எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதிரியான புருவம் அழகாக இருக்கும்- விரிவான குறிப்பு

புருவ அழகு – எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதிரியான புருவம் அழகாக இருக்கும்- விரிவான குறிப்பு
புருவ அழகு; கண்களும்தான். இதில், புருவத்தின் அள வைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக
அழகு கொடுக்க முடியும்.

வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத் தமாக இருக்காது. முகத்திற்கு தக்க படி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியி ன் அளவு ஆகியவற்றிற்கு தக்க படி, புருவத்தை அமைக்க வேண்டும்.

முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்டமுகம் போன்றவை குறிப் பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக் கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும்.
அதாவது . . .

சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு,

சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லே சாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தா ல் அழகு அதிகரிக்கும். புருவ முடிகளின் வரிசையில் உள் பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற் ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு,

நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, இவர் கள் புருவம் லேசாக மேலேற வெளிப்புறம் கொ ஞ்ச மாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்பு றமாக இருக்கும் தேவையற்ற முடி யை அகற்றி விடுங்கள். முடியுமிட த்தில் மிகவும் மெலிதாக இருக்கட் டும்.

வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு
வட்ட முக அமைப்பு கொண்ட பெண் களுக்கு புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்து க் குறுகிக் கொண்டே இருக்க வேண் டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.


நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு:
நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, எவ்வ ளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத் தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.
புருவம் தீட்ட. . .
புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொ ட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடவும். ஐப் ரோ பென்சிலை எவ்வளவு மெல்லிய தாக முடியுமோ அவ்வளவு மெல்லிய தாகப் பயன்படுத்தவும். உட் புறமிருந் து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற் கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது,

புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தா ல், புருவங்களுக்கு இடையில், அதி க இடைவெளி இருப்பதே அழகாக இ ருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக் கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறை த்து விடும்.

மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால்,
மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இ ருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறை க்கப்பட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அள வை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறிய தாகத்தெரியும். சிறிய நெற்றியை கொ ண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண் டும்.

பிரஷ் செய்யத் தொடங்கும்போது

பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புற மிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக் கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன் றவைநீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிரு ந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.

புருவம் மிக சிறியதாக இருப்பவர்கள்,
புருவம் மிக சிறியதாக இருப்ப வர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

புருவங்களை த்ரெட்டிங் செய் யும் போது . . .

பெண்கள் கூந்தலுக்கு அடுத்த படியாக எப்போதும் ஆர் வம் காட்டுவது புருவங்களின் மீது தான். இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்.. ஓல்டுஏஜ்.. என்று எந்தவயதும் விதிவிலக் கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம்காரணமாக புருவங்களில் புசு புசு வென காடு போல் முடி வளர்வது இயற்கையே.

ஆனால், `அழகாக இல்லையே’ என் று அதன்மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டி ங் செய்யும் போதுமிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் -குறிப்பாக டீன் ஏஜ் பெண் கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித் தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோ ல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமல்ல. ஒருதடவை த்ரெட்டி ங்செய்தால், தொடர்ந்துசெய்து கொ ண்டே இருக்க வேண்டும். இல்லை யென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழ கையே கெடுத்து விடும்.

மழிக்கப்பட்ட இட ங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகார மாகக் காட்டி பயமு ருத்தும்.

புருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இ ருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமா ன புருவம் பலமான / அடர்த்தியா ன புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண் களின் அழகையும் முக அழகையும் அது அதி கரிக்கும்.

இரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையி ல் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட் சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை கள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து க் கொள்ள வேண்டும். எல்லாம் சரி!

ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…!
என்பவர்களுக்கு … இதோ சில டிப்ஸ்கள்!

* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண் ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்… புருவம் வில் போன்ற அழகான வடிவத் துக்கு மாறிவிடும். த்ரெட்டிங் செ ய்துகொள்ளும் போது தசையெ ல்லாம் சுருங்கக் கூடாது என்ப தற் காக கண்களை கையால் அழுத்திக் கொண்டு தான் செய் வார்கள்.

முதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலு டன் வலியுடன் வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்க த்தைப் போக்க, ஒரு நாள் வைட்ட மின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண் ணெய், தேங்காய் எண்ணெய், ஆயி ல் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறையும்.

அத்துடன், கண்களும் அழகாகத் தோற்றமளிக்கும். சில பெண்களு க்கு இரு புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டுப் புரவம் என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால் கூடஅழகாகத்தெரியாது. இக்கூட்டுப் புருவ முடிகளை அகற்ற.. கஸ்தூரி மஞ்சள் தூள், கிழ ங்கு மஞ்சள் தூள், கடலை மாவு ஆகி யவற்றை தலா ஒரு டிஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்ட் ஆக்கு ங்கள்.

இதை மூக்கின்நுனி பகுதியியல் இருந்து புருவம் வரை `திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இப்ப டித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&am

உங்கள் அழகு புருவங்களை மெருகேற்ற. . . (இதை உங்களு க்கு நீங்களே செய்யலாம்)

புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் உங்கள் கண்களில் அழகு கூடும், முகமே புது பொ லிவு பெறும். ஆனால் புருவங் களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையா க உள்ளது!புருவங்களை உங்க ள் முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க குறிப்பு:

தேவையான பொருட்கள்:
டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிக ளை அகற்ற)

புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க் கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)

ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருது வாக்கி, வலியை குறைக்க)

கண்ணாடி (அவசியம் தேவை)

சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய)


ஐப்ரோ பென்சில்

முதலில் புருவத்தை மேல் நோக் கி பிரஷ் செய்துவிடவும். புருவத்தி ன் வளைவை விட நீளமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும்.

புருவங்கள் கண்களி ன் ஒரு முனையில் ஆரம்பித்து மறு முனையில் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத் தை வடிவமைக்க விரும்புகிறீ ர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆஸ்ட்ரி ங்ஜென்ட்டை புருவத் தின் மேல் தடவவும்.புருவத்தின் மேல் பக்கத்திலிரு ந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டு வீஜரால் எடுக்கவும்.

ஒரு பக்கம் புரு வத்தை சரிசெய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமை ய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும். அடி க்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும்.ஐபுரோ பென்சிலா ல் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப்ப வும்.

கவனம்: மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர் க்கவும்.
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#6
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

super tips....:thumbsup:thumbsup:cheer:
 
Joined
Mar 4, 2015
Messages
12
Likes
8
Location
Chennai
#7
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

Nice tips :thumbsup
 

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#8
Re: எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாத&#3

Thanks for sharing... Very useful tips
Hathija.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.