உஷார் ரிப்போர்ட் - கேரி பேக் டேஞ்சர்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
உஷார் ரிப்போர்ட் - கேரி பேக் டேஞ்சர்

சாலையோர கையேந்திபவன்கள் முதல் ஹோட்டல்கள் வரை உணவு மடித்துக் கொடுக்க பிளாஸ்டிக் பேப்பர்கள், பைகளையே (கேரி பேக்ஸ்) பயன்படுத்துகிறார்கள். எடை குறைவு; விலை மலிவான இந்தப் பொருட்கள் உயிருக்கு உலை வைப்பவை என்பதுதான் ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் தகவல்.
முழுவதும் ரசாயனம் கொண்டு செய்யப்படும், இந்த பிளாஸ்டிக் பைகள், பேப்பர்களில் உணவுப் பொருட்களை வைப்பதால் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு என்கிறார்கள். இது உண்மையா? என்பது குறித்து பிரபல பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.
"பிளாஸ்டிக் பேப்பர், பைகளுக்கு பாலிஎதிலீன் (பி.இ.) தான் மூலப் பொருள். குறிப்பிட்ட வெப்பநிலை, அழுத்தத்தில் இந்தப் பைகள் உருவாக்கப்படும்.
எண்ணெய், பால் உணவு வகைகளை "பேக்' செய்யப் பயன்படும் கவர்களை அதிக அழுத்தம் கொடுத்து தயார் செய்வார்கள். அதனால் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால் குறைந்த அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பேப்பர், பைகளால் நிச்சயம் பிரச்னைதான்!' என்று சொல்லும் அந்த நிபுணர், சூடான உணவுப் பொருட்களை வைக்கும்போது, பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகளில் கலந்துவிடும். தொடர்ந்து உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு, என்கிற எச்சரிக்கையையும் பதிவு செய்கிறார்.
பொதுவாக, 60 டிகிரி சென்டிகிரேட் வரை சூடு தாங்கும் பேப்பர், கேரிபேக்குகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நடைமுறை விதி. ஆனால் கையேந்தி பவன்கள், ஹோட்டல்களில் அத்தகைய கேரி பேக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.
"உண்மைதான். வெப்பநிலை மட்டுமல்ல. கேரிபேக், பேப்பர்களின் தடிமன் அளவும் முக்கியம். அதாவது 40 முதல் 60 மைக்ரான் அளவுள்ள கேரி பேக்குகள் என்றால் பாதிப்பு இருக்காது. மாறாக அளவு 20 மைக்ரான் என்றால் போச்சு. பிரச்னை பெரிதாகிவிடும்!' என்று சொல்கிறார் பிளாஸ்டிக் ரசாயன பகுப்பாய்வு நிபுணர் ஒருவர்.
சரி! பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் "இந்திய கன்சர்ட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சந்தானராஜன் என்ன சொல்கிறார்?
"கேரி பேக், பிளாஸ்டிக் பேப்பர்கள தயாரிப்பதில் பாலிஎதிலீன் மட்டுமல்லாமல் சில வகை அமிலங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இப்போதெல்லாம் கடைகளில் சூடான் டீயைக் கூட பல மணி நேரங்களுக்கு முன்பே கேரி பேக்குகளில் அடைத்து விற்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும்!'' என்கிறார் சற்றே எச்சரிக்கை கலந்த குரலில்.

தடை:
பெரும்பாலான மாநிலங்கள் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பாலிஎதிலீன் கேரி பேக், பேப்பர்களுக்குத் தடை விதித்துள்ள. இருந்தாலும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவில்லை. அதனால் 15 முதல் 20 மைக்ரானுக்கும் (80 காஜ்) குறைவான அளவுள்ள கேரிபேக்குகள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாதிப்புகள்?
* உடலில் அரிப்பு, தடிப்புகள், கொப்புளங்கள்
* மூச்சு விடுவதில் சிரமம்
* ஹார்மோன் சமச்சீரின்மை
* உணவுக் குழாயில் கேன்சர்

- எஸ். அன்வர்
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
நம் முன்னோர்கள் காலத்திலெல்லாம் உண்ணும் உணவே மருந்தாக இருந்தது. தற்போது உண்ணும் உணவு மட்டுமல்லாது (கலப்படத்தால்), அதை தாங்கி வரும் பைகளும் விஷமாகிவிடுகிறது. இதைதான் "வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்" என்று சொன்னார்களோ???

சுமதி ஸ்ரீனி
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
Well said Sumathi...munbu unavae marundhu ippo ??????
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.