எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#1முன்பெல்லாம் குடும்ப மருத்துவர் என்றால், கூப்பிட்ட குரலுக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். இன்றோ எந்த ஆபத்தான கட்டமாயிருந்தாலும், நாம்தான் 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிக் கொண்டு, 'கால் டாக்ஸி'யோ அல்லது 'ஆட்டோ'வோ வைத்துக் கொண்டு, கொள்ளைக் கட்டணம் அழுது, அவரது 'க்ளினிக்' சென்று அரைநாளாவது காத்திருந்து வைத்தியம் செய்து கொள்ளும் அவல நிலை.

எந்த மருத்துவரும் பணம் பிடுங்குகிறார்களே தவிர, 'பில்' தருகிறார்களா? வேண்டுமானால் 'ரீ-எம்பர்ஸ்மென்ட்' வசதிக்காரகளுக்கு தரலாம். முன்பு ஒரே வைத்தியர் 'ஜெனரல் பிராக்டீஷனர்' எந்த வியாதி என்றாலும் நம்பகமான மருத்து எழுதித் தருவார். இப்போது தன்னோடு படித்த 'மற்ற துறை ஸ்பெஷலிஸ்ட்'க்கு நம்மை சிபாரிசு செய்து அனுப்பி விடுகிறார்.

இந்த கொடுமையில் இருந்து அரசு மருத்துவம்னைக்கு செல்லலாம் என்றால், பல இடங்களில் மருத்துவர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கும். மருந்தோ, பரிசோதனைக் கருவிகளோ, செயல் இழந்து இருக்கும். சுகாதாரம் மலிந்து கிடக்கும். காய்ச்சாலோடு போனால் வயிற்று போக்கோடு திரும்பி வரும்படியான நிலையில்தான் அரசு ஆஸ்பத்திரியின் 'நலன்' பராமரிக்கப்படுகிறது. இதனால்தானே, நமது அமைச்சர் பெருமக்களும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்து கொள்கின்றனர்.

காக்க வைப்பதேன்?:
எல்லா சந்தேகங்களையும் தீர்க்கவிட்டாலும் குறைந்த பட்சம் எனது இந்த சந்தேகங்களையாவது தீர்க்க பாருங்களேன்...
*இந்த அளவிற்கு உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறியும் கூட இன்னமும் உங்கள் கிளினிக்கில் மணிக்கணக்கில் காத்திருக்க செய்கின்றீர்களே,அது நியாயம்தானா... ஒரு நோயாளியை குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதில் உங்களுக்கு என்னதான் பிரச்னை. பத்து நிமிடம் முன் பின் இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் காலையில் வந்தவர்கள் மதியம் சாப்பிடக்கூட போகாமல் டாக்டர் இப்ப கூப்பிட்டுருவாரு என்று பரிதாபமாக காத்திருப்பது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?

*தகுதியான மருத்துவரை பார்க்க சொல்லி ஊடகங்கள் சொல்கின்றன ஆனால் யார் தகுதியான மருத்துவர் என்பது தெரியவில்லையே முதுகுவலிக்கு உடனே ஆபரேஷன் செய்யவேண்டும் என்று ஒரு சாரரும், யார் ஆபரேஷன் செய்யச் சொன்னது சுத்த மடத்தனம் இதை மருந்திலேயே சரி செய்துவிடலாம் என்று ஒரு சாரரும் இப்படி ஒரே நோயாளிக்கு மாறி, மாறி வைத்தியத்தை சென்னையில் உள்ள கார்ப்பரேட் ரக ஆஸ்பத்திரி டாக்டர்களே சொன்னால் இவர்களைத் தாண்டி சாமன்ய மக்கள் எப்படி தகுதியான டாக்டர்களை தேர்வு செய்வார்கள்.லேப் டெஸ்ட்டுகள் நிலை:

*முன்பு போல இப்போது இல்லை, லேப் டெஸ்டுக்கு பல ஆயிரம் கொடுக்கவேண்டி உள்ளது. ஆனால் அந்த லேப் டெஸ்டை எடுத்துக்கொண்டு வேறு ஒரு டாக்டரானவரிடம் வந்தால் அதை தொட்டுக்கூட பார்க்காமல் நீங்கள் ஒரு லேப்பிற்கு அதே டெஸ்ட்டுகளை எழுதி தருகீறீர்களே இது என்ன நியாயம்? வேண்டுமானால் லேப் தரும் கமிஷனைக்கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பழைய டெஸ்ட் ரிப்போர்டை பாருங்கள்.
*நீங்கள் எழுதும் மருந்து, மாத்திரைகள் உங்கள் கிளினிக்கினுள் வைத்துள்ள மருந்து கடைகளிலோ அல்லது நீங்கள் எழுதும் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கிறது, இதனால் வெளியூர் போகும் நோயாளிகள் அந்த குறிப்பிட்ட மருந்து கிடைக்காமல் படும் அவதிபற்றி உங்களுக்கு தெரியுமா?

*பொதுவாக ஏன் வெளிப்படையாக இருக்கமாட்டேன் என்கிறீர்கள்... கணினி தொழில்நுட்பம் வந்தபிறகு ஓரளவு மருத்துவ அறிவும், விழிப்புணர்வும் மக்களுக்கு வந்துள்ளது ஆனால் இன்னும் அவர்களை கிராமத்தான்கள் போல பாவித்து பேசுவது ஏன்.?


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Thenuraj, I understand your feelings. But you have to wait for your turn because afterall it is your health issue.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#3
Hi Thenuraj, I understand your feelings. But you have to wait for your turn because afterall it is your health issue.

ஆமா சுமி அக்கா....
இருந்தாலும் அங்க வெயிட் பண்ணும் நேரத்தை நினைச்சா கொடுமையா இருக்கும்... எங்களுக்கே அந்த அனுபவம் உண்டு..., காலையில் போய் மாலையில் தான் வீட்டுக்கு வருவோம்...
அந்த ஆதங்கம் தான்...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
நல்ல கேள்விகள் தேனு... ஆனால் பதில் கிடைக்குமா என்று தான் தெரியவில்லை.

நோயின் தாகத்தால் அவதிப்படும்போது காத்திருக்கும் கொடுமை வேறு... இதனாலயே நான் மருத்துவமனை செல்வதை பல சமயங்களில் தவிர்த்தது உண்டு.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,179
Likes
83,730
Location
Bangalore
#5
அனைத்துமே மிக மிக உண்மை .

இதில இன்னொரு கொடுமை வேற .......ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு specialist.....இவர்கள் என்ன செய்றாங்க ன்னா, சாதாரண ஜுரத்துக்குக் கூட, வைத்தியம் பார்க்க மாட்டேன், அதற்குரியவரை பாருங்கன்னு சொல்லிடுறாங்க .

போற போக்கைப் பார்த்தா , வலது கைக்கு ஒரு specialist , இடது கைக்கு ஒரு specialist னு வந்தாலும் வந்துடுவாங்க போலிருக்கு .
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#7
அருமையான கேள்விகள் தேனு ......... இது உன் ஒருவருக்கு உள்ள ஆதங்கம் அல்ல நம்மிடையே பலபேருக்கும் இருப்பதுதான் .........

மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக இன்று இங்கே குறிப்பிட்டு உள்ளது போல் வெவ்வேறு specialities and subspecialities வந்துவிட்டது ........ முன்பு போல் எந்த மருத்துவரும் வெறும் M.B.B.S மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளிப்பது இல்லை .....அப்படி இருப்பவர் மீது பொதுஜனத்திற்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்று கூட சொல்லலாம் ....... வேற specialist பார்கலாமா டாக்டர் என்று கேட்பவர்கள் தான் அதிகம் .....

இந்த மேல்படிப்பிற்கு அவர்கள் லக்ஷகணக்கில் செய்யும் செலவை ஈட்டும் வழியாக அவர்கள் இந்த மாதிரி லேப் charges எல்லாம் பணம் பார்க்கும் வழிகளாக கையாளுகிறார்கள் ...... I am not talking about any one particular doctor or individual ...This is just the trend ....... It is reality .....Though it is bitter ....That is the truth...... So pls donot mistake me for having said this here ........

இந்த காக்கும் நேரம் பற்றி தேனு ........ நான் இங்கு வந்த பின் Accident and Emergency இல் காத்திருக்கும் சொந்த அனுபவம் and பணியின் மூலம் கிடைத்த அனுபவம் வைத்து சொல்றேன் ........நம்ம ஊரு சிஸ்டம் எவ்வளவோ தேவலை ....... அட்லீஸ்ட் பணம் கொடுத்தால் டாக்டர் ஐ ஆவது பார்க்கலாம் ...... இங்கே காத்திருப்பு , பின்னர் ஒரு triage nurse பார்த்து , அவங்களே நமக்கு treatment கொடுக்ககூடிய பட்சத்தில் ஜூனியர் டாக்டர் ஐ கூட பார்க்க முடியாது ...... அட்லீஸ்ட் அந்த குறைக்கு நம்ம ஊரில் patients are masters...டாக்டர் பிடிக்கலையா வேற ஒருத்தரை சுலபமா மாத்திடலாம் ...இங்கே போல் திரும்ப முதலில் இருந்து பாமிலி டாக்டர் பார்த்து முழு process உம் ஆரம்பிக்க வேண்டாம்...........

மருத்துவர்கள் மானுடர்களே ...கடவுள் அல்ல ......அவர்களை அந்த நிலையில் பார்ப்பதை மாற்றிகொள்ள வேண்டும் ........ என்ன தான் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து இருந்தாலும் சில பல துர்சம்பவங்கள் நிகழும் போது அவர்கள் அதை ஏற்றுகொள்ளும் விதம் தவறாக இருக்கிறது ........
Human body is a very complex machine ......Medical science moolam doctors andha machine in muzhu seyal paatayum padithu ,purindhu kondaalum ....there is always a surprise in the form of drug interactions, non response to treatment , nu evvalavo .... Namma ooril indha understanding kammi nu feel panren...... eg... anaesthetic complication naala irandha young patient ..... No evidence of medical negligence ennum batchathil idhu oru unfortunate incident that could happen to any person ..... Aana nama ooril ethanai patients indha anaesthetic risk aa purinjukaraanga ? example dhinam dhinam nadakum nootrukanakaana caesarean sections ....apart from medical reasons ippolaam pain bear panna mudiyala , indha naal nakshtharathil kulandhai pirakanum nu laam kood c-section nadakudhu ......

Attitudes have to change ...The change should be happening both in the doctor and patient ....... Doctor should not think of the patient as a source of income alone ....Every life should be valued ....... Doctors should have more empathy and kindness and also take time to answer questions and boost the patient's morale ......... Also false promises kudukkama realistic outcomes of treatments aa patient kitta discuss pannanum..... Aana appadi honest opinion kodutha patients oodi poidaraanga ...ivar vendaam vera 'nalla' doctor kitta pogallam nu .......

Unnaku theriya vendiya unnmai theriyaama poi irukalaam but ennoda karuthukalai sollanum nu thoonuchu ......

We have a really bad experience in Chennai Thenu ....Horrible one .... If we had believed those results and taken action !!!!... Honestly naan inga un kooda ippadi discuss pannitu irupeno ennavo ennaku theriyala ....... I really feel sorry for people who have limited understanding , and great faith in getting their treatments done ..... :pray: Ithu purely ennoda personal experience la sonna karuthu .......

On a comedy note ............
My personal experience in Chennai Thenu : I was pregnant with Aditri - went for my Nuchal translucency scan ...It was a new scan offered by only one centre in chennai at that time ...... So appointment fixed , nee sonna adhe waiting for ages ...finally my turn ........Scan performed by a doctor with no smile in her face , a very highhanded tone and impatience ....... I did not register with them as a doctor ...Just simply Mrs.Priya Gautham ...... The doc's attitude irritated me ....... On top of all this baby position was such that she could not do the measurements .......She dismissed me to say that we have to reschedule the appointment ........ I told her i would like to wait and try again when my bladder was uncomfortably fuller ...Told her probably a full bladder would encourage baby to change position .........She was not at all pleased ..........Naan doctor aa neeya ma nu kettanga ....... I have people waiting nu sollitanga ...... Nuchal translucency oru particular time frame la eduppanga ...... i was about to cross the limit and already indha spl scan kaaga 2 wks wait panni thaan book pannamudinjudhu ..... naan adamant aa idhai solli ...i'll wait nu solliten..... sari nu wait panna sonnanga .......
After a longggggg wait she repeated the scan and baby position maarinadhaala she could do her measurements ....... eppudi? nu naan avangala oru paarvai paarthen ....... ennai rest room use panna sonnanga ...... ennoda vandha En SIL intha gapla she is a dentist , My brother is a anaesthetist ...both work in london nu appo thaan first time sonnanga .......... I didnot know about it .......when i returned from restroom ........Believe it or not she was more friendly and very polite ........ I was surprised ...... Naan pappa kitta velila varumbothu sonnen .......Chellam , amma pechu kettu nee position maarina ...andha doc paar adhirchi aagi eppadi polite aagitaanga nu ....... My SIL started laughing ....Yen nu ketta ...she told me andha change ku chellam kaaranam illai unnoda DR ngara adaimozhi kaaranam nu ...... then she told me naan neenga rendu perum doc nu sonnen nu ........:rolleyes::rolleyes::rolleyes:

So lets start the music .......................
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#8
நல்ல கேள்விகள் தேனு... ஆனால் பதில் கிடைக்குமா என்று தான் தெரியவில்லை.

நோயின் தாகத்தால் அவதிப்படும்போது காத்திருக்கும் கொடுமை வேறு... இதனாலயே நான் மருத்துவமனை செல்வதை பல சமயங்களில் தவிர்த்தது உண்டு.

உண்மைதான் சுமதி கா...
தவிர்க்க முடியாமல் போய் இப்படி மாட்டிக்கொண்டவர்களின் புலம்பல்கள் தான் இது....
ஆனா இது எதுக்குமே பதில் கிடைக்காது....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#9
அனைத்துமே மிக மிக உண்மை .

இதில இன்னொரு கொடுமை வேற .......ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு specialist.....இவர்கள் என்ன செய்றாங்க ன்னா, சாதாரண ஜுரத்துக்குக் கூட, வைத்தியம் பார்க்க மாட்டேன், அதற்குரியவரை பாருங்கன்னு சொல்லிடுறாங்க .

போற போக்கைப் பார்த்தா , வலது கைக்கு ஒரு specialist , இடது கைக்கு ஒரு specialist னு வந்தாலும் வந்துடுவாங்க போலிருக்கு .


ஹா..ஹா..ஹா....
ஹய்யோ ஜெயந்தி அக்கா..., நீங்க சொன்னதை நினைச்சி பார்த்தேன்.... சிரிப்பை அடக்க முடியலை....
அப்போ ஒரு கை ஒரு ரூம்லயும் , இன்னொரு கை இன்னொரு ரூம்லயும் இருக்குமா....??
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.