எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?* எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?

* புதிது புதிதா ஏதாவது வாங்கி சாப்பிடாதீங்க

* குண்டாக இருந்தால், ஒபிசிட்டி…ன்னு சொல்லிடறாங்க; ஒல்லியாக இருந்தால் அனிமிக்’குன்னு சொல்றாங்க.

* “புல் கட்டு’ கட்டினா சாப்பாட்டு ராமன்னு பட்டம் தந்திடறாங்க; சாப்பிடாமலே இருந்தா “டயட்’டான்னு கேட்கறாங்க…

* இதைச் சாப்பிடாதே… அதைச் சாப்பிடாதே…ன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியா தர்றாங்க.
இப்படி எல்லாம் ஒரு “மண்டை காய் வைக்கிற’ குழப்பம், பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதுமான சுகாதார விழிப்புணர்வு இப்போது தான் வரத் துவங்கி இருக்கிறது. அதிலும், சிலர் அதிக விழிப்புணர்வுடன், தாங்களே டாக்டராகி விடுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், அவர்கள் மட்டுமின்றி, அடுத்தவர்களுக்கும் தவறான தகவல் தந்து , கடைசியில் தவிக்க வைக்கின்றனர்.

எதைத்தின்னால்…

ஏகப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள், துறை வாரியாக நிபுணர்களின் “டிவி’ பேட்டிகள், அடிக்கடி எச்சரிக்கை தகவல்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. “மால்’களில் உடனடி ரசம், குழம்பு பொடி போய், இட்லி பவுடர் வரை வந்து விட்டது; இன்னொரு பக்கம், காய்கறி, பழங்களுக்கும் கிராக்கி அதிகரித்து வருகிறது.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாலட் கள் முதல் கார்ன் பாட்டில்கள் வரை வாங்கி வேறு சாப்பிடுகின்றனர் சிலர்; இன்னும் சிலர், காலில் “நிக்’ ஷூ, அரை நிஜார், டீ ஷர்ட் அணிந்து, காதில் “வாக்மென்’ மாட்டிக் கொண்டு வியர்க்காமல் நடந்து, டயர் தேய்ந்த தள்ளு வண்டியில் கிடைக்கும் அருகம் புல் ஜூஸ் குடிப்பதும் நகர வாழ்க்கையின் கொடுமை. மொத் தத்தில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என் பது போல பலருக்கும், சாப்பிடும் விஷயத்தில் குழப்பமே மிஞ்சுகிறது.

ஆரோக்கிய உணவு எது?

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இல்லாத பட்சத்தில், உடல் பெருக்காத நிலையில் வழக்கமான உணவு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. சத்தான உணவுகள் என்று பார்த்து காய்கறி, பழங்களை சேர்ப்பது மிக நல்லது.

அசைவ விரும்பியாக இருந்தால், தரமான, ஆரோக்கிய சூழலில் உள்ள அயிட்டங்களை வாங்கி, துல்லியமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் தரம் குறைந்தால் தான் ஆரோக்கிய கேடு வருகிறது.

* உணவுகளில், கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங் களை நாற்பதுடன் குறைத்து கொள்ள வேண்டும். அதுபோல, நொறுக் குத்தீனிகளையும் மறந்திட வேண்டும் என் பது டாக்டர்களின் பொதுவான அட்வைஸ்.

காதை பொத்துங்க

மருத்துவ, சுகாதார குறிப்புகள் மட்டுமின்றி, ஆராய்ச்சி தகவல்களும் இப்போது குவிந்து வருகின்றன. பற் பசை , சோப்பு, முக பவுடர்கள், லோஷன்கள் மட்டுமல்ல, உணவுப் பொருள் டப்பாக்களிலும் புரியாத மருத்துவ குறிப்புகளுடன் தான் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
“ஓஹோ ஏதோ நல்ல பொருள் போலிருக்கிறது ‘ என்று போலி விளம்பரங்களை பார்த்து சாப்பிடுவோர் அதிகம். இந்த விஷயங்களில் சிலர், டாக்டரின் ஆலோசனை பெறாமல், தங்கள் உணவு முறையை மாற்றக்கூடாது; மருந்துகளையும் விழுங் கக்கூடாது. இதுபோல, புதிதாக எந்த டானிக், சத்தான உணவு பொருள் வந்தாலும் அதை வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிட வைப்பதும் சில பெற்றோருக்கு வாடிக்கையாகி விட்டது.

“கட்’ பண்ணா “நோ’

நகர வாழ்க்கையில் வழக்கமான சமையல் வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு பலரும் “பிசி’யாகி விட்டனர். காய்கறிகளை நறுக்கி , சுத்தம் செய்து சமைப்பதற் கும் கூட இப்போது ஆபத்து வந்து விட் டது. காரணம், “கட்’ செய்த காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்ய ஆரம் பித்து விட்டனர் பலரும்.

எந்த ஒரு காய்கறியையும், பழத்தையும் துண்டுகளாக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன என்பது தான் மருத்துவ உண்மை. “கட்’ செய்யப்பட்ட பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது; முழுப்பழத்தை வாங்கி, அதை நன்றாக சுத்தம் செய்து , நறுக்கி சாப்பிடலாம்.

மாத்திரை போபியா

சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஏதாவது மாத்திரையை விழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும்; சிலர் கையில் “பாம்’ வைத்துக்கொண்டு அதை தடவிக் கொண்டே இருப்பர். உண்மையில், இவர்களுக்கு எந்த கோளாறும், வலியும் இருக்காது.

உணவு சாப்பிட்டபின், ஜீரணத்துக்கு என ஒரு மாத் திரை வாயில் போட்டுக்கொள்வர்; தலைவலி வராமலேயே டப்பாவை பாக்கெட்டில் இருந்து எடுத்து தடவிக்கொள்வர். இதுவும் ஒரு வகையில் “போபியா’ தான்.

இப்படி சாப்பிட்டு வருவதால், உடலில் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தியும் விடலாம் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.

Sumathi Srini
 
Last edited by a moderator:

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#2
sariyaana nerathil sariyaana thagaval. nandri thozhi. kuzhappam theerndhirukkum palarukkum.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#3
வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்

வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்

வாழைத் தண்டுவாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப் பூவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘
வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் லநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் லம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.

நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது துரையார் வாக்கு.

உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

Sumathi Srini
 
Last edited by a moderator:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#4
நார் சத்துன்னா…? * என்ன தான் இருக்கு அதுல

நார் சத்துன்னா…? * என்ன தான் இருக்கு அதுல


நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.
அதென்ன, நார்ச்சத்து உணவுகள்? இப்போதெல்லாம், இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே, பாக்கெட் உணவு தானே. நல்லவேளை, காய்கறிகளை பதப்படுத்தி, கூட்டு, கறி என்று பாக்கெட் போட்டு விற்பனை செய்யவில்லை. அப்படி வந்து விட்டால் போதும், காய்கறி கடைப்பக்கமே பலரும் போக மாட்டார்கள்.
உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.
35 கிராம் தேவை
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.
கவர்ச்சி பாக்கெட்
இப்போது “மால்’ கலாசாரம் வந்து விட்டது; எல்லா வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்கள் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.
அளவு மிஞ்சினால்
எதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பர் டாக்டர்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம்; ஆனால், அளவு மிஞ்சாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.
அதுபோலத்தான், நார்ச்சத்தும்; உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.
என்ன சாப்பிடலாம்
“ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், சுவீட்களை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.
ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, வாற்கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.
அவங்களுக்கு “நோ’
நார்ச்சத்து என்றால், எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் சாப்பிட
* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.
* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.
* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா? முதல்ல அதை விடுங்க; அப்படியே கடித்து சாப்பிடுங்க.
* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.
* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம், நொறுக்குத்தீனியாக.

Sumathi Srini
 
Last edited by a moderator:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#5
எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

[h=2]எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?[/h] சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.
உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.
அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.
சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.
* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.
* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.
எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.
உணவு வகைகள்
உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.
* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.
* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.
பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#6
காலை உணவு அவசியம்!

[h=3]காலை உணவு அவசியம்![/h] [h=2][/h]


காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம். எனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும். குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர். சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.
ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த <உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#7
சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்கண&#

[h=3]சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்கணுமா ? ‘க்ளைசேமிக்’ குறைவான உணவு சாப்பிடுங்க[/h] [h=2][/h]


நீங்க பெரும்பாலும், இட்லி – சட்னி பிரியரா? பொங்கல் – சாம்பார் பிரியரா? எதிலும் மிதமாகத் தான் இருப்பீர்கள் என்றால் ஓகே; முதலாவதில் தான் மூக்கு பிடிப்பவர் என்றால் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.
இட்லி, சட்னியில் உள்ள ‘க்ளைசேமிக்’ சமாச்சாரங் களை விட, பொங்கல், சாம் பாரில் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ‘க்ளைசேமிக்’ ரசாயனம் தான், சர்க் கரை வியாதிக்கு அடிப் படையான காரணி.
சர்க்கரை அளவு, வழக்கத்தை விட, அதிகரித்து வந்தால், இட்லி, சட்னி மட்டுமல்ல, ‘க்ளைசேமிக்’ அதிகமுள்ள உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது.
அதென்ன ‘க்ளைசேமிக்?’
உணவுகளில் இருந்து ரத்தத் தில் சேரும் கார் போஹைட்ரேட் மூலம் உருவாகும் ரசாயன விளைவு தான் ‘க்ளைசேமிக் இன்டெக்ஸ்’ என்பது. சில வகை உணவுகளில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ளது. சிலவற்றில் குறைவாக உள்ளது. உணவுகள் மூலம் உடலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சேரும் போது, செரிமானம் அதிவேகத்தில் நடக்கும்; அப்போது கார்போஹைட்ரேட் சிதைந்து ‘க்ளைசேமிக்’ அதிக அள வில் க்ளூகோசாக மாறும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மிதமான கார்போஹைட்ரேட் இருக்கும் போது, செரிமானமும் மிதமாக நடக்கும்; கார்போ சிதைந்து க்ளூகோஸ் ஏற்படும் போது, அது நிதானமாக வெளியேறி விடும். அதனால், க்ளைசேமிக் உருவாகி, சர்க்கரை அளவை அதிகரிக்காது.
மிதமான அளவில் கார்போ ஜீரணிப்பதால், சர்க்கரை அளவும் குறைந்து, அதை கரைக்க, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தேவையும் குறைந்து விடுகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எப்படி கண்டு பிடிப்பது?
கார்போஹைட்ரேட் மற்றும் க்ளூகோஸ் சத்து கொண்ட 100 கிராம் உணவை சாப் பிட்ட 2 மணி நேரத்துக்கு பின் உடலில் ரத்தப்பரிசோதனை செய்தால், ‘க்ளைசேமிக்’ அளவு தெரிந்துவிடும். அது அதிகமாக இருந்தால், ‘க்ளைசேமிக்’ அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனித உடலில் இப்படிசெய்யும் பரிசோதனையில் பத்து வகையான அம்சங்களின் அடிப்படையில் ‘க்ளைசேமிக்’ அளவு கண்டுபிடிக்கப்படும்.
எது பாதுகாப்பானது?
‘க்ளைசேமிக்’ அளவில் பாதுகாப்பான அளவு என்பது வரையறுக்கப் பட்டுள்ளது; இதை நாமாக கண்டுபிடிக்க முடியாது; சர்க்கரை அளவை கண்டறிந்தால் தான், அதில் உள்ள ‘க்ளைசேமிக்’ அளவு கண்டறியப்பட்டு, டாக்டர் சில உணவு வகைகள் மட்டும் தவிர்க்க யோசனை சொல்வார். டிபன், சாப்பாடு மட்டுமின்றி, பாக்கெட் உணவுகள், நொறுக் குத்தீனிகள் வரை எல் லாவற்றிலும் ‘க்ளைசேமிக்’ அளவு உண்டு. அது மீறாமல் இருக்க டாக்டர் களை தான் ஆலோசிக்க வேண்டும். சர்க்கரை நோய் வரும் என்று நினைப் பவர்கள், வந்து விட்டவர்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது தான் மிக நல்லது.
70ஐ தாண்டக் கூடாது
* ‘க்ளைசேமிக் இன் டெக்ஸ்’ உணவுகள் சாப்பிடும் போது, 55 பாயின்ட் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* 55ல் இருந்து 70 வரை போனால், உஷாராகி விட வேண் டும் என்று பொருள்.
* எழுபதை தாண்டி விட்டால், கண்டிப்பாக சர்க்கரை கோளாறு அதிகரிக்கலாம்; சர்க்கரை நோய் வரலாம் என்பதற்கான அறிகுறி தான்.
உணவு வகைகள் எவை
கேக் வகைகள், ரொட்டி வகைகளில் இந்த ‘க்ளைசேமிக்’ உள்ளது. சாதாரண கேக்குகளில் 54 முதல் 62 பாயின்ட் வரை இந்த ரசாயனம் உள்ளது. சில வகை கேக்குகளில் அதிகபட்சமாக 80 தொடக்கூடிய அளவில் இது உள்ளது.
சோயா மில்க், ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், திராட்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் 41 முதல் 52 வரை தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது.
ரொட்டிகளில், கோதுமை உட்பட தானிய வகை பிரட்களில் 48 பாயின்ட் அளவில் தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது. மற்ற பிரட் களில் அதிக பாயின்ட் தான் உள்ளது.
அரிசி, பார்லி கஞ்சி போன்றவற்றில் மிகக் குறைவாகத்தான் இந்த ரசாயனம் உள்ளது. அதிலும், இனிப்பு தயிரில் குறைவு தான

Sumathi Srini
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#8
இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை…இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை…
[h=3][/h] [h=2]காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.[/h] இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்

Sumathi Srini
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.