என் உயிரில் கனவாய் நீ - En Uyiril Kanavai Nee By Aruna2014

Status
Not open for further replies.

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#1
எல்லாருக்கும் வணக்கம் .

எல்லாரும் எப்படி இருக்கேங்க .நான் ஒரு புதிய கதை முயற்சி செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவை கருத்துகள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் friends please...


எது எனது முதல் கதை .தவறுகளை தயவு செய்து மன்னிக்கவும்
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#2
PART 1:

"மார்கழி திங்கள்...."

எங்கயோ திருப்பாவை அழகாக ஒளித்து கொண்டிருந்தது .

மெதுவாக கண் விழித்த மது வர்ஷினி எழுந்து ஜன்னல் ஓரம் சென்று இருளை வெறித்தாள். தன் மனதில் இருப்பது மகிழச்சியா அல்ல குழப்பமா என்று வரை அருக்க முடியாத சூழ்நிலையில் நின்றிருந்தாள் .

ஏதோ இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் அனைவரும் எழுந்து விடுவார்கள் .கல்யாண வீடு கலை கட்ட ஆரம்பித்து விடும் .

ஆம் இன்று மதுவின் திருமணம்.

"மதுமா எழுந்துட்டயா "மதுவின் நினைவுகளை கலைக்கும் வகையில் வந்தது மதுவின் அன்னை சங்கரியின் குரல்

"மதுமா போய் குளிச்சுட்டு வாடா நேரம் ஆகுதுல"

" சரி மா "மது குளியல் அறைக்குள் சென்று குளித்து வந்தால் .

அதற்குள் கல்யாண வீடு முழுவதுமாக முழித்து இருந்தது .குளித்து விட்டு வந்த மதுவை அமர வைத்து அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள் சுற்றி இருந்த இள வயது பெணகள்.

மதுவை ஐயர் மணமேடைக்கு அழைக்க பெண்கள் படை சூழ மெதுவாக அன்ன நடை பயின்று வந்தால் மது .மனதில் தன் கணவனாக வர இருக்கும் அத்தை மகனை காண அவளும் அதே அளவு படபடப்புமாய் வந்தால்.

மது அருணின் பக்கத்தில் அமர்ந்து மெல்ல விழி உயர்த்தி அருணை பார்த்த .மதுவால் அவன் முக பாவனையில் இருந்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை .

அவன் கம்பீரமாக ஐயர் கூறிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருந்தான் .அவர் குரல் அவள் இதயம் வரை சென்று அவள் ஆசை காதலை அசைத்து பார்த்தது .

அவன் உணர்வுகளை கணிக்க முடியாமல் போக பேசாமல் அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.

ஆறு அடி உயரத்தில் அழகிய முறுக்கு மீசையுடன் அலை அலையான சிகையுடன் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை காண காண தெவிட்டவில்லை மதுவிற்கு.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#5
part2:

மது அருணை ரசித்து கொண்டிருக்கும் வேலையில் நம் அவர்களை பற்றிய சிறிய முன்னுரையை பார்த்து விடலாம்.

மது சங்கரி மற்றும் சிவனந்தனின் ஒரே மகள்.
சிவானந்தன் வாகனங்களின் உதிரி பக்கம் தயாரிக்கும் தொழிலை பார்த்து வருகிறார். தாய் தந்தை மகள் என சிறிய அழகான குடும்பம். மது மூன்று வருட கல்லூரி பொடிப்பை முடித்து இப்பொது தனது ஆசை மாமாவையே திருமணம் செய்ய போகிறாள்.
அருண் என்கிற அருண் ஆனந் சீதளக்ஷ்மி மற்றும் மகாலிங்கத்தின் புதல்வன்.பரம்பரை தொழிலான ஆடை ஏற்றுமதி தொழிலில் வெற்றி கோடியை நாட்டி வருகிறான் .

"கெட்டிமேளம் கெட்டிமேளம்" ஐயர் கூறிய சத்தத்தில் அருண் மாங்கல்யத்தை மதுவின் சங்கு கழுத்தில் பூட்டினான்.

மதுவின் கண்களில் சிறிய அழுகையும் உதட்டில் அழகிய புன்னகையும் எட்டி பார்த்தது.
இரவில் படபடக்கும் இதயத்துடன் முதல் இரவு அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளெ நுழைந்தால் மது.
அங்கே அருண் கட்டிலில் அமர்ந்து தனது கைபேசியை பார்த்து கொண்டிருந்தான் மது ஒரு நிமிடம் பொறுத்து மெதுவாக "மாமா" என்றழைத்தாள்.
நிமிர்ந்து பார்த்த அருணின் கண்களில் என்ன இருந்தது என்று சத்தியமாக மதுவிற்கு புரியவில்லை.

" சொல்லு மது" அருண்
Enna சொல்வது ஒன்றும் புரியாமல் பேசாமல் நின்றாள் .ஒரு நிமிடம் பொறுத்து பார்த்த அருண் tierd ah இருந்த படுத்துகோ மது எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நான் முடிச்சுட்டு வந்து தூங்கறேன் என்று சொல்லிவிட்டு பலகாணிக்கு சென்று விட்டான்.

மதுவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவள் மனது தனது மாமாவின் அம்மு என்ற அன்பான அழைப்பிற்காக ஏங்கியது.

எத்தனை முறை அம்மு அம்மு என்று தன்னை சுற்றி வந்து இருப்பான். அந்த அன்பு எல்லாம் எங்கே போனது நான்கு வருடத்திற்கு முன் தன்னை கோவமாக பார்த்து விட்டு சென்ற அருணின் முகம் ஞாபகம் வந்தது மதுவிற்கு.

அன்று முதல் இன்று வரை அவன் கோவத்தின் கரணம் மதுவிற்கு புரியவே இல்லை.

அவன் எவ்வாறு இருந்தாலும் தான் முழு அன்புடன் அவனுடன் வாழ்ந்து தனது அன்பை அவனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்ற முடிவோடு கண் அயர்ந்தாள்
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#6
part 3:

காலையில் அருண் தான் முதலில் கண் விழித்தான்
பக்கத்தில் சிறு குழந்தை போல் உறங்கி கொண்டிருக்கும் தன் மனைவியின் அழகை ரசிக்காமல் இருக்க உடியவில்லை அவனால்

சந்தன நிறத்தில் இயற்கையாய் வளைந்த புருவங்களுடனும் கோலிகுண்டாய் உருண்டோடும் கண்களுடனும் ஒரு சிறிய தேவதையை படுத்திருந்தாள்

மதுஅவளை காண காண மனதில் எழும் ஆசைக்கு அணையிட தெரியாமல் விழித்தான்அருண்

கொலு கொலு கன்னங்களை முத்தமிடும் நோக்கத்துடன் குனிந்த நொடி அவளை கடைசியாய் சந்தித்த நாள் நினைவு வந்தது
மனதில் எழுந்த குழப்பத்துடன் பேசாமல் எழுந்து குளியல் அறைக்கு சென்று விட்டான்

சிறிது நேரத்தில் கண் விழித்த மது ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்தாள் குளியல் அறையில் இருந்து வந்த சத்தத்தில் நினைவு தெளிந்து பக்கத்து அறையில் உள்ள இன்னொரு குளியல் அறைக்கு சென்று குளித்து வந்தாள் .

அழகிய கடல் நீல நிற புடவை உடுத்தி கீளே சமையல் அறைக்கு வந்தால்

அங்கு சீதாலட்சுமி காபி கலந்து கொண்டிருந்தாள்
"வா டா மா" சீதாலட்சுமி

" காபி குடிடா மது"

"தேங்க்ஸ் அத்தை"

சீதாலட்சுமி அமைதியாக புன்னகைத்து
இந்த காபிய அருணுக்கு கொடுத்துரு மா என்று சொல்லிவிட்டு சட்னி அரைக்க சென்று விட்டார்

சீதாலெட்சுமியின் கணவர் மகாலிங்கம் இறந்து நான்கு வருடங்கள் சென்று விட்டது அன்றில் இருந்து சீதாலட்சுமி அதிகமா பேசுவது இல்லை

காபி எடுத்து கொண்டு மேலே சென்ற மது மெதுவாக ரூம் கதவை திறந்தாள்
அதே நேரம் அருணும் கதவை திறக்க மது தடுமாறி விழ சென்றாள்
மதுவை தன் ஒரு கையில் லாவகமாக தாங்கி கொண்ட அருண் அவளை உற்று நோக்கினான். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மாமாவை அருகில் பார்த்த மதுவின் கன்னம் வெட்கத்தில் அழகாய் சிவந்தது

இந்த தருணம் எத்தனை நேரம் நீடித்தது என்று இருவருக்கும் தெரியவில்லை
முதலில் சுதாரித்த அருண் மதுவை நேராக நிறுத்தினான்.
அதில் நினைவு மீண்ட மது மாமா காபி என்று கப்பை அவன் கையில் கொடுத்தால்

"தேங்க்ஸ் மது" என்று கூறி வாங்கி கொண்டான்
"நீ குடிச்சிட்டாயா மது"
" ம்ம்ம்..ஆச்சு மாமா"
அவன் மது என்று கூப்பிடும் போதெல்லாம் மனதில் சிணுங்கி கொண்டாள்

"எனக்கு மதுவை விட அம்மு தான் டா பிடிச்சு இருக்கு" என்று கொஞ்சும் அருணுக்கு என ஆனது
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#7
part 4:

கீழே இறங்கி வந்த மது நேராக சமையல் அறைக்கு சென்று தன அத்தைக்கு உதவ ஆரம்பித்தாள்

" அம்மா அம்மா "அருணின் குரல் கேட்டு வெளியே வந்த சீதாலட்சுமி மகனை பார்த்து "எங்க டா கிளம்பிட்ட" என்று ஆச்சர்யமாக கேட்டாள் .

" ஆபீஸ்க்கு தான் மா" அருண்

"டேய் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்ன ஆபீஸ்" சீதாவின் குரல் கடுமையுடன் ஒலித்தது.

"ஒழுங்கா மதுவை கூட்டிட்டு எங்கயாவது வெளி ஊர் கொஞ்சம் நாள் போயிட்டு வா அப்பறம் ஆபீஸ் பாத்துக்கலாம்" சீதா

"அம்மா எனக்கு கொஞ்ச நாள் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு மா முடிச்சுட்டு அவசரம் இல்லாம நிதானமா போலாம்னு தான் மா ப்ளீஸ் மா "

இவை அனைத்தையும் சமையல் அரை வாசலில் நின்று கேட்டு கொண்டிருந்த மது அங்கே வந்தால்

" அவர் வேலைய முதலில் முடிக்கட்டும் அத்தை நாங்க அப்பறம் போய் கொள்கிறோம் "
"எனக்கு என புது இடமா விடுங்க அத்தை போய் கொள்கிறோம் " என்று சொல்லிவிட்டு அத்தையை பார்த்து ஆறுதலாக சிரித்தாள் மது

அரைகுறை மனதுடன் சம்மதித்த சீதா அருணை பார்த்து "சாப்பிட வாடா "என்று சொல்லிவிட்டு சென்றார் .
அருண் நன்றியுடன் மதுவை நோக்கினான்.

"தேங்க்ஸ் மது"
" பரவலா மாமா வாங்க சாப்பிடலாம் " என்று சொல்லி மென்மையாக சிரித்து விட்டு சென்றால் மது

அன்று மாலை மதுவின் பெற்றோர் அங்கு வந்தனர்.

திருமணம் முடிந்து முடிக்க வேண்டிய வேலை இருந்ததால் மகளை தங்கை உடன் அனுப்பி வைத்து விட்டு பின்னால் வந்தனர் சங்கரி சிவானந்தம் தம்பதி

"அம்மா "என்ற கூச்சலுடன் அங்கு வந்த மது அன்னையை கட்டி கொண்டால்

சங்கரி கண்ணில் சிறிது கண்ணீர் எட்டி பார்த்தது.

"ஏய் அவ வந்து ஒரு நாள் தான் மா ஆகுது அதுக்குள்ள இது உனக்கே கொஞ்சம் ஓவர் ஆஹ் தெரியலையா" கேலியாக கேட்டு கொன்டே அங்கு அமர்ந்தார் சிவானந்தன்.

அவரது கேலி குரலில் தன்னை மீட்டு கொண்ட சங்கரி பெண்ணை பார்த்து சிரித்து கொன்டே பக்கத்தில் அமர்ந்தார்

அதற்குள் அனைவர்க்கும் காபி கலந்து எடுத்து வந்தார் சீதா
"என்ன இதெல்லாம் நீ ஏன் மா செய்யற மது கிட்ட குடுக்க வேண்டியதுதானே "மதுவை கடிந்து கொன்டே சீதாவிடம் சொன்னார் சங்கரி

"அதுனால என்ன அண்ணி மது மா காலைல இருந்து என் கூட எல்லா உதவியும் பண்ணின அண்ணி "என்று மருமகளை விட்டு கொடுக்காமல் சொனார் சீதா

அந்த சூழல் அனைவர்க்கும் ஒரு வித இதத்தை கொடுத்தது

அப்பொழுது அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்த அருணை பார்த்து சிவானந்தன் "அருண் மதுவை கூட்டிட்டு எப்ப பா மறு வீடு வர" என்று கேட்டார்

காலையில் அன்னையிடம் சொன்ன பதிலையே மாமாவிடமும் சொன்னான்
அருண் "கொஞ்சம் வேல அதிகம் மாமா முடிந்த உடன் கண்டிப்பாக மதுவை அழைத்து கொண்டு வருகிறேன் "

"சரி பா சீக்கிரமா வா " சிவானந்தன்

தனது சொந்த தங்கை கூடும்பத்திலேயே மகளை குடுத்து இருந்ததால் எந்த கவலையும் இன்றி இருந்தனர் மதுவின் பெற்றோர்.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#8
part 5:

ஒரு வாரம் ஓடி விட்டது .

மது அந்த வீட்டில் நன்றாக ஒட்டி கொண்டால் .

மதுவின் துள்ளல் குணத்தையும் வீட்டில் உள்ள அனைவரிடமும் தன்னிடமும் காண்பிக்கும் அன்பையும் பார்க்கும் பொழுது தான் தான் தவறாக நினைத்து விட்டோமோ அல்லது அவள் சிறிய வயதின் அறியாமையில் செய்ததை பெரிது படுத்தி இப்பொழுது அவளிடம் நன்றாக வாழாமல் இருப்பது தவறோ என்று தோன்றியது அருணிற்கு.

இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன் அவன் சிறிது நேரம் முன்னதாக வீட்டிற்கு வந்த போது மதுவை ரூம் வரவேற்பறை எங்கயும் காணவில்லை.

அவன் அவளை தேடி சென்ற போது தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தால் .

அவள் அருகே சென்று "மது" என்றழைத்தான் .

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை மீண்டும் இரண்டு முறை அழைத்த பின்பே திரும்பி பார்த்தாள்.

அவனை பார்த்த உடன் ஆச்சர்யமாக "மாமா அதுக்குள்ள வந்துடீங்களா" என்று கேட்ட பெண்ணவளின் கண்களில் அத்தனை ஆனந்தம்.

மனதிற்குள் ஊடுருவி பார்க்க துடிக்கும் அந்த பார்வையில் அவன் சிறிது தடுமாறி தான் போனான் .

"இன்று வேலை சீக்கிரமே முடிந்து விட்டது அம்மு அதான் வந்துடேன் "என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தவனுக்கு அதிர்ச்சி .

அவள் கண்கள் லேசாக கலங்க ஒருவித பரிதவிப்புடன் அவனை கண் இமைக்காமல் பார்த்த வாறு நின்றிருந்தாள.

"மது என்ன ஆச்சு டா"

" என்ன அம்முனு கூப்பிட உனக்கு எத்தனை நாளா மாமா" அவள் கேள்வியில் தான் அவள் தன் காதலை எத்தனை எதிர் பார்த்திருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.

அதனை நினைத்து பார்த்த அருண் இந்த நொடி முடிவு செய்தான் நடந்து முடிந்த நிகழ்வு எதுவாக இருந்தாலும் இந்த நொடி என் மனைவி என்னை உயிராய் விரும்புகிறாள்.

இனி அவளை ஒரு நாளும் எந்த துன்பமும் அண்டாமல் முழுக்க முழுக்க சந்ததோசமாக பார்த்து கொள்ள வேண்டும ்என்று.

நடந்து முடிந்ததை பற்றி பேச வேண்டாம் என்று அவன் முடிவின் விளைவு ஒரு வேளை அவனுக்கு தெரிந்திருந்தால் இப்போதே அனைத்தையும் பேசி சேரி செய்ந்திருப்பான் .

என்ன செய்வது விதி வலியது
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#9
part 6:

அன்று இரவு தங்களது அறைக்குள் நுழைந்த மது வழக்கம் போல் அருணிடம் பாலை கொடுத்து விட்டு படுக்க சென்றாள் .

"அம்மு "அருண்

"சொல்லுங்க மாமா"

"இங்க வாடா"

மதுவால் தனது மாமாவின் இந்த நெகிழ்ந்த குரலை நம்பவே முடியவில்லை.

அருணின் அருகில் சென்று அமர்ந்து அவனின் கண்களுக்குள் தனது தொலைந்த காதலனை தேடினாள்.

மதுவின் பார்வையை உணர்ந்த அருண் "என்னடி மாமாவை அப்படி பாக்கற" என்று ஒற்றை புருவை உயர்த்தி ஸ்டைல் ஆக கேட்டான் .

அவனது அந்த செய்கையில் மது முழுவதும் தடுமாறி போனால் .மேல நிமிர்ந்து அவன் கண்களுக்குள் பார்த்து "என் மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சா மாமா" என்று கேட்டாள்

அவளது அந்த ஆழ்ந்த குரலில் சிறிது தடுமாறிய அருண் தனது கய் கொண்டு அவளது இடையை அணைத்து "சாரி டா அம்மு மாமா ஏதோ குழப்பத்தில் உன்னுடன் சரியாக பேசாமல் இருந்து விட்டேன் இனிமே அப்டி நிச்சயமா நடக்காது இந்த ஒரு தடவ மாமா மன்னிப்பாயா கண்மணி"

அவன் குரலில் தெரிந்த ஏக்கத்திலும் காதலிலும் தன்னை தொலைத்த மது "ஏன் மாமா பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க .எனக்கு உங்களோட இந்த அன்பே போதும் மாமா ஐ லவ் யு மாமா "

"நானும் தான் டா லவ் யு டா அம்மு" என்று கூறி அவளை இருக்க அணைத்து கொண்டான் .

அந்த நொடி இருவர் மனத்திலும் நிறைந்து இருந்தது முழுமையான அன்பும் காதலும் மட்டுமே.

அப்பொழுது எதற்காக கோவமாக ்இருந்தீர்கள் என்று கேக்க அவளுக்கும் தோன்றவில்லை தனது கோவத்தை பற்றி கூற அவனுக்கும் தோன்றவில்லை.

இருவரும் தங்களது இணையின் மகிழ்ச்சியை தனது மகிழ்ச்சியாய் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுதே பேசி இருந்தால் பின்பு வர இருக்கும் பல கஷ்ட காலங்களை தவிர்த்து இருக்கலாம் .

மறுநாள் காலை கண் விழித்த மதுவிற்கு அன்றைய உதயம் மிகவும் அழகாக இருப்பதாக தோன்றியது.

அந்த அழகை ரசிக்க எழுந்துகொள்ள முயற்ச்சித்தவளால் எழ முடியவில்லை. என்னவென்று பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் தான் தனது மாமாவின் கைகளில் சிறை பட்டிருப்பது புரிந்தது.

இரவு அவளை அணைத்து கொண்ட படுத்த அருண் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான் .தன் மீது கய் போடு கொன்டு ஆழ்ந்து உறங்கும் கனவின் அழகை ரசிக்க ரசிக்க தெவிட்டவில்லை மதுவிற்கு .

மெதுவாக அவனது கையை விளக்கி எழ முயற்சித்தால் மது .

அவன் கையை மேலும் இறுக்கமாக அணைத்து "எங்க டி போற பேசாம படு அம்மு" என்றான்

"மாமா விடிந்து விட்டது அத்தை தேடுவாங்க மாமா ப்ளீஸ் "என்று கொஞ்சும் குரலில் கேட்டாள் .


அவளது குரலிப் மயக்கம் கொண்ட அருண் அவள் இதழ் நோக்கி குனிந்து "ஏய் மக்கு பொண்டாட்டி நீ லேட்டா போனா தான் டி இப்ப அம்மா சந்தோச பாடுவாங்க" என்று கூறிக்கொன்டே அவள் இதழ்களை அழுத்தமாக சிறை செய்தான் .

அருண் நிமிர்ந்த போது மதுவின் கன்னங்கள் வானில் இருக்கும் செவ்வானத்திற்கு நிகராக சிவந்திருந்தது அதை கண்டு இன்னும் மோகம் கொண்ட அருணின் பார்வை கண்டு பயந்த மது அவனை தள்ளி விட்டுவிட்டு எழுந்து குளியல் அறைக்குள் ஓடி விட்டாள் .

அருணின் மந்தகாச புன்னகை அவளை தொடர்ந்தது.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
89
Likes
216
#10
part 7:

கீழே இறங்கி வந்த மகனையும் மருமகளையும் பார்த்த சீதாலட்சுமியின் மனம் நிறைந்தது .

வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த அவரால் இன்றைய பிள்ளைகளின் சந்தோசத்தை உணர முடிந்தது.

சிரித்த முகமாக "வாங்கடா சாப்பிடலாம்" என்று இருவரையும் அழைத்தார

"சாரி அத்தை கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது" என்று தயங்கிய மதுவிடம் "அதெல்லாம் ஒன்னும் இல்லை டா நீங்க சாப்டுங்க" என்று கூறி விட்டு சமையல் அறைக்கு சென்றார் .

உணவு மேடையில் அமர்ந்த அருணிற்கு தட்டில் பரிமாறி விட்டு அமர சென்ற மதுவின் கையை பிடித்து தடுத்தான் அருண் .

"என்ன மாமா"

" இப்டி பக்கத்துல உக்காரு அம்மு "

மது சிரித்து கொன்டே அருணின் பக்கத்தில் அமர்ந்தாள் .

முதல் வாய் இட்லியை பிய்த்து எடுத்த அருண் "அம்மு ஆ காட்டு " என்க மது தனது செவ்விதழ்களை திறந்து வாங்கி கொண்டாள்.

அதையே தானும் அவனுக்கு ஒரு வாய் இட்லியை ஊட்டி விட்டால்.

இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஊட்டி விட்டு கொன்டே காலை உணவை முடித்தனர் இருவரும.

பிறகு மனைவியிடமும் அன்னையிடமும் விடை பெற்று அலுவலகம் சென்றான் அருண்.

இரண்டு மாடிகளை கொண்டது அவனின் அலுவலகம். உள்ளெ சென்றதும் அனைவரது காலை வணக்கத்தையும் ஏற்று கொண்டு நேராக தனது அறைக்கு சென்றான.

தனது சீட்டில் அமர்ந்து அவனது உதவியாளர் சந்துருவை அழைத்தான்.

அவன் அழைத்த அடுத்த நொடி அங்கு வந்து நின்றவனிடம் "சந்துரு நான் ஒரு பாத்து நாளுக்கு வெளியூர் செல்கிறேன் நான் வரும் வரை அனைத்தையும் பார்த்து கொள் ஏதேனும் பிரச்னை என்றால் கால் பண்ணு "என்று கூறினான்

" ஹனிமூனா சார் "சந்துரு

சந்துருவும் அருணும் சம வயதால் என்பதால் தோழமையாகவே பழகி வந்தனர் சந்துருவின் கேள்வியில் வெட்கமடைந்த அருண் அதை வெளியே காட்டி கொள்ளாமல்" கல்யாணம் ஆன ஒடனே ஹனிமூன் தான் டா போவாங்க வேற எங்க போவாங்க" என்று கூறி சிரித்தான்.

மாலை வீடு திரும்பிய அருண் தனது மனையாளை தேடி தனது அறைக்கு சென்றான் .

அருண் நினைத்தபடியே மது அங்கு தான் நின்று துணி மடித்து கொண்டிருந்தாள்.

அவள் பின்னால் மெதுவாக சத்தமில்லாமல் சென்ற அருண் அவளை பின்புறமிருந்து கட்டி தூக்கி சுற்றினான் .

"ஐயோ மாமா விடுங்க என்ன பண்றீங்க" என்று அலறினாள் மது

"ஸ்ஸ்ஸ் கத்தாதே டி "

"என்ன மொதல்ல இறக்கி விடுங்க மாமா" மது

சிரித்து கொன்டே அவளை இறக்கி விட்டான் அருண்


"அம்மு ரெண்டு நாளைக்கு நமக்கு தேவையான துணி எல்லாம் பேக் பண்ணுடா. ரெண்டு நாள் மாமா லீவு நம்ம ஜாலியா வெளில போய்ட்டு வரலாம் ".

மது சந்தோசமா சரி என்று சொல்லி பேக் செய்ய ஆரம்பித்தாள். துணியை மடித்து வைத்து கொன்டே "எங்க போறோம் மாமா" என்று கேட்டாள.


"அது சஸ்பென்ஸ் நீ வந்து பாத்துக்கோ "அருண்

"மாமா மாமா ப்ளீஸ் மாமா சொல்லுங்க நான் பாவம்ல"

" நோ நோ சஸ்பென்ஸ்ன்னா சஸ்பென்ஸ் தான்"

" போங்க மாமா உங்க கூட டூ" என்று சொல்லி அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு திரும்பி அவள் வேலையை தொடர்ந்தால் .

துணிகளை அடுக்கி முடித்து இருவரும் ஆளுக்கு ஒரு பையுடன் கீழே வந்து அன்னையிடம் கூறிவிட்டு கிளம்பினார.

"சந்தோசமா போய்ட்டு வாங்க டா "என்று கூறி கொன்டே வாசல் வரை வந்து வழி அனுப்பினார் சீதாலட்சுமி.

காரில் ஏறிய மது "சரியாய் சாப்படணும் அத்தை ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கணும்" என்று கூறி கொன்டே கை ஆட்டி விடை பெற்றால்
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.