எனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#1
தோழிகளே, தோழர்களே எனது கவிதை மொட்டுகளை இங்கு தருகின்றேன். மலருமோ கருகுமோ நீங்கள்தான் சொல்லவேண்டும். பிழைகளை தயங்காது வெளிப்படையாக கூறுங்கள்.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#2

சூரியன்




இருள் சூழ்ந்த பூமியினை
ஒளிரச் செய்யும் சூரியனே
உனது வருகைக்காக
எத்தனை எத்தனை உயிர்கள்
காத்திருக்கின்றன ஆதவனே
கடமை தவறா வீரனே
உன்னைக் கண்ணாரப் பார்த்து
வழிபட்ட காலங்கள் போய்விட்டன
நவீன உலகம்
உயர்மாடிகளால் நிரம்பிவிட்டது
மனக்கண்ணில் உன்னை நினைத்து
வழிபடுகிறேன்
ஏற்று அருள் செய் பகவானே

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#3




வினை தீர்க்கும் விநாயகனே
முருகனின் மூத்தோனே
அம்மை அப்பனில்
உலகத்தைக் கண்டவனே
தந்தத்தை முறித்து
எழுத்தாணியாக்கியோனே
உன் திருமலர்ப் பாதங்களில்
மலர்தூவிக் கண்ணமூடி வணங்குகிறேன்
ஏற்று அருள்புரிவாய்
ஆனை முகத்தோனே

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#4




சிவனின் மைந்தனே
எனது சிந்தையின் நாயகனே
பார்வதி தேவி அள்ளி அணைத்த ஆறுமுகனே
எனது சக்தி நீயே
விநாயகனின் தம்பியே
எனது பலம் நீயே
வள்ளி தெய்வயானை மணாளனே
எனக்கு ஆறுதல் நீயே
திருமாலின் மருமகனே
எனது வழிகாட்டி நீயே
'ஓம் சரவணபவ' எனும் திருநாமத்தை
மலர்களாக உனது காலடியில்
சமர்ப்பிக்கின்றேன்
ஏற்று அருள்புரிவாய்
வடிவேலவனே

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#5

நிம்மதி



நிம்மதியைத் தேடும் மனிதா
உன்னுள் வைத்துக்கொண்டே
வெளியில் ஏன் தேடுகிறாய்
உன்னைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லதையே பார்
நல்ல விஷயங்களைக் கேள்
கேட்டவை பேசும் இடங்களில்
நிற்காதே
தீயவை நடக்கும் இடங்களில்
விலகிச் செல்
நல்லவற்றை நினை
நல்ல செயல்களைச் செய்
நிம்மதியைத் தேடத் தேவையில்லை
அது தானாகவே உனக்குள் வந்துவிடும்

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,916
Likes
76,723
Location
Hosur
#6
கௌரி மோகனின் கவிதைக்கான உங்கள் கருத்துக்கள் கீழே கொடுத்துள்ள தளத்தில் மலரட்டுமே... flower-small.gif

http://www.penmai.com/forums/poems/47438-comments.html



 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#7

"பெண்மை"
(இணையத் தளம் )


அன்பு உள்ளங்களைத் தேடித் தரும்
"பெண்மை"யே நீ வாழி!

அறியாத பல விஷயங்கள் அறியத் தரும்
"பெண்மை"யே நீ வாழி!

ஆலோசனை பல தந்து உதவிக்கரம் நீட்டுகின்ற
"பெண்மை"யே நீ வாழி!

பெண்களுக்கு வழிகாட்டும் தோழியாய் இருக்கின்ற
"பெண்மை"யே நீ வாழி!

ஓய்வுநேரங்களில் பொழுதுபோக்கு தருகின்ற
"பெண்மை"யே நீ வாழி!

போட்டிகள் பல வைத்து ஊக்கம் அளிக்கின்ற
"பெண்மை"யே நீ வாழி!

எனக்குள் ஒளிந்திருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்த
"பெண்மை"யே நீ வாழி!

தோழியாக மட்டுமன்றி தாயுமாகி அரவணைக்கும்
"பெண்மை"யே நீ வாழி! வாழி!

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#8

அன்பு




காணவில்லை

"அன்பு"

தேடித் தருபவர்களுக்கு

"மகிழ்ச்சி", "ஆரோக்கியம்", "செல்வம்",
"வெற்றி"

பரிசாக வழங்கப்படும்


Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jun 2013. You Can download & Read the magazines
HERE.

 
Last edited by a moderator:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#9




அடி முடி தெரியா மாசற்ற சோதியே
பிறையும் கங்கையும் முடிமேல் சுமப்பவனே
உமையொரு பாகனே
தேவர்கள் நலன் கருதி விடமுண்ட
திருநீலகண்டனே
உன் திருவிளையாடல்களில் தத்தளிக்கும்
பக்தர்களை காத்தருள்வாய் சிவனே
சிவபெருமானே

 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#10

பிரிவு



நீ அருகில் இருக்கும்போது
புரியவில்லை உனது அருமை
குறை கண்டேன் குற்றம் படித்தேன்
அலட்சியப்படுத்தினேன்
அவமானம் செய்தேன்

நீ விலகிச் சென்றபோது
தீயிலிட்ட புழுவைப் போல
துடிகின்றேன் என் அன்பே
சுற்றிப் பல உறவுகள் இருந்தாலும்
தனிமையாய் உணர்கின்றேன்
பசியின்றி உறக்கமின்றி
உயிர்ப்பின்றித் திரிகின்றேன்

புரிந்துவிட்டது எனக்கு
நீதான்
எனது சக்தி எனது பலம்
எனது வழிகாட்டி எனது மகிழ்ச்சி
நீயின்றி நானில்லை
அகங்காரம் துறந்து அழைக்கின்றேன்
விரைந்து வா சகியே

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Apr 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.