எடையை குறைக்க

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மனஇறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.
உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.
இரண்டு தம்ளர் தண்ணீ*ர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் சாப்பாடு உண்ணும் உங்கள் எண்ணத்தை அழித்து உங்கள் உடல் ரசாயனத்தை மாற்றிவிடும்.
(குறிப்பு: உலர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.)
கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.
சாப்பாடு உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனதை பாட்டு கேட்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானிப்புகள் மூலமோ திசை திருப்பலாம்.
பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சாலட் செய்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.
கல்யாண விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு நிறைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது.
உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடலின் ஆரோக்கியத்திற்கும், இளமைக்கும் உடற்பயிற்சி தேவையான ஒன்று. இதற்கென தனியே நேரம் செலவிட இயலாவிடினும் வீட்டுவேலை, படியேறுதல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதே, சிறந்த உடற்பயிற்சியாகும். இவை எவ்வளவு கலோரிகளை எரிக்கின்றன. எவ்வளவு எடையைக் குறைக்கின்றன தெரியுமா? படியுங்கள் கீழே...!
மன அழுத்தம்கூட உடல் எடை கூட காரணமாகலாம். உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்ஃபின் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் டிரிப்போஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சோயா பால் பொருட்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால்தான் நாம் டென்ஷனாக இருக்கும்போது காஃபி குடித்தால் சற்று ரிலாக்ஸ்டாக உணர்கிறோம். இப்போது புரிகிறதா?
வேலை எடுத்துக்கொள்ளும் நேரம் செலவழிக்கப்பட்ட கலோரிகள்/ ஒரு வாரத்துக்கு
எடை குறைவு/ ஒரு வருடத்தில் (கிலோ கிராம்)
மதிய உணவுக்குப் 10 நிமிடங்கள்
பின் ஒரு நடை வாரம் 5 முறை 170 1.25
பயிற்சி:
படியேறுதல் 5 நிமிடங்கள்,
வாரம் 5 முறை 225 1.50
வீட்டுவேலை 2 மணிநேரம்
வாரத்துக்கு 408 3.90
குழந்தைகளுடன் 1 மணி நேரம்
விளையாட்டு வாரம் 3 முறை 612 4.50
தோட்ட வேலை 2 மணி நேரம்
வாரத்துக்கு 712 5.00
நடனம் 2 மணி நேரம்,
வாரத்துக்கு 816 6.00

- koodal
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#2
ஓடி ஆடி வேலைசெய்ங்க உடல் தான சும்மா கும்னு இருக்கும்...
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#3
படியேறுதல் 5 நிமிடங்கள்,
வாரம் 5 முறை 225 1.50
வீட்டுவேலை 2 மணிநேரம்
வாரத்துக்கு 408 3.90
குழந்தைகளுடன் 1 மணி நேரம்
விளையாட்டு வாரம் 3 முறை 612 4.50
தோட்ட வேலை 2 மணி நேரம்
வாரத்துக்கு 712 5.00
நடனம் 2 மணி நேரம்,
வாரத்துக்கு 816 6.00

- idhu ellame odiyadi velaiseiradhudhan Br.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.