எண்ணெய் அறிந்தால்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எண்ணெய் அறிந்தால்........
பொதுவாக, உணவில் எண்ணெய் பயன்படுத்துவது எந்த அளவுக்கு நல்லது? ‘உணவுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயைச் செரிக்கும்திறன் நம் தோலுக்கு மட்டுமே உண்டு’ என்கிறது, இயற்கை மருத்துவம். அதனால்தான் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மரபுவழி மருத்துவங்களில் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து, சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தன. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், வாரம் தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்ததும் இதனால்தான். உடல் செரிக்க வேண்டிய எண்ணெயை, குடலுக்குக் கொடுத்தோமானால் என்ன ஆகும்? செரிமானத்தில் எஞ்சும் கழிவுகளில், பிசுபிசுப்பான அமிலத்தன்மையுள்ள கழிவுகள் உடலில் சேர்வதற்குக் காரணமாக அமையும். எனவே, முடிந்த அளவு எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.

நேரடியாக எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களை, எண்ணெய்ப் பயன்பாடு இல்லாமலேயே பெறுவதற்காக, நம் முன்னோர்கள் ஒரு டெக்னிக் வைத்திருந்தார்கள். எண்ணெய்த்தன்மை உள்ள உணவுப் பொருட்களை நேரடியாகச் சாப்பிடுவதுதான் அந்த முறை. உதாரணமாக, தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறுவதற்காக, தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது. இப்படிச் சாப்பிடும்போது, உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய்த்தன்மையை உடலே ஜீரணம் மூலம் பெற்றுக் கொள்ளும்.

சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு மிகவும் சிறந்தவை. உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை, அமெரிக்காவின் சோயா எண்ணெய் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. அந்தந்த நாடுகளில் வழக்கத்திலிருந்த எண்ணெய் பயன்பாடு மாறி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரீஃபைண்ட் ஆயில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.