உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .
முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் .
இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .


எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .


குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்
குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .
எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .


சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.
பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய் , ஓவரி புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் .
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிரபோக்கு குறையும் . ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹோர்மோன் சுரப்பதால் அது கர்பப்பையை சுருங்க செய்து ரத்தபோக்கை குறைக்கும் .


தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோடபடும் , இதன் முலம் அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும்

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#2
தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.


குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்


தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .


ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#3
குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .


( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)


பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .


பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .


பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்

வேலைக்கு செல்லும் தாய் :தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .


சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .


குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,


அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .


எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய் பால்தராமல் இருக்காதிர்கள்

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#4
[h=3]தாய்ப்பால் அவசியம்![/h] [h=2][/h]


இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள்.
அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.
இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக முடி விடுங்கள். பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை 6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை
வைக்கலாம்.வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி முலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

Sumathi Srini
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.