எனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!
இருக்கின்றேனா
நான் உன்னுள்...!!!
தெரியவில்லை...
ஆனாலும்
இதமாக இருக்கின்றது
இத் தருணம்...
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
உன்னை கண்டதும்
இறக்கை முளைத்து பறக்கின்றது
என் இதயம் மட்டுமல்ல
கடிகார முட்களுமே...!!!
துணிவைத் திரட்டி
ஒரு வார்த்தை பேச நினைக்கையில்
காலத்தோடு
காணாமல் போய்விடுகிறாயே...
சூரியனே!
நேரத்தை கட்டிவைத்து
சிறிது நேரம் ஓய்வெடு...
தணியாத தாகத்தை தீர்த்திட
உதவிடு!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
மந்திரத்தால்
கட்டி வைத்தாயோ
உன்னை பார்த்ததும்
அசைய மறுக்கின்றனவே
விழிகள்...
மாயங்கள்
ஏதும் செய்தாயோ
உன் பார்வையில் மலர்ந்ததே
இதயம்...
அத்தருணம்
வானத்து தாரகைகள்
இதயத்தில் பூத்ததே
அங்கே
வெண்ணிலவாய் உன் வதனம்
அழகாய் பதிந்ததே!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
ஆதவன் உதித்திட
மலர்கள் இதழ் விரிக்க
வண்டினம் ரீங்காரமிட
பறவைகள் பாடித் திரிய
தென்றல் தவழ்ந்து வர
இனிதாக புலர்ந்தது
காலைப்பொழுது...
புதிய நாளொன்று தந்த
இறைவனுக்கும்
அழகைக் கொட்டித் தந்த
இயற்கைக்கும்
நன்றி கூறி
தொடங்குவோம் பணியினை
இயற்கையோடு இணைந்தே...
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
என்னவள்

அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்...

காதல் கவிதையின் உருவாய் தோன்றி
ஆசையை தூண்டுகின்றாய்
உறக்கத்தை உன் வசம் இழுத்து
கனவுலகில் தள்ளுகின்றாய்...

மின்னலாய் தாக்கி வீழ்த்தி
மயிலிறகாய் வருடுகின்றாய்
என்னவள் நீயே என்று
போராட்டம் நடத்துகின்றாய்!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
காதல் யுத்தம்

உன் பார்வையை வீசி
சலனப்படுத்திவிட்டாய்
உள்ளத்தை...
உன்னைத் தீண்ட
கட்டளை அனுப்புகின்றது
விழிகளுக்கு...

என் விழிகள்
உன்னைத் தழுவ
உன் விழிகள்
நெருப்பை கக்க
போர்க்கொடி உயர்த்தி
யுத்தம் தொடக்கியது
காதல்!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
காதல்

அவளை பார்த்த நொடி
நின்று வந்தது
உயிர் மூச்சு...!!!
இதயம்
இடம்மாறிய
தருணம் அது!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே...

விடாமுயற்சியுடன் பொறுமை கடைப்பிடித்து
நேர்வழியில் சத்தியம் காத்து
கிடைப்பதில் திருப்தி அடைந்து
பண்புடன் அன்பு செலுத்தி
கிடைக்கும் வெற்றி
எப்போதும்
நிரந்தரமே...
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
தனிமையை திருடுகின்றாய்
தூக்கத்தில் வந்து
கனவுகளையும் திருடுகின்றாய்...
எண்ணங்களை திருடுகின்றாய்
போதாதென்று
பசியையும் திருடுகின்றாய்...
பலமான முற்றுகை
இதயத்தை திருடுவதற்கோ!!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
அத்துமீறி நுழைந்தவன்
திருடிச் செல்வான் என நினைத்திருந்தேன்...
ஆனால்
அவனோ
சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான்
இதயத்தில்!!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.