் கேள்விகளை மிக உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு சரியாக பதில் அளிக்கும். இத்துடன் அதிக கேள்விகளை கேட்கும் போது கேள்விகளில் இருந்து பாடம் கற்கும் முறையை ஜியோ இன்டெராக்ட் கொண்டிருக்கிறது என்றும், காலப்போக்கில் இது பதில்களை மிகவும் நேர்த்தியாக வழங்கும் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜியோ இன்டெராக்ட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

முதலில் மைஜியோ செயலியை டவுன்லோடு செய்யவும்

இனி மைஜியோ செயலியில் காணப்படும் ஜியோ இன்டெராக்ட் சேவையை கிளிக் செய்யவும்

அடுத்து வீடியோ கால் துவங்கி அமிதாப் பச்சனுடன் உரையாடலாம்

கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ கால் அனுபவத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஷேர் ஆப்ஷன் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#2
1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது.

சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.

விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஃபைபர் சேவை துவங்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.கூடுதலாக வழங்கப்படும் 1000 ஜிபி டேட்டாவும் 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஜியோ ஃபைபர் சேவைகள் ஒரே கட்டமாக பொது பயன்பாடு மற்றும் வணிக ரீதியிலும் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய பிரீவியூ சலுகைகளில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டதாகவும், இலவச டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துவக்கத்தில் ஜியோ ஃபைபர் இணைப்புக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.4500 வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைகாட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தலைமை தி்ட்ட வல்லுநர் அனுஷ்மன் தாக்குர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், ஃபைபர் சேவைகள் அதிவேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#3
ரூ.199 விலையில் அசத்தல் சலுகைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் புதிய போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகையில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இன்டர்நெட், சர்வதேச அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய போஸ்ட்பெயிட் சலுகை விலை ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 25 ஜிபி டேட்டா, சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் மற்ற போஸ்ட்பெயிட் திட்டங்களை போன்று இல்லாமல், கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் மாத இறுதியில் கட்டண விவரத்தை இன்பாக்ஸ்-லும் பெற முடியும். புதிய சலுகையை பயன்படுத்துவோர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் சேவை சீராக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.ஒரு கிளிக் மூலம் சர்வதேச ரோமிங் சேவையை ஆக்டிவேட் செய்யும் வசதி கொண்ட ஜியோ சீரோ-டச் சலுகையில் கட்டணங்கள் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு ரூ.2, ஒரு எம்பி டேட்டா ரூ.2, எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.2 என்றும் அன்லிமிட்டெட் சலுகைகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 (வரிகள் தவிர்த்து) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, கிரீஸ், போர்ச்சுகல், ரோமானியா, செக் குடியரசு மற்றும் ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகை மே 15-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#4
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக ஜியோ அறிமுகப்படுத்தும் ‘டிஜிட்டல் சாம்பியன்கள்’ திட்டம்


உலகின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ, தற்போது 'டிஜிட்டல் சாம்பியன்ஸ்’ எனும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதுடன் அதன் செயல்முறைகளில் ஆர்வமுடைய இன்றைய இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் 5 வார காலப் பயிற்சி வகுப்புகளை உள்ளடக்கி இந்த 'டிஜிட்டல் சாம்பியன்ஸ்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியானது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக அவர்களை டிஜிட்டல் சாம்பியன்களாக உருவாக்கி, அவ்வகையில் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் உதவுகிறது.

இந்தப் பாடதிட்டத்தின் மூலம், டிஜிட்டல் டெக்னாலஜி பற்றிய முழுமையான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி, வருங்காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களில் இந்த டிஜிட்டல் தொழில்முறைகள் (SMBs) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.

ஒரு டிஜிட்டல் கருவியின் மூலம் மாணவர்களுக்கு சிக்கல்களைத் தீர்க்கும் முறைகள் வழிநடத்தப்படும். இப்பயிற்சியினால் மாணவர்கள் நேரடியாக இதன் நடைமுறை பயன்பாடுகளைக் கற்றுக் கொண்டு, அதற்குரிய தீர்வுகளையும் கண்டடையும்படியாக திறமையுடன் செயல்படுவார்கள்.

ஜியோ இந்த டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டத்தை மே 21, 2018-லிருந்து தொடங்குகிறது. அதன் முதல் கட்டமாக, நாடெங்கிலும் 4 குழுக்களுக்கு பயிற்சி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி திட்டமும் 5 வாரங்கள் வரை நீடிக்கும். 800-க்கும் மேற்பட்ட நகரங்களிலுள்ள பயிற்சி மையங்களை பட்டதாரி மாணவர்கள் (undergraduate students) தங்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டத்தில் இணைய இந்தச் சுட்டியில் பதிவு செய்யலாம் https://careers.jio.com/Champions.aspx
ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்ற வகையில், வளர்ந்து வரும் டிஜிட்டல் டெக்னாலஜிகளால் கிடைக்கக் கூடிய புதிய நல்வாய்ப்புகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பெற விரும்புவதை ஜியோ அறிந்து வைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை பல்லாயிரம் இளநிலை பட்டதாரிகளுக்கு வழங்குவதன் மூலம், நாளைய டிஜிட்டல் இந்தியாவில் SMB-களின் வளர்ச்சிக்கு தேவையான டிஜிட்டல் நிபுணத்துவமுடைய திறமையான குழுவொன்றினை ஜியோ உருவாக்கிவிடும் என்பது நிச்சயம்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,293
Likes
545
Location
chennai
#5
1.5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

1528886606843.png

ரிலையன்ஸ் ஜியோ டேட்டா சலுகைகள் இந்த ஆண்டு துவக்கத்தில் மாற்றியமைக்கப்ப்டடன. எனினும் ஏர்டெல் சமீபத்தில் அறிவித்த கூடுதல் சலுகைகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜியோ டபுள் தமாக்கா என அழைக்கப்படும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 சலுகைகளில் கூடுதல் டேடட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில், ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜியோ டபுள் தமாக்கா சலுகையுடன் ரூ.499 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் அதிக வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ டபுள் தமாக்கா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.449 சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும்.இத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.198, ரூ.398 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இதேபோன்று ரூ.299 (தினமும் 3 ஜிபி), ரூ.509 (தினமும் 4 ஜிபி) மற்றும் ரூ.799 (தினமும் 5 ஜிபி) சலுகைகளில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் முறையே 4.5 ஜிபி, 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ.499 சலுகையில் 91 நாட்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 விலையில் அறிவித்த சலுகையின் விலை சமீபத்தில் ரூ.449 ஆக குறைத்தது. முன்னதாக பயனர்கள் பெற்றிருந்த வவுச்சர்களை பயன்படுத்தி புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

மேலும் ரூ.300-க்கும் அதிக விலை கொடுத்து மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து போன்பெ மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.300-க்கும் குறைந்த கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.