எதில் கால்சியம் சத்து உள்ளன?

chan

Well-Known Member
#1
எதில் கால்சியம் சத்து உள்ளன?வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்து. எலும்பு நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பது உள்ளிட்ட சில பணிகளுக்கு கால்சியம் மிகவும் அவசியம். பற்கள் ஆரோக்கியமாக உருவாகவும், தசைகள் மற்றும் இதயம் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ளவும் கால்சியம் அவசியம். நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 மி.கி வரை ஒருவருக்கு கால்சியம் தேவை. ஆனால் 500 முதல் 600 மி.கி கால்சியமே கிடைக்கிறது.

கீரைகள், பால் பொருட்களில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. தினந்தோறும் 300 மிலி பால் மற்றும் தயிர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு உருண்டை, கேழ்வரகு சப்பாத்தி அல்லது தோசை என ஒரு வேளை மட்டும் கேழ்வரகால் தயாரான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கப் அளவுக்கு பச்சைக் காய்கறிகள், கீரை சேர்த்துக்கொள்ளலாம். அகத்தி, முளைக்கீரை, பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை போன்றவற்றில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் சத்துக் குறைபாட்டை முழுமையாய் தவிர்க்கலாம்.