என் உயிரில் கனவாய் நீ - En Uyiril Kanavai Nee By Aruna2014

Status
Not open for further replies.

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#11
part 8:

காரை ஓட்டி கொண்டிருந்த அருண் மதுவிடம் திரும்பி "அது என்ன அம்மு அம்மாக்கு அத்தனை அட்வைஸ் பண்ணற. அவங்க இத்தனை நாளாய் தனியாக தானே பார்த்து கொண்டார்கள்" என்று குறும்பாக கண் சிமிட்டி கேட்டான் .

"என்னை கிண்டல் பன்ரேங்களா உங்களை "என்று அவனை முறைத்து விட்டு "நான் தினமுமே அத்தைக்கு ஒரு முறையாவது போன் பண்ணி சாப்பிட்டாங்களானு கேட்டுட்டு தான் மாமா இருந்தேன்."


இதை கேட்ட அருணிற்கு தான் குற்ற உணர்வாக போய்விட்டது. தான் அவளை பற்றி தவறாக நினைத்து கொண்டு அவளிடம் பேசாமல் இருக்க அவள் தனது அன்னையுடன் தினமும் உரையாடி இருக்கிறாள் என்பது பெரிய விஷயமாக தோன்றியது .


இரவு கவிழ ஆரம்பித்த வேளையில் காரை ஒரு பெரிய உணவகத்தின் நிறுத்தினான்.

" இறங்கு அம்மு சாப்பிட்டுட்டு போகலாம் "அருண்

" சரி மாமா "

இருவரும் இறங்கி உணவகத்திற்குள் சென்றனர்.

ஆர்டர் எடுக்க வந்தவரிடம் முதலில் ஸ்வீட் கொண்டு வர சொன்னான் அருண்.

ஹோட்டலை சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுவிடம் "என்ன சாப்பட்ற அம்மு" என்று கேட்டான்.

"எதுனாலும் ஓகே தான் மாமா"

ஸ்வீட் கொண்டு வாய்த்த பேரேரிடம்" ஒரு தக்காளி சுப் இரண்டு நாண் ஒரு பன்னீர் பட்டர் மசாலா ஒரு தயிர் சாதம்" என்று ஆர்டர் குடுத்தான் ஆர்டர் குடுத்த அருணை ஆவென்று வாயை திறந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் மது.

" ஏய் என்ன அப்டி பாக்கற"
அருண்

" நீ எனக்கு பிடிச்சது எதுவுமே மரக்கலயா மாமா "

"அது எப்படி டி நான் மறப்பேன்" என்று கூறிய அருணை காதலுடன் நோக்கினால் மது.


அதற்குள் உணவுகள் வந்து விட இருவரும் உண்டு விட்டு கிளம்பினார் .

காரை கிளப்பிய அருண் "அம்மு நாம போக ரொம்ப நேரம் ஆகும் டா நீ தூக்கம் வந்தா சீட்ட பின்னாடி தள்ளிட்டு தூங்கு "என்றான்

அவனை பார்த்து பொய்யாக முறைத்த மது "அப்ப நீங்க எங்க போறோம்னு சொல்ல மாட்டிங்க "

அருணிடமிருந்து ஒரு சன்னமான முறுவலே வந்தது அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு வண்டியில் இருந்த ம்யூசிக் பிளேயரை ஆன் செய்தால்.

" உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்"

பாட்டின் இனிமையை கண் மூடி ரசிக்க ஆரம்பித்த மது அப்படியே சீட்டில் சாய்ந்து உறங்கி விட்டாள் .அவள் கண் விழித்த பொது ஒரு மிக பெரிய ரிசார்ட்ட்டின் வாயிலில் கார் நின்று கொண்டிருந்தது.

" மது இறங்கு டா "

இறங்கி அந்த இடத்தை பார்த்த மதுவிற்கு கண்களை இமைக்க தோன்றவில்லை.

அத்தனை அழகு .சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்க நடுவில் தள்ளி தள்ளி சிறு சிறு வீடுகள் போல் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அழகை கண் இமைக்காமல் ரசித்து கொண்டிருந்த மது அப்பொழுது தான் குளிரை உணர்ந்தாள் .

"மாமா நாம எங்க வந்திருக்கோம்"

"ஊட்டிக்கு டா "

அதை கேட்ட மதுவிற்கு ஆனந்தத்தில் வார்த்தைகளே வரவில்லை. தனது ஆசை அனைத்தையும் நிறைவேற்றும் கணவனுக்கு தான் என்ன செய்ய போகிறோம் என்று நினைத்து மருகினாள்.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#12
part 9:

மதுவும் அருணும் தங்களது குடிலின் சாவியை வாங்கி கொண்டு அங்கு சென்றனர்.

குளித்து காலை உணவை ரூமுக்கே வரவைத்து சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வெடுத்தனர்.

அந்த குடில் மூன்று அறைகளை கொண்டது .சிறிய வரவேற்பறை, படுக்கை அரை மற்றும் சமையல் அறையை கொண்டது.

முதலில் கண் விழித்த மது தனது கணவனின் தூங்கும் அழகை ரசித்து கொண்டிருந்தாள் .

"என் மேல அவ்ளோ அன்பா மாமா .எனக்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள். நான் ரொம்ப குடுத்துவச்சவ மாமா" மது தூங்கும் கணவனிடம் ஆசையாக சொல்லிக் கொண்டிருந்ததால்.

" நானும் தாண்டி பொண்டாட்டி" என்று கூறி அவளை இடையுடன் சேர்த்து அணைத்து கொண்டான் அருண்.

" அட பாவி நீங்க தூங்கலாயா" உதடுகள் துடிக்க வாயில் சிரிப்புடன் கேட்டால் மது .

அவன் பதில் கூறாமல் தன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்தான் பல நிமிடங்கள் நீடித்த அந்த முத்தம் இருவருக்கும் மூச்சு முட்டும் போதே நின்றது .

"சுத்த் மோசம் மாமா நீங்க" என்று சிணுங்கி கொன்டே குளியல் அறைக்குள் ஓடி விட்டாள் மது .

அருண் சந்தோசமா சிரித்துக்கொண்டான்.

அன்றைய இரவு வரை இதை போல் செல்ல சீண்டல்களும் கொஞ்சல்களுமாய் சென்றது.

இரவு உணவை முடித்துவிட்டு வரும் பொழுது அருண் தீடிர் என்று பின்னிருந்து மதுவின் கண்களை மூடினான்.

" என்ன மாமா" என்று தடுமாறிய படியே கேட்டால் மது .

"அப்டியே நட டா"

சிறிது தூரம் சென்றதும் மெதுவாக கைகளை விளக்கினான ்அருண்.

கண்களை திறந்த மதுவிற்கு ஆச்சர்யத்தையும் தாண்டிய ஸ்தமித்த நிலை.

அந்த இடத்தில ஒரு அழகிய நீர்வீழ்ச்சி வீழ்ந்து கொண்டிருந்தது .அதற்கடியில் அழகாக வெள்ளை துணியால் சிறு கூடாரம் போல் அமைத்து அதற்குள் ஒரு மேசை மீது இதய வடிவில் ஒரு கேக் வீற்றிருந்தது.

அந்த வெள்ளை துணியின் மேல் சீரியல் பல்புகள் வெளிச்சத்திற்காக போட பட்டிருந்தது. நிலவின் ஒளியோடு அந்த புல்புகளின் ஒளியும் போட்டி போட்டு கொண்டு அங்கு தங்க நிறத்தை வாரி இறைத்திருந்தது.

அந்த இடமே ஒரு சிறிய போல் சொர்க்கம் போல் கட்சி அளித்தது .

"அம்மு "ஆழ்ந்த குரலில் அழைத்தான் அருண் .

"மாமா "கிசுகிசுப்பாக ஒலித்தது மதுவின் குரல்.

அருணின் கையில் கொத்தாக சிவப்பு ரோஜாக்கள் இருந்தது.

மதுவின் முன்பு மண்டியிட்டு "என்னுடன் இந்த வாழ்வை என் இறுதி மூச்சு வரை வாழ்வாயா கண்மணி "என்று நெகிழ்ச்சியாக கேட்டான்.

" கண்டிப்பா மாமா. என் இதயம் துடிக்கும் இறுதி நொடி வரை அது உங்களுக்காக மட்டும் தான் மாமா துடிக்கும்"

" மது கேக்கை வெட்டுடா"

கேக்கை வெட்டிய மது அவனுக்கு ஊட்டி விட சென்றால் .அவன் அவள் கையை பிடித்து தடுத்து அதை அவள் வாயிலேயே போட்டான்.
பின் மெதுவாக அவள் இதழ் நோக்கி குனிந்து அதில் ஒட்டி இருந்த கேக்கை அவள் இதழோடு சேர்ந்து சுவைத்தான.

"கேக் செம டேஸ்ட்ல அம்மு" என்று கூறி கண்ணாடிதான் அந்த கள்ளன் .


"சீ போங்க மாமா" மதுவின் கன்னங்கள் இரண்டும் அவள் கையில் இருக்கும் ரோஜா மலரோடு போட்டி போட்டு கொண்டு சிவந்தது .

சிறிது அங்கு அமர்ந்து அந்த இரவின் குளிர்ச்சியை அனுபவித்து விட்டு குடிலுக்கு திரும்பினார் இருவரும்.

அன்றைய நாளின் இறுதியாக அவர்களது இல்லறம் இனிதே தொடங்கியது
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#13
part 10:

மறுநாள் காலை பதினோரு மணிக்கு கண் விழித்த மதுவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது .

இரவு முழுவதும் அருண் அடித்த கூத்தில் உறங்கவே காலை ஐந்து மணி ஆகி விட்டது.

இதில் எங்கே சீக்கிரம் எழ அமைதியாக எழுந்த மது பூனை குட்டி போல் நடந்து குளியல் அறைக்குள் சென்று விட்டாள் .

குளித்து முடித்த அழகிய மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு வெளியே வந்த இன்னும் உறங்கி கொண்டிருக்கும் கணவனின் முகம் நோக்கி குனிந்து அவன் நெற்றியில் மெருதுவாக இதழ் பதித்தாள்.

அவள் மெல்ல நிமிர முன்றபோது அருணின் பலமான கைகள் அவளை இரும்பு கேடயமாய் அணைத்து கொண்டது .

"ம்ம்ம் செம வாசனை அம்மு. என்ன சோப்பு உபயோக படுத்தற "என்று அவளை வாசம் பிடித்தான் .

"ஐயோ மாமா இப்ப தான் குளிச்சுட்டு வரேன். விடுங்க மாமா ப்ளீஸ் "என்று கெஞ்சி கொன்டே அவன் கைகளில் இருந்து திமிர முயற்சித்தால் மது.

எங்கே அவன் அசைந்தால் அல்லவா. அவன் பிடி இரும்பு பிடியாய் இருந்தது .

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவன் நெஞ்சிலேயே முகம் புதைத்தாள் .

தனது கைக்குள் வாகாய் அடங்கிய மனைவிடம் செவ்வனே தனது வேலையே தொடர்ந்தான் அருண்.

அருண் விலகியதும் அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்ட மது "மாமா நாம இன்றைக்கு இரவு கிளம்பறோமா" என்று ஆற்றாமையுடன் கேட்டால்.

அதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்த அருண் பின்பு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

" ஹா ஹா ஹா. அட லூசு பொண்டாட்டியே உனக்கு இன்னுமா புரியல .நான் ரெண்டு நாள்னு சும்மா தான் டா சொன்னேன். நம்ம இன்னும் எட்டு நாளைக்கு இங்க தான் இருக்க போறோம்"

" குட்டி அம்மு ரெடி பண்ணிட்டு தான் இங்க இருந்து கிளம்பறோம"் என்று சொல்லி கண்ணடித்தான்.

அவன் சொல்வதையே ஆவென்று கேட்டு கொண்டிருந்த மது அவன் கூறிய கடைசி வார்த்தையில் வெட்கி சிவந்தாள் .

அன்றில் இருந்து மூன்று நாட்கள் இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தனர் .

அவரகள் காதல் மலைகளின் ராணியின் மடியில் அழகாய் மலர்ந்து மலை முழுவதும் தனது வாசத்தை பரப்பி நின்றது .

நான்காம் நாள் காலை அருண் "அம்மு இன்னைக்கு போட்டிங் போகலாமா டா "என்று அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து கொன்டே கேட்டான்.

உற்சாகமடைந்த மது" ஹய் போலாம் மாமா" என்று துள்ள ஆரம்பித்தாள் .

இருவரும் அன்று மாலை காரில் கிளம்பி போட்டிங் செல்லும் இடத்திற்கு சென்றனர்.

"இந்த இடம் ரொம்ப அழகா இருக்குல்ல மாமா "என்று கன்னத்தில் கை வைத்து கண்களை உருட்டியவரே கூறினாள் .

அவளின் செய்கையை ரசித்து கொன்டே" நான் டிக்கெட் வாங்கிட்டு வந்துறேன் அம்மு" என்றுவிட்டு சென்றான் .

அவர்கள் ஏறியது ஆறு நபர்கள் அமர கூடிய மோட்டார் படகு .இவர்கள் இருவரை தவிர ஒரு கணவன் மனைவி மற்றும் அவர்கள் இரு பெண் குழந்தைகளும் ஏறினர் .

அதில் ஒரு குழைந்தை மதுவிடம் வந்து "அக்கா உங்களுக்கு தண்ணீரில் செல்வது பயமாக இல்லையா என்று கண்ணை உருட்டி கைகளை அசைத்து கேட்டது."

அதன் அழகில் மயங்கிய மது "ஒரு பயமும் இல்லடா குட்டி ஜாலியா இருக்கும். ஆண்ட்டி கூட உக்காந்து வறீங்களா" என்று பாப்பாவை தன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அந்த குழந்தையின் அன்னை இவர்களை பார்த்து சிறிது விட்டு தனது சிறிய மகளை மடியில் வைத்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .அருண் மதுவின் காதுக்குள் "என்ன டி இது இங்க தனியா ரெண்டு பேர் மட்டும் ரொமான்ஸ் பண்ற மாதிரி தனி படகு எதுவும் விட மாட்டேங்கிறாங்க" என்று கிசுகிசுத்தான் .மது அழகாக வெட்கி சிவந்தாள் .

மது அந்த குழந்தையுடன் திரும்பி "உங்க பேர் என்ன" என்று கேட்டாள்

"ஆர்த்தி "

"ஆர்த்தி குட்டி என்ன படிக்கறீங்க"

" ம்ம்ம். first ஸ்டாண்டர்ட்" என்று அந்த பிஞ்சு .
"அது என் தங்கச்சி குட்டி பாப்பா தெரியுமா இன்னும் ஸ்கூலுக்கு எல்லாம் வரவே இல்ல" என்று அவள் கேட்காத விஷயத்தையும் சேர்த்து சொன்னது .


இருவரும் சிறிது நேரத்திலேயே நன்றாக பழகி விட்டார்கள் .

இருவரும் பேசி சிரித்து கொண்டு வருவதை பார்க்கும் பொழுது அந்த குழந்தைக்கும் மதுவிற்கு பெரிதா ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை அருணிற்கு .

படகு அங்கு தூரமாக சென்று வட்டமடித்து .

அதில் குஷாயான ஆர்த்தி எழுந்து நின்று ஆர்ப்பரித்து விளையாட ஆரம்பித்தது.

அவளுடன் சேர்ந்து மதுவும் எழுந்து இருவரும் படகின் ஒரு ஓரமாக சென்று சிரித்து விளையாடி கொண்டிருந்தனர்.

அப்பொழுது தீடிர் என்று ஏற்பட்ட ஒரு சூழலில் படகு சிக்கி தள்ளாடியது.

அனைவரும் பயந்து அலற ஆரம்பித்தார்கள் .

அருண் சுதாரித்து எழுந்து மதுவை நோக்கி வருவதற்குள் படகு தலை குப்பிற கவிழ்ந்தது.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#14
part 11:

அருணிக்கிற்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை .

அவன் மேல வர முயற்சித்த போது அவர்கள் வந்த படகு தங்கள் மேல் கவிழ்ந்திருப்பதை உணர்ந்தான்.

அங்கு இருந்த ஆண்கள் மூவரும் படகை நகற்றினார். அவர்கள் அனைவரும் உயிர் காக்கும் உடை அணிந்திருந்ததால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை .

அருண் திரும்பி மதுவை தேடினான் .அவளை சுற்றி எங்கும் காணவில்லை.

மது காணாது பதறிய அருண் அங்கு முழுவதும் சுற்றி சுற்றி தேட ஆரம்பித்தான் எங்கேயுமே மதுவை காணாமல் பதட்டமடைந்த அருண் "மதுதுதுது" என்று பெருங்குரல் எடுத்து கத்தினான் .

அப்போதுதான் பக்கத்தில் "ஆர்த்தி "என்ற அலறலும் சேர்ந்து ஒலித்தது.

அங்கு திரும்பிய அருண் "என்ன ஆச்சு மா "என்று பதற்றத்துடனே கேட்டான்.

" ஆ ஆ ஆர்த்தியை காணும் தம்பி" என்று அழுதார் அவர்.

அதற்குள் அவர்களை மீட்டு செல்ல இன்னொரு படகு அங்கு வந்து சேர்ந்தது.

அருண் அந்த படகோட்டியை பார்த்து "இவர்கள் அனைவரும் கரையில் விட்டுவிட்டு திரும்பி வாருங்கள் இருவரை காணவில்லை தேட வேண்டும்" கூறினான்.

ஆர்த்தி இல்லாமல் வர மாட்டேன் என்று அடம் பிடித்த அவளது அன்னையை "நீங்கள் பயப்படாமல் செல்லுங்கள் மா ஆர்த்தி நிச்சயமாக மதுவுடன் தன் இருப்பாள் நான் அவர்களை அழைத்து கொண்டு வருகிறேன்" என்று தைரியம் கூறி அனுப்பினான்.

சென்ற படகு திரும்பி வரும் வரை அவனால் முடிந்த அளவு நீரில் மூழ்கி தேடினான்.

தன்னவளை கண்டு பிடிக்க முடியாத ஒவ்வொரு நொடியும் செத்து பிழைத்து கொண்டிருந்தான் அருண்.

அந்த நொடி மதுவின் மீது அவன் வைத்திருந்த காதலின் தீவிரத்தை உயிர் வரை உணர்ந்தான் .

மற்றவர்களை இறக்கி விட்டுவிட்டு படகை திருப்பிக்கொண்டு வந்தார் படகோட்டி .

அவர் அருணிடம் வந்து "ஏரிக்கோங்க தம்பி அந்த பக்கம் ஒரு கரை உள்ளது அங்க சென்று பார்க்கலாம்" என்று கூறினார் .


அவன் படகில் ஏறி கொண்டு ஒரு நொடி கூட கண் சிமிட்டாமல் அங்குலம் அங்குலமாக அளந்தபடி வந்தான் .

அப்பொழுது "மாமா "என்று மதுவின் குரல் சன்னமாக ஒலித்தது .

அதை கேட்டு ப்ரகாசமடைந்த அருண் படகை அந்த இடம் நோக்கி ஓட்ட சொன்னான்.

அவர்கள் அங்கு சென்ற போது மது கரை ஓரத்தில் நின்று "மாமா "என்று கத்திக்கொண்டிருந்தால் .

அவள் பக்கத்தில் நின்றிருந்த ஆர்த்தி அவள் காலை கட்டிக்கொண்டு "அம்மா அம்மா "என்று அனத்தி கொண்டிருந்தது .

அங்கு விரைந்து சென்றவர்கள் அவர்களை பத்திரமாக படகில் ஏற்றிக்கொண்டு கரை சேர்ந்தனர். ஆர்த்தி ஓடி சென்று தனது அம்மாவை கட்டி கொண்டது. அவளது தாயும் உணர்ச்சி மிகுதியில் தன் மகளை அல்லி அணைத்து கொண்டாள்.

குழந்தையின் நலத்தை நன்கு சோதித்த பின் மதுவிடமும் அருணிடமும் திரும்பி "நீங்கள் இருவரும் இன்று என் உயிரையே காப்பாற்றி கொடுத்துளீர்கள் .ரொம்ப நன்றி "என்று கை கூப்பி நன்றி உரைத்தார் .

"அதெல்லாம் ஒன்றும் இல்லை மா .நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க நாங்களும் கிளம்பறோம்" என்று கூறிவிட்டு மதுவிட "கிளம்பலாம் டா "என்று கூறினான்.


மதுவும் சன்னமாக சிரித்து ஆர்த்தியின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றாள் .

கார் பயணம் முழுவதும் அருண் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .மதுவிற்கு அசதியாக இருந்ததால் அவளும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு வந்தாள்.

தங்களது குடிலுக்குள் நுழைந்த அடுத்த நொடி அருண் மதுவை இறுக்கமாக அணைத்து கொண்டான். காற்று புக கூட இடம் அளிக்காமல் எலும்புகள் நொறுங்கி விடும் போல் இறுக்கமாக அனைத்திருந்த அருணின் அணைப்பில் மதுவிற்கு வலித்தாலும் அது அவனது காதலின் வெளிப்பாடு என்பதை உணர்ந்தவள் அவனோடு ஒன்றினாள்.

சிறிது நேரத்தில் அருணின் உடல் மெலிதாக குலுங்குவதை உணர்ந்தவள் அவனை நகற்றி பார்த்தால் .அவன் கண்கள் கலங்கி இருந்தது.

" மாமா என்னது இது. எனக்கு தான் ஒன்னும் இல்லையே மாமா ப்ளீஸ் மாமா வருத்தப்படாதேங்க" என்று கூறினாள் .


அவளின் வார்த்தைகள் அவனுக்கு போதவில்லை போலும் அவன் உடல் நடுக்கம் குறையவில்லை .

கலங்கிய விழிகளும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் "அம்மு உனக்கு மட்டும் ஏதேனும் ஆகி இருந்தால் நானும் அந்த ஏரியை விட்டு வந்தே இருக்க மாட்டேன் டா" என்றும் நடுங்கும் குரலில் கூறினான்.

இதை கேட்டு கலங்கிய அருணை தன் தோல் மீது சாய்த்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

மெதுவாக அவனது தலையை கொதி கொடுத்தாள் .அதில் சிறிது சிறிதாக அமைதி அடைந்த அருண் மதுவை மெதுவாக நிமிர்ந்து பார்த்தான்.

அந்த கண்களில் தான் எதனை காதல் அவன் காதலின் ஆழத்தை மது உயிர் வரை உணர்ந்தாள் .

"என்னடி ஆச்சு நீங்க எப்படி அந்த கரை பக்கம் போனீர்கள்" என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

" படகில் நாங்கள் நின்றுகொண்டிருந்ததால் படகு கவிழ்ந்த போது நாங்கள் மட்டும் வேறு பக்கம் சென்று விழுந்துட்டோம் மாமா. சுதாரித்து தண்ணீரில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது ஆர்த்தியின் உயிர் காக்கும் உடை மட்டும் அறுந்து தண்ணீரில் எங்கயோ சென்று விட்டது. என்னால் அவளை மூலகாமல் அதிக நேரம் தண்ணீரில் பிடித்துக்கொண்டிருக்க முடியலை மாமா . அதான் பக்கத்தில் இருந்த கரைக்கு சென்று விட்டு உங்களுக்கு குரல் கொடுத்தேன்" நடந்ததை விலக்கி முடித்தாள் மது .

கேட்டு முடித்த அருண்" நீ போய் டிரஸ் மாத்திட்டு வா டா" என்று அனுப்பி வைத்தான் .

அவள் வருவதற்குள் அவனும் ஈர துணியை மாற்றி இருந்தான் .

துணி மாற்றி வந்த மதுவை தனது கை வலயத்திற்குள் படுக்க வைத்து கொண்டான் .
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#15
part 12:

அடுத்து வந்த மூன்று நாட்களும் அருண் அதிகமாக வெளியே செல்வவே இல்லை.

மீறி எங்கயாவது சென்றாலும் மதுவை தன் கை வலயத்திற்குள்ளயே வைத்து கொண்டான் .மதுவிற்கு கொஞ்சம் கொஞ்சமா போர் அடிக்க ஆரம்பித்தது.

அன்று அவர்கள் கிளம்பவேண்டிய நாள்.

காலையில் அருணிடம் வந்த மது "மாமா இனிக்காவது எங்கயாவது நல்லா சுத்திப்பாத்துட்டு கில்பாலம் மாமா ப்ளீஸ் "என்று கெஞ்சினாள் .

அருண் யோசனையாக நெற்றியை சுருக்கினான். அதை கவனித்த மது அவசரமாக "மாமா நான் உங்கள விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் .உங்க கூடவே பசை போட்டதுபோல் ஒட்டு கொன்டே வரேன் மாமா ப்ளீஸ்" என்று கண்கள் சுருக்கி உதட்டை குவித்து கெஞ்சியவிலடம் முடியாது என்று அருணால் மறுக்க முடியவில்லை .

"சரி டா வா போகலாம்"என்று இருவரும் கிளம்பினர்.

அவர்கள் முதலில் தொட்டபெட்டா சென்றனர்.
அங்கு சிறிது நேரம் இருந்த விட்டு பிறகு ரோஸ் கார்டன் அழைத்து சென்றான் .

அங்கு இருந்த வித விதமான பூக்களை பார்த்து மதுவிற்கு மிகவும் பிடித்திருந்தது .

அவள் ஒன்றொன்றாக மெதுவாக நின்று ரசித்து கொன்டே வந்தால் .

அருண் அவள் ரசிக்கும் அழகை பார்த்து அவளை ரசித்து கொன்டே சன்னமான ஒரு முறுவலுடன் நடந்து கொண்டிருந்தான்.

அங்கிருந்த ஒரு அழகிய மலரை காண்பித்து "மாமா இந்த பூ ரொம்ப அழகா இருக்குல்ல "என்று கேட்டாள் மது .

அவளையே பார்த்து கொண்டிருந்த அருண் " ஆமாம் ரொம்ப அழகு தான் என்று கிரக்கமான குரலில் சொன்னான்.

அவனின் குரலில் இருந்த வித்யாசத்தை உணர்ந்து மது அவனை திரும்பி பார்த்தாள் "பிங்க் நிற பூ ரொம்ப அழகா இருக்கு அம்மு" என்று கூறி கண்ணடிதான் .

அன்று அவள் பிங்க் நிற புடவை தான் அணிந்திருந்தாள்.

அவன் தன்னை தான் குறிப்பிடிடுகிறான் என்று உணர்ந்து மது "சீ போங்க மாமா" என்று வெட்கபட்டுக்கொன்டே ஓடி விட்டாள் .

அருண் சிரித்தபடியே அவளை பின்தொடர்ந்தான் .

அன்று இரவு பதினோரு மணி அளவில் அவர்கள் இருவரும் ரெசார்ட்டில் இருந்த கிளம்பினர்.

காரில் அவனுடன் சலசலத்து கொன்டே வந்தால். அப்போதுதான் கார் சென்னை செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை உணர்ந்தாள்.

அருணிடம் திரும்பி "எங்க மாமா போறோம் "என்று கேட்டாள் .

"உங்க வீட்டுக்கு தான் டா. மாமாகிட்ட மறுவீடு வரேன்னு வாக்கு குடுத்து இருக்கானே" என்று குறும்புடன் கூறினான்.

அவளும் சிரித்துகொன்டே சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

விடியற் காலையில் அவர்கள் இருவரும் மதுவின் ஊரான திருப்பூரை சென்று அடைந்தனர் .

விடியற் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற மகளும் மருமகனையும் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர் மதுவின் பெற்றோர்.

" வா மது. வா அருண்"என்று பரபரப்புடன் வரவேற்றனர் .

"வரோம் மாமா வரோம்" என்று சிரித்தபடியே உள்ளெ வந்தான் அருண் .

அருணின் இலகு தன்மையும் மது கண்களில் இருந்த ஒளியும் அவர்களின் இனிமையான வாழ்வை பெரியவர்களுக்கு உணர்த்தியது .
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#16
part 13:

மதுவும் அருணும் சிறிது நேரம் மதுவின் அறைக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

முதலில் கண் விழித்த மது மணியை பார்த்து திடுக்கிட்டாள் .மணி பாத்து ஆகி இருந்தது.

மெதுவாக அருணின் நெஞ்சில் குத்தி "மாமா மாமா" என்று எழுப்பினாள்.

" ம்ம்ம் என்ன டீ "என்று சிணுங்கி கொன்டே அவளை மீண்டும் இறுக்கமாக அணைத்து கொண்டான்.

" மாமா மணி பாத்தாச்சு மாமா .சும்மா அலும்பு பண்ணாம எழுந்துக்கறீங்களா இல்லையா" என்றாள் .

அவள் குரலில் கண் விழித்த அருணின் கண்களை அவளது கொலு கொலு கன்னங்கள் ஈர்த்தது அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட அருண் அவள் அடிக்க வருவதை உணர்ந்து அவள் கையில் அகப்படாமல் குளியல் அறைக்குள் ஓடி விட்டான்.

இருவரும் இதே போல் செல்ல சீண்டல்களுக்கு இடையில் குளித்து விட்டு கீழே வரும் பொழுது பனிரெண்டு மணி ஆகி விட்டது.

அவர்களை பார்த்து மென்மையாக சிரித்த சங்கரி "சாப்பிட வாங்கடா" என்று இருவரும் அழைத்தார் .

சாப்பிட அமர்ந்த இருவருக்கும் இலை போட்டு ஒரு முழு விருந்தே பரிமாறினாள் சங்கரி.

உணவை வாசம் பிடித்த அருண் "ம்ம்ம் செம வாசனை அத்தை. உங்கள் கை ருசியே தனிதான் "என்று ரசித்து உண்டான் .

நான்கு வருடங்களுக்கு பின் தான் சமைத்த உணவை ரசித்து உண்ணும் அருணை நெகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள் அந்த அன்னை.

சாப்பிட்டு முடித்து மீண்டும் குட்டி தூக்கத்தை போட்டனர் அருண் தம்பதியினர்.

மாலை கீழே இறங்கி வந்த அருண் சங்கரியிடம் "அத்தை மாமா எங்கே "என்று கேட்டான்.

" அவருக்கு ஒரு அவசர வேலை வந்து விட்டது அருண். உங்களுடன் இருக்க முடியவில்லை இரவு தான் வர முடியும் என்று கூறினார்" என்றாள்.

" சரி அத்தை நானும் மதுவும் கொஞ்சம் வெளியில் செல்கிறோம் இரவு வெளியிலேயே சாப்பிட்டு விடுவோம் "என்று கூறினான்.

" சரிப்பா சீக்கிரம் வந்து விடுங்கள் .கரை எடுத்துட்டு போ அருண்" சங்கரி

"இல்ல அத்தை. நாங்க மதுவோட ஸ்கூட்டியில் செல்கிறோம் "என்றான்.

மதுவிற்கு இச்செய்தி ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

அவள் நிலையை உணர்த்த அருண் அவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு முன்னால் சென்றான் .

அவர்கள் காதலித்த காலத்தில் அந்த வண்டியில் தான் சேர்ந்து சுற்றுவார்கள் .

அந்த நினைவில்தான் அருண் இன்று அந்த வண்டியை தேர்நதெடுத்திருந்தான்.

மதுவும் அதை நினைவில் வெட்கத்துடன் அவனை பின் தொடர்ந்தாள் .

அருண் அவளை முதலில் அழைத்து சென்ற இடம் ஒரு மாந்தோப்பு .

அங்கு சென்றதும் இருவருக்கும் பழைய நினைவுகள் மனதில் நிழலாடியது.

மனம் முழுவதுவது பூரிப்புடன் அங்கிருந்த ஒரு மரத்தை தேடி சென்றாள் மது .
அதில் "MA" என்று அழகாக எழுதி இருந்தது.

அருண் அதை மெல்லிய சிரிப்புடன் வருடி குடுத்தான். இருவரும் அப்படியே அந்த மரத்தின் அடியில் அமர்ந்தனர்.

அருண் மதுவின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான் .

அம்மு "இந்த இடத்தை பாக்கும் போது நான் உன்னிடம் காதல் சொன்னனது இன்று போல் தோன்றுகிறதடி" என்று குரலில் கனவு மின்ன கூறினான் .

"ஆமாம் மாமா. அந்த காதல் நிறைவேறாமல் போய் விடுமோ என்று நான் பயந்த போது நமக்கு திருமணம் நடந்து நம் இப்போது சந்தோசமாக வாழ்வது எல்லாமே கனவு போல் இருக்கு மாமா" என்றாள்.

அருண் அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினான்.

" ஆ எnna மாமா பண்றீங்க" மது

"நிஜம் தாண்டி என் அழகு பொண்டாட்டி"

இதை கேட்டு மது கலகலவென சிரித்தாள் .

அதில் அவன் சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது .

சிறிது நேரம் அந்த இடத்தின் அருமையையும் அவர்களது பழைய நினைவுகளும் ஆசை போட்டு விட்டு அங்கிருந்து அந்த மாந்தோப்பின் கடைசியில் இருந்த கிணற்றடிக்கு சென்றனர்.

அந்த கிணத்தின் உள்ளெ எட்டி பார்த்த மது "மாமா நான் ஒரு தடவ கிணற்றில் குதிக்கவா "என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டாள்.

" ஐயோ நீ ஒரு தடவ குதிச்சு நான் பட்டதே போதும் மா .பேசாம வா "என்று அவளை இழுத்து கொண்டு கிளம்பி விட்டான். மது சிரித்து கொன்டே அவனை தொடர்ந்தாள் .

அவர்கள் இருக்கவரும் அங்க இருந்த சைனீஸ் உணவகத்திரிக்கு சென்று மதுவிற்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து உண்டுவிட்டு வீடு திரும்பினார்.

இரவு ரூமிற்கு வந்த இருவரது மனமும் நிறைந்திருந்தது.

அன்று இரவு அருணின் காதலின் முழு வேகத்தை கண்டால் மது .

அவளுக்கு வலித்தாலும் அவனின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் இசைந்தாள் .

அன்றைய பொழுது இருவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத பொழுதாக அமைந்து போனது
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#17
part 14:

மறுநாள் காலை தாமதமாக கீழே இறங்கி வந்த அருண் மற்றும் மதுவை பார்த்து அங்கு வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த சிவானந்தன் பெரிதாக புன்னகைத்தார் .

"வா பா அருண். நேத்து கொஞ்சம் அவசர வேலை வந்துவிட்டது. அதன் உங்களுடன் இருக்க முடியவில்லை. இன்று முழுவதும் உங்களுடன் தான்" என்று கூறினார்.

அருணும் சிரித்து கொன்டே அவர் பக்கத்தில் போய் அமர்ந்தான் .

அப்பொழுதைதான் அவர் பக்கத்தில் கையில் கோப்புடன் அமர்ந்திருக்கும் இன்னொரு இளைஞனை பார்த்தான். அதற்குள் அங்கு வந்த மது "ஹாய் கதிர் எப்படி இருக்கிறாய் . எப்பொழுது வந்தாய்" என்று கேள்விகளை அடுக்கினாள் .

அவளை பார்த்து சிரித்த கதிர் "இப்ப தான் மா வந்தேன். நான் அப்பா கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு போலாம்னு வந்தேன் மா. என்று கூறினான்"

மது கதிர் என்று அழைத்ததுமே அருணிற்கு அவனை நினைவு வந்து விட்டது .அவனை காணும் பொழுது அருணிற்கு உள்ளிருந்து எழும் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாக பின்னால் தள்ளி விட்டுவிட்டு எழுது சென்று விட்டான்.

கதிரிடம் பேசிக்கொண்டிருந்த மது தீடிரென்று தன் கணவன் கோபத்துடன் எழுந்து செலவும் என்னவென்று புரியாமல் "மாமா மாமா "என்று கூப்பிட்டால்.

அவன் எதையும் காதில் வாங்காமல் தங்களது அறை நோக்கி சென்று விட்டான்.

அவனை குழப்பத்துடன் பார்த்த சிவானந்தன் "நீ போய் அருணுக்கு எnna வேண்டும் என்று பாரு மது "என்று அனுப்பி வைத்தார் .

மதுவும் குழப்பத்துடனே தங்கள் அறைக்கு சென்றாள் .அங்கு அருண் ஜன்னல் கம்பிகளை இருக்க பிடித்து தனது கோவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டிருந்தான் .

"மாமா என்ன ஆச்சு ஏன் கோவமா எழுந்து வந்தேங்க" என்று மது அவன் பின்னல் இருந்து கேட்டாள்.

அருண் மதுவிடம் திரும்பி கோபத்துடன் "அவன் எதுக்கு இங்கே வந்தான் என்று கத்தினான்."

" யாரு மாமா "என்று குழப்பத்துடன் கேட்டாள் மது.

" அதான் அந்த கதிர். அவனுக்கு இங்க என்ன வேலை "

"அவன் நம்ம ஆபீஸ்ல தான் மாமா வேலை செய்கிறான். அப்பாவிடம் ஏதோ கையெழுத்து வாங்க வந்து இருக்கிறான் .அவனை பார்த்து நீங்க எதுக்கு மாமா இவ்ளோ கோவப்படறீங்க" என்றாள் .

"அவனால் தான் நான்கு வருடங்களாய் என் வாழ்வில் நான் சந்தோசமா கழிக்க வேண்டிய நாட்களை குழப்பத்துடன் கழிக்க வேண்டியதாக போயிற்று. அவனை பார்த்தால் கோவம் வராமல் என்ன செய்யும்." இன்னும் கோவம் சற்றும் குறையாதவனாய் கத்தினான் அருண்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்த மது அடுத்த நொடி " என்ன சொல்றேங்க மாமா "என்று ஒருவித அழுத்தத்துடன் அருணை நோக்கி கேட்டாள்.


அவன் இத்தனை வருடங்களை தன்னுடன் பேசாமல் இருந்ததற்கும் கல்யாணம் ஆன புதிதில் அவனது குழப்ப பார்வைகளுக்கு அவனது இந்த கோவத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் என்று நிச்சயமா தோன்றியது.

அவள் குரலிலும் பார்வையிலும் உள்ள வேறுபாட்டை உணர்ந்ததும் தான் அருண் தான் கோவத்தில் உளறியதை புரிந்து கொண்டான். அவசரமாக "ஒன்னும் இல்ல டா ஏதோ கோவத்தில் கத்திவிட்டேன் வா கீழே போகலாம் "என்று அவள் கையை பிடித்து கொண்டு நகர முற்பட்டான் .

ஆனால் மது இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அவன் பதற்றமே தான் நினைத்தது சரி தான் என்று மதுவிற்கு உணர்த்தியது.

அவன் கண்களுக்கும் அழுத்தமாக நோக்கி "எnna சொன்னேங்கனு கேட்டேன்" என்று மிகவும் அழுத்தமாக கேட்டாள் மது.

அவள் தான் உண்மையை கூறமால் நகர மாட்டாள் என்று உணர்ந்த அருண் தயங்கி தயங்கி நான்கு வருடங்களுக்கு முன் அன்று மாலை நடந்ததை கூறினான்.

" நான் ஊருக்கு கிளம்பிய அன்று முன் மாலை உன்னை அழைத்து வர உன் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நீ நாம் வழக்கமாக சந்திக்கும் மாந்தோப்பிற்குள் செல்வதை பார்த்தேன். உன்னை தொடர்ந்து வர முற்பட்டபோது எனக்கு போன் வந்தது. அதில் அப்பாவுக்கு மிகவும் சீரியஸ் ஆக உள்ளதாகவும் என்னை உடனடியாக வருமாறும் அழைத்தனர.் உன்னை அழைத்து கொண்டு செல்லலாம் என்று தோப்பிற்குள் வந்து உன்னை தேட ஆரம்பித்தேன். அப்பொழுது நாம் எப்போதும் அமரும் மரத்தின் அடியில் நீ.." என்று கூறி தயங்கி நிறுத்தினான் அருண் .

அன்று நடந்தது மதுவிற்கு நினைவு வந்தது. தான் நினைத்தது போல் நடந்திருக்க கூடாது என்று அணைத்து கடவுளும் வேண்டி கொண்டு "ம்ம் சொல்லுங்கள்" என்று அவனை பார்த்து கூறினாள்.

அவள் வேண்டுதல்கள் அனைத்தையும் பொய்யாக்கி அவள் தலையில் இடியை இறக்கினான் அருண் .

"அங்கு உனக்கு மிக அருகில் கதிர் உன் முகத்தை கைகளால் தாங்கி கொண்டு நின்றிருந்தான். அதை பார்த்ததும் எனக்கு .."என்று கூறி தலைகுனிந்தான்.

மேலே அவனால் கூற முடியவில்லை.

" சந்தேகம் வந்துவிட்டது. சரியா" என்று அவன் கூறாமல் விட்டதை அவள் கூறி முடித்தாள் .

"இவள் என்னுடன் பழகும் அதை நேரத்தில் இன்னொருவனுடனும் பழகுகிறாள் என்று நினைத்து விட்டீர்கள் அப்படித்தானே" சாட்டையாய் வந்தது மதுவின் கேள்வி .

அருணால் ஒன்றும் கூற முடியாத நிலை .அன்றைய சூழ்நிலையில் அவன் நினைத்ததும் அது தானே அதை தன் உயிராக மாறிவிட்ட மதுவிடம் எப்படி கூறுவான் .

இருந்தும் தான் இப்பொழுது பேசமாக் இருந்தால் பிரச்னை இன்னும் பெரிதாக தான் மாறும் என்றென்னி "அம்மு அன்றய சூழ்நிலையில் நிறைய குழப்பங்கள் டா .அதனுடன் இதுவும் சேரவும் குழம்பி விட்டேன் .சாரி டா அம்மு. மாமாவை மன்னித்து விடு டா ப்ளீஸ் "என்றான் .


கண்களில் கரைகட்டிய நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தால் மது .

அவள் கண்களில் கண்ணீரையும் மீறி அத்தனை கோவம் .

"மன்னிப்பா ..எத்தனை சுலபமாக கூறி விட்டிர்கள். கதிர் எனக்கு அண்ணன் போல் .சிறிய வயதில் இருந்து ஒன்றாக படித்ததால் எங்களுக்குள் இருந்தது சகோதர பாசம் மட்டுமே. நேற்று ஒரு மரத்தில் "MA" என்று எழுதி இருந்ததை காண்பித்தேன் ஞாபகம் இருக்க" என்று கேட்டாள்.

அவன் ஆம் என்பது போல் தலை ஆட்டினான் .

அதை எழுதத்தான் அன்று அங்கு சென்றான் மரத்தில் எழுதி கொண்டிருக்கும் போது மர துகில் கண்களில் பட்டு விட்டது. நீங்கள் எங்களை பார்க்கும் பொது அவன் அதை என் கண்களில் இருந்து ஊதி விட்டுக்கொண்டிருந்தான் "என்று அடக்க முடியாத ஆற்றமையுடன் கூறி முடித்தாள் .

"இப்பொழுது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா இல்லை பொய் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா" என்று கேட்டாள் .
அவளது குரலில் கடைசியாக ஒலித்தது ஒரு விரக்தியான நாக்காலே.

அருணிற்கு இப்போது தான் செய்த தவறின் வீரியம் நன்றாக புரிந்தது. குற்றஉணர்வுடன் அவளை நிமிர்ந்து பார்க்கையில் அவள் வேகமா கீழே சென்று விட்டாள்.

அவளை தொடர்ந்து கீழே வந்த அருணிடம் கிளம்பி கொண்டிருந்த கதிர் "அருண் சார் என் தங்கச்சியை கண் கலங்காம பாத்துக்கணும் சார்" என்று விளையாட்டாக கூறி விட்டு சென்றான்.

அதை கேட்டு மது அருணை பார்த்த பார்வையில் எந்த பிரச்சனை அதனை எளிதாக முடியாது என்று அருணிற்கு தோன்றியது
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#19
part 15:

மாலை கீழே வந்த மது அதற்கு பிறகு அவர்கள் அறைக்கு வரவே இல்லை.

இரவு உணவை முடித்து கொண்டு அருணும் மதுவும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

காரில் வரும் போது மது அருண் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை .

சீட்டை பின்னால் சாய்த்து கொண்டு தூங்குவதை போல் கண்களை மூடி கொண்டாள்.

அருணிற்கு அவளை எழுப்பி பேசும் தைரியம் வரவில்லை. அவளை திரும்பி திரும்பி பார்த்து கொன்டே கரை ஓட்டி கொண்டு வந்தான்.

மறுநாள் காலை அவர்கள் வீடு சேரும் போது பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது.

வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்த சீதாலட்சுமி "வாங்க டா. payanam எல்லாம் நல்ல படியாக இருந்ததா "என்று விசாரித்தார் .

"நன்றாக இருந்தது அத்தை. கொஞ்சம் அசதியாக உள்ளது படுத்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள் மது.

மது தனது அன்னையிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருப்பது அருணிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

சீதாலட்சுமிக்கு உண்மை தெரிந்தாள் நிச்சயம் துடித்து போவார் .இவற்றை எல்லாம் யோசிக்கும் போது தான் தான் செய்த முட்டாள் தனம் அருணிற்கு நன்கு புரிந்தது.

அன்னை வரை விஷயம் வருவதற்குள் அதை சரி செய்து விட வேண்டும் என்ற முடிவுடன் அன்னையிடம் ஒரு சிறிய தலை அசைப்புடன் தங்களது அறைக்கு சென்றான்.

அங்கு மது ஜன்னல் அருகே சென்று தோட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு நின்றிருந்தாள் .அவள் பின்னால் சென்ற அருண் "அம்மு" என்று மெதுவாக அழைத்தான்.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஒரு நிமிடம் யோசித்தவன் பின் தனது தரப்பு விளக்கத்தை முதலில் கூறி விட வேண்டும் என்றென்னி பேச ஆரம்பித்தான் .

"அம்மு அன்று நான் உன்னை சந்தேகித்து மிக பெரிய தவறு தான். ஆனால் அன்றைய எனது மனநிலையும் சீராக யோசிக்கும் நிலையில் இல்லை டா .அப்பொழுதான் அப்பாவிற்கு சீரியஸ் என்று போன் வந்திருந்தது .நான் உன்னை தேடி வரும் போதே பதற்றத்துடன் தான் வந்தேன். அந்த பதட்டத்தில் உன்னை அந்த நிலையில் பார்த்ததும் எனக்கு வேறு யோசிக்க தெரியவில்லை டா. அதான் அப்படியே கிளம்பி விட்டேன். இங்கு வந்ததற்கு பிறகு என் தந்தை இறந்து தொழில் பாரம் மொத்தமும் ஏன் தலையில் விழுந்தது .மிகவும் சிரமப்பட்டேன் அம்மு. தொழிலை பழைய நிலைக்கு கொண்டு வரவே எனக்கு இத்தனை வருடங்கள் ஓடி விட்டது .அம்மா திருமண பேச்சை எடுக்கும் போது எனக்கு உன்னை தவிர வேறு யார் நினைவும் வரவில்லை. அம்மா நீ தான் பெண் என்று கூறியதும் உடனடியா சரி என்று சொல்லிவிட்டேன் டா." என்று நீளமாக தனது விளக்கத்தை கொடுத்தான் அருண் .


அத்தனையும் அமைதியாக கேட்ட மது அவனை பார்த்து ஒரே ஓரு கேள்வி தான் கேட்டாள் .

"அப்போ திருமணம் முடிந்த ஏன் என்னுடன் சில நாட்கள் சரியாக பேசாமல் இருந்தேர்கள்" என்று தெரிந்து கொள்ளலாமா. அவள் கேள்வியில் அதிக நாக்கலே இருந்தது.

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான் அருண்.

" நான் சொல்லவா .நான் இன்னும் கதிரை நினைத்து கொண்டு உங்களுடன் வாழ வந்துள்ளேனா என்று உங்களுக்கு சந்தேகம் .அதை நிவர்த்தி செய்ய என்னை நன்றாக கண்காணித்து அன்று ஏதோ வயது கோளாறில் தவறு செய்து விட்டால் இப்பொழுது தன்னுடன் உண்மையாக தான் வாழ்கிறாள் என்று என்னை மன்னித்து என்னுடன் வாழ ஆரம்பித்து உள்ளேர்கள் சரியா"

அன்று அவன் கிட்டத்தட்ட அவ்வாறு நினைத்தது உண்மை தான் .

ஆனால் இன்று அவளது காதலை முழுவதும் உணர்ந்த பிறகு இன்று தன்னை நினைத்தால் அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அவன் கையில் உருகி குழையும் மதுவை மட்டுமே பார்த்தவனுக்கு இன்று சாட்டையை சொற்களை சுழற்றும் மது மிகவும் புதிதாக தெரிந்தாள் .

இந்த கோவமும் அவள் தன் மீது கொண்ட அளவற்ற காதலின் வெளிப்பாடு தான் என்று உணர்ந்தாலும் அதை எப்படி மீட்டெடுப்பது என்று தான் தெரியவில்லை .

அவளை கலங்கிய இதயத்துடன் பார்த்த அருண் "அம்மு நடந்து முடிந்தது அனைத்தும் தவறு தான் டா. ஆனால் இந்த நொடி நான் உன் மீது என் உயிரையே வைத்திருக்கிறேன் டா. என்னை புரிந்துகொள் அம்மு ப்ளீஸ் டா "என்று கெஞ்சினான்.

அவனை பார்த்து விரக்தியாய் சிரித்த மது "நான் உங்களை எப்போதில் இருந்து விரும்புகிறேன் என்று தெரியுமா "என்று அவன் கண்ணுக்குள் ஊடுருவி கேட்டாள் .

அவள் கேள்வியில் குழம்பிய அருண் "நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து" என்று குழப்பத்துடனே கூறினான் .

அதை கேட்டு அவள் உதட்டில் ஒரு விரக்தி முறுவல் தோன்றியது .

"நான் உங்களை எனது ஐந்து வயதில் இருந்து விரும்புகிறேன் .எனது காதலை போய் சந்தேகித்து விட்டிர்களே மாமா"

கடைசி வரியை கூறும் போது உடைந்து அழுது விட்டால் மது.

முந்தைய நாள் மாலை முதல் அடக்கி வைத்திருந்த அழுகை உடைத்து கொண்டு வர ஆரம்பித்தது மதுவிற்கு.

அப்படியே தரையில் அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் .

அவள் கூறிய செய்தி அருணிற்க்கே புதிது. அதை பற்றி யோசிக்க நேரம் இல்லாமல் அவளை முதலில் சமாதானம் பண்ண எண்ணி அவள் அருகில் சென்றான் அருண் .

அருண் தன் அருகில் வருவதை உணர்ந்த மது "வேண்டாம் இங்கிருந்து போய்டுங்க .தயவு செய்து போய்டுங்க" என்று அழுகையினூடே கூறினாள்.

மதுவை மேலும் கஷ்ட படுத்த விரும்பாமல் அருண் எழுந்து தங்கள் அறைக்கு முன்னிருக்கும் சிறு வரவேற்பறைக்கு சென்று அமர்ந்தான் .

மனதில் வலியுடன் அமர்ந்திருந்த இருவரின் மனமும் பழைய நினைவுகளை தேடி தானாக சென்றது.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
98
Likes
221
#20
part 16

திருப்பூர் .மது பிறந்து வளர்ந்த ஊர் .

சங்கரி மற்றும் சிவனந்தனின் ஒரே செல்ல மகள் மது. அதையே போல் சீதாலட்சுமி மற்றும் மகாலிங்கத்தின் ஒரே மகன் அருண் .

சங்கரி மகாலிங்கத்தின் கூட பிறந்த தங்கை அவருக்கு எப்பொழுதுமே தங்கையின் மேல் தனி பிரியம் உண்டு. அவருக்கு மனைவியாக வந்த சீதாலட்சுமியும் அந்த பிரியத்தை காட்டியது அதிசயமே.

மகாலிங்கத்தின் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வந்தனர் .வருட வருடம் கோடை விடுமுறைக்கு திருப்பூர் வந்து விடுவார்கள்.

அப்போது மதுவிற்கு ஐந்து வயதுதான் இருக்கும். எப்பொழுதும் போல் அருணின் குடுபத்தினர் கோடை காலத்தை கழிக்க அங்கு சென்றிருந்தனர் .

அன்று கோவில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் திருவிழாவிற்கு சென்றனர்.

மது அருணின் கையை பிடித்து கொண்டு சென்றாள்.

அருண் பெரிய மனிதன் போல் அவளை பாதுகாப்பை அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தான் .

இதை பார்த்த பெரியவர்கள் சிரித்து கொன்டே பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

அருண் சங்கரியிடம் வந்து "அத்தை நானும் மதும் கொடைராட்டினம் சுற்றுகிறோம்" என்று கெஞ்சும் குரலில் கேட்டான் .

அதை கேட்ட சீதாலட்சுமி "பாப்பா பயந்துரா போற டா கண்ணா "என்று கவலை பட்டார் .

அதற்கு அருண் பெரிய மனிதன் போல் "நான் மதுவை பத்திரமாக பிடித்து கொள்வேன் மா. அவளை பயம் இல்லாமல் பார்த்து கொள்கிறேன் "என்றான்.

அதை கேட்டு சிரித்த சங்கரி "அவர்கள் செல்லட்டும் அண்ணி .நம்மை விட அருண் மதுவை நன்றாகவே பார்த்து கொள்வான் " என்று கூறி அனுப்பினார்.

மது பிறந்த உடன் அருணின் கைகளில் அவளை குடுத்த பொழுது அழகிய பஞ்சு பொதி போல் இருந்தவளை லாவகமாக கையில் ஏந்தி கொண்டான்.

அவன் குழந்தையை கையாண்ட விதத்தை கண்டு பெரியவர்களே அதிசயித்து தான் போனார்கள்.

அன்றில் இருந்து அருண் வரும்போதெல்லாம் அவன் தான் மதுவை பார்த்து கொள்வான். இயல்பாகவே அருணிற்கு மதுவின் மேல் ஒரு உள்ளார்ந்த அன்பு ஏற்பட்டு விட்டது .

அவர்கள் இருவரும் குடைராட்டினம் சுற்றி விட்டு இறங்கும் பொழுது அருண் வயதுள்ள ஒரு சிறுவன் மதுவை இடித்து கீழே தள்ளி விட்டுவிட்டேன் .

மதுவிற்கு கையில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது.

கீழே விழுந்து அழுத மதுவை பார்த்ததும் அருணிற்கு வந்ததே கோவம் அந்த சிறுவனை அடிக்க ஆரம்பித்து விட்டான் .

பிறகு பெரியவர்கள் வந்து தான் அவர்களை பிரிக்க வேண்டிய தாயிற்று. இருந்தும் அருண் அந்த சிறுவனை முறைத்து கொன்டே தான் சென்றான் .

இரவு வீட்டிற்கு வந்து காயத்தின் வலியால் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்த மதுவை சங்கரியலும் சீதாலட்சுமியாலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

அப்போது அங்கு வந்த அருண் "என் கிட்ட குடுங்க அத்தை நான் அம்முக்கு ஊட்டுகிறேன் "என்று தட்டை தன் கையில் வாங்கி கொண்டான்.

மதுவிடம் சென்று அமர்ந்துகொண்டு "அம்மு அந்த பயண மாமா அடிக்கும் போது நீ பாத்தியா"

"இல்லையே"

"அவனுக்கு இன்னும் பெரிதாக அடி பட்டு உள்ளது தெரியுமா"

" நிஜமாவா "மது

"ஆமா டா"

இப்படி பேசி கொன்டே மதுவிற்கு ஊட்டி முடித்து விட்டான் அருண் .

அப்படியே மதுவை தன் மடியில் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைத்து விட்டான் .

தன்னை கீழே தள்ளிய பையனை அடித்தபோது ஒரு ஹீரோவாகவும் தான் அடம்பிடிக்கும் போது தன்னை அரவணைத்து மடி தங்குவதில் ஒரு தாயாகவும் இருந்த அருண் மதுவின் மனதில் ஆழமாக பதிந்து போனான்.

அன்றில் இருந்து மதுவிற்கு எதுவென்றாலும் தன் மாமா தான் .
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.