எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,621
Location
Bangalore
#1
எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது தெரிந்து கொள்வோம் !

1. ஞாயிறு --- சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.
சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
கடக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.
மேஷ, விருச்சிக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

4. புதன் --- புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் கொத்சு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
மிதுனம், கன்னி ராசியினருக்கு நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
தனுசு, மீன ராசியினருக்கு நலம் உண்டாகும்.
6. வெள்ளி --- சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
ரிஷபம், துலா ராசியினருக்கு நலம் உண்டாகும்.


7. சனி --- சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்.
இதை சொன்னவரும் ஜோதிட கலையில்
முனைவர் பட்டம் பெற்றவர்.
ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
அதனால் இதன் நண்பகத்தன்மையும் இருக்கலாம்.
இதை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது.
கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்
அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே
அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.
நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக
ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி
நமக்கு ஒரு அழகான, நலமான வாழ்வியல் முறையை
அமைத்து கொடுத்துள்ளார்கள்???????
ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு
பழக்கங்கள் நம்மை கவலைப் பட வைக்கிறது,
.
அவர்களையும் முழுமையாக குறை சொல்ல முடியாது.
இன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கை
அதற்குரிய வாழ்வியல் முறையை,தெரிந்தோ தெரியாமலோ,
விரும்பியோ, விரும்பாமலோ பின்பற்ற வேண்டிய பிரகதீஸ்வரர்
கட்டாயத்தில் கொண்டு விட்டுள்ளது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு
எடுத்துச் சொல்லி , அவர்களால் எந்த அளவிற்கு
பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்கு எடுத்துக்
கொள்ள செய்வதாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.