என்ன பாத்திரத்தில் சமைத்தால் நல்லது

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,718
Location
Germany
#1
என்ன பாத்திரத்தில் சமைத்தால் நல்லது? எதில் சமைத்தால் என்ன பலன்?

வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால் உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த பொருட்கள் ஃபுட் பாய்சன் ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால் பெரிய கோயில்களில் இப்போதும் சமைக்க வெண்கலப் பாத்திரங்களையே பயன்படுத்துகிறார்கள்.

செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டு வர ரத்தம் சுத்தியாகும். கண் ஒளி பெறும். வயிற்று உபாதைகள் தீரும், பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் விரைவில் நோய் தீரும். துளசியை நீரில் போட்டு இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அதை எடுத்து அருந்தி வந்தால் வெண்குஷ்டம் குணமாகும்

இந்தத் தீர்த்தம் இருமல், சளி உள்ளிட்ட வைரல் இன்பெக்சனை தடுக்கிறது, பெருமாள் கோயில்களில் செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட துளசி தீர்த்தத்தைக் கொடுப்பதன் சூட்சுமமே இதுதான்.

துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் ரியாக்ட் ஆகி உணவுப்பொருள் கருப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும். விரைவில் கெட்டும் விடும்

செம்பு, பித்தளைப் பாத்திரங்களுக்கு வெள்ளீயம் பூசி பயன்படுத்தினால் உணவுப் பொருட்கள் கெடாது.

ஈயம் உடலுக்கு உகந்ததல்ல. உடலுக்கு நல்ல வன்மையைத் தராது, பலவித நோய்களுக்கு இது காரணியாக அமைகிறது. வயிற்றுத் தொடர்பான நோய்கள் ஏற்படும். இருமல் சளி இருந்தால் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததை தொடர்ந்து உண்பதால் சிலருக்கு வயிறு உப்புசம் ஏற்படும்..

மண்பாண்டங்கள்தான் சமைக்க மிகச் சிறந்தவை. எந்த வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். நமக்கு இயற்கை ரெப்ரிஜிரேட்டரே மண்பானைகள்தான். அதில் செய்யப்படும் உணவு மிக சுவையானது,

மண்பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது அவ்வப்போது கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது ரொம்பவே முக்கியம்.’’

இன்று பெரும்பாலும் சில்வர் பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தில் சமைப்பதால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

Ref
Kumudam Snegithi
 

ashaaherb

Friends's of Penmai
Joined
May 29, 2011
Messages
275
Likes
336
Location
Dubai
#2
hey viji,

me and ganga used to talk abt ur posts..really informative..i would like to take an opportunity to congratulate u for all ur informative posts...

Asha Krishna
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#4
பாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், த

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின், உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரமூர்த்தி: இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை. வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம் சுத்தமாகும். கண் பார்வைக்கு நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். "பெப்டிக் அல்சர்' இருப்போர் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நோய் நீங்கும். துளசி போன்ற மூலிகை இலையை நீரில் போட்டு, அதை இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அருந்தினால் வெண் குஷ்டம் நீங்கும். இந்த தீர்த்தம், இருமல், சளி உள்ளிட்ட வைரல் தொற்றுகளையும் தடுக்கிறது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு இதுவே காரணம். இரும்பால் ஆன பாத்திரங்களை, வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், உணவுப்பொருள் கறுப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும். அலுமினியம், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்துவது உகந்ததல்ல. பல பாத்திரங்கள் இருந்தாலும், மண்பாண்டங்கள் தான் சமைக்க மிகச் சிறந்தவை. எவ்வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.நமக்கு இயற்கை, "ரெப்ரிஜிரேட்டரே' மண்பாண்டங்கள் தான்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.