உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப&#29

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்பர் 29

உலகம் முழுவதும் செப்டம்பர் 29-ம் தேதியன்று "உலக இதய நல விழிப்புணர்வு தினம்' கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே இதயத் தசையின் செயல்பாடு-அதில் ஏற்படும் பிரச்னை, இதயத்துக்கு உதவும் துணை ரத்தக் குழாய்கள் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#2
Re: உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப

இதய ரத்த ஓட்டத்தை சீர் செய்ய...

இதயத்திலிருந்து செல்லும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், மகாதமனி ("அயோட்டா') வழியாக உடலில் உள்ள எல்லா திசுக்களையும் சென்றடைவதைப் போல இதயத்தின் தசைகளையும் வந்தடைய வேண்டும். இதயத் தசைகளை ஊட்டப்படுத்துவதற்காக "அயோட்டா'வின் அடியில் இதய ரத்தக் குழாய் ("கரோனரி ஆர்ட்டரி') பிரிந்து செல்கிறது.

இதயத்தின் வலது "கரோனரி ஆர்ட்டரி', இதயத்தின் வலது வெண்ட்ரிக்களுக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது. அங்கிருந்து இடது "கரோனரி ஆர்ட்டரி' இரு ரத்தக் குழாய்களாக பிரிந்து ஒன்று உடலின் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை அனுப்புகிறது.

மற்றொரு ரத்தக் குழாய் இதயத்தை இயக்கப் பயன்படுகிறது.

உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், திசுக்கள், செல்கள் ஆகிய அனைத்துக்கும் ரத்தத்தை அனுப்பும் வகையில் இதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது உடலில் உள்ள ரத்தம் எனும் சிவப்பான திரவம் பல செல்களால் ஆன ஒரு திசுவாகும். ரத்தத்தில் 22 சதவீத அளவுக்கு செல்களும் 78 சதவீத அளவுக்கு நீரும் இருப்பதால்தான் அது அடர்த்தியாக உள்ளது. பல பணிகளைச் செய்கிறது. மேலும் அதில் பிளாஸ்மாவின் அளவும் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டணுக்கள் என மூன்று வகை அணுக்கள் உள்ளன.

மேலும் ரத்தத்தில் கொழுப்பு, மாவுச் சத்து, புரதம், ஹார்மோன்கள், வாயுக்கள், ஆக்ஸிஜன், கார்பன்டைஆக்சைடு, நைட்ரஜன் போன்றவை காணப்படும். இவையனைத்தும் சேர்த்து உடலுறுப்புக்களுக்கு உயிரூட்டி இயக்குகிறது.

"கொலேட்ரல் ரத்தக் குழாய்' என்பது நமது வழக்கமான கரோனரி பாதையைப் போன்ற மாற்றுப்பாதை ஆகும்.

இயல்பான நேரத்தில் இதயத்தில் கரோனரி குழாய்கள் மூலம் ரத்தம் செல்லும். ஆனால் கரோனரி ரத்தக் குழாய் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுருங்கும் நேரத்தில் கொலேட்ரல் ரத்தக் குழாய் மூலம் இதயத்துக்கு ரத்தம் சென்றடையும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#3
Re: உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப

இந்த மாற்றுவழிப் பாதையை வேலை செய்ய வைக்க ஸ்டென்ட் பைபாஸ் போன்ற எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை.

தற்போது அறுவைச் சிகிச்சையில்லாமல், மாற்று சிகிச்சை முறையில் ("நான்-இன்வேஸிவ்') வலியில்லாமல் மருத்துவமனையில் தங்கும் அவதியில்லாமல் வெளி நோயாளியாக மட்டுமே சிகிச்சை பெற்று இதய பாதிப்பைச் சரி செய்து கொள்ளலாம்.

சென்னையில் உள்ள ஆக்ஸிமெட் மருத்துவமனை, நியூயார்க் வேசோமெடிடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த அறுவை சிகிச்சை அல்லாத மாற்று சிகிச்சை முறையை திறம்படச் செய்து வருகிறது.

மேலும், உலக இதய நல விழிப்புணர்வு தினத்தை (செப்.29) முன்னிட்டு, ஆக்ஸிமெட் மருத்துவமனையில் இதய பரிசோதனைகளாக 3டி ஆஞ்சியோ கார்ட்டோகிராபி, எக்கோ கார்டியோகிராம், இசிஜி, ரத்தப் பரிசோதனைகள் ஆகியவை 50 சதவீத சலுகையுடன் வழங்க உள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முதியோரும், ஆஞ்சியோகிராம் செய்ய பயப்படுபவர்களும், அறுவைச் சிகிச்சைக்குப் பின் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களும், இதய நோய் அல்லாதவர்களும் இதயத்தின் தற்போதைய நிலையைக் கண்டறியலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#4
Re: உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப

இதய நோயாளிகள் கவனிக்க...

இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே பெரும்பாலான இதய நோயாளிகளின் பிரச்னையாக உள்ளது.

ரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருவதற்கும் பாதிக்கப்படுபவரின் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்:-

எந்த எண்ணெய் நல்லது?

1. வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.

2. கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

3. பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.

4. எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்ûஸடு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து உள்ள இதய நோயாளிகளுக்கென்றே, கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

5. அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் கொலஸ்டிரால் உள்ளது. இதனால் இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம். இதய நோயாளிகள் கோழிக்கறி, மீன் சாப்பிடலாம்; ஆனால் அவற்றை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்ட மீன் அல்லது குழம்பில் போட்ட கோழிக்கறி சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே இவற்றைச் சாப்பிடலாம்.

6. அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

7. கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.

8. நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
தேவை கலோரி மதிப்பீடு:

மேற்சொன்ன உணவு முறைகள், நோயாளிகளுக்கு பொதுவான உணவுத் திட்ட முறைகள். ஒவ்வொரு இதய நோயாளியின் உயரம், எடை, "பாடி மாஸ் இண்டக்ஸ்' (பி.எம்.ஐ. அட்டவணை), அன்றாட அவரது வேலை ஆகியவற்றைப் பொருத்து, ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு உணவு மூலம் எவ்வளவு கலோரிச் சத்து தேவைப்படும் என்பதை உணவு ஆலோசனை நிபுணர் மதிப்பிடுவார்.

இத்தகைய கலோரிச் சத்து மதிப்பிட்டைக் கொண்டு ஒவ்வொரு நோயாளிக்கும் குறிப்பிட்ட உணவு முறைத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே பக்கத்து வீட்டு நோயாளி அல்லது நண்பராக இருக்கும் நோயாளியின் உணவு முறையைக் கேட்டு, உணவு நிபுணரின் ஆலோசனை கலக்காமல் உணவுத் திட்டத்தை மேற்கொள்வது தவறானது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#5
Re: உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப

 

vasanthi

Friends's of Penmai
Joined
May 18, 2011
Messages
417
Likes
168
Location
chennai
#6
Re: உலக இதய நல விழிப்புணர்வு தினம்--- செப்டம்ப

migavumubayogamana pagirvu viji
nandri
vasanthi
mct
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.