என் உயிரில் கனவாய் நீ - En Uyiril Kanavai Nee By Aruna2014

Status
Not open for further replies.

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#21
part 17:

அதன் பிறகு வருட வருடம் அவர்கள் திருப்பூர் வரும் பொழுதெல்லாம் மதுவிற்கு அருணிற்கும் இடையில் உள்ள பாசம் பெருகி கொன்டே சென்றது.

அருண் கல்லூரிக்குள் அடி எடுத்துவைத்த வருடம் அவனது சூழ்நிலை நண்பர்கள் பட்டாளம் எல்லாமே மாறியது.

அவர்களுடன் நேரம் செலவு செய்த arunal இரண்டு வருடங்கள் திருப்பூர் பக்கம் வர முடியாமல் போனது .

இங்கு சிவனந்தனுக்கும் தொழில் சிறு சரிவு ஏற்பட்டதால் அவரும் அதை சீரமைப்பதில் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்ததால் இவர்களால் சென்னை செல்ல முடியவில்லை.

மது தான் தவித்து போய்விட்டாள் .அவள் மாட்டும் கொஞ்சம் பெரிய பெண்ணாக இருந்திருந்தால் அவளே தன் மாமனை காண சென்றிருப்பாள்.

இரண்டு வருடங்கள் கழித்து செமஸ்டர் விடுமுறையில் திருப்பூர் சென்றான் அருண்.

மது கடைசியாக அருணை பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள் .

அவன் கல்லூரி சென்று விட்டதால் மிகவும் ஸ்டைல் ஆக மாரி இருந்தான்.

நீல நிற ஜீன்ஸ் பேண்டும் ட்ஷிர்ட்ட்டும் அணிந்து அலையலையாக பரந்த கேசத்துடன் ஒரு அழகிய ஆண் மகனாக இருந்தான்.

அவனை பார்த்த மதுவிற்கு அவனிடமிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை.

பிங்க் நிற பாவாடையும் வெள்ளிய நிற சட்டையும் அணிந்து குழந்தையாய் நின்றிறுந்தக மதுவிடம் வந்த அருண் அவள் கண் முன் சுடக்கிட்டு" என்ன அம்மு அப்படி பாக்கற. மாமா எப்படி இருக்கிறேன் .நன்றாக இருக்கிறேனா" என்று தன்னை தானே ஒரு முறை சுற்றி காட்டினான் .

அவன் குரலில் நிகழ் உலகிற்கு வந்த மது "செம ஹண்ட்ஸம்ம்மா இருக்கீங்க மாமா "என்றாள் .

"தேங்க்ஸ் டா .வா வா சாப்பிட போகலாம் .அத்தை சமையல் வாசனை ஊரையே தூக்குகிறது" என்று கூறிவிட்டு முதலில் ஓடி விட்டான்.

மது ஸ்தமித்த நிலையில் இருந்தால் .

மதுவிற்கு அருணை பார்க்கும் பொழுது இத்தனை நாள் இருந்த உள்ளார்ந்த அன்பையும் தாண்டி வேறு ஏதோ புது உணர்வு தோன்றியது .

அதை சிறு பெண் அவளால் பிரித்துணர முடியவில்லை. அவளும் பேசாமல் அவன் பின்னே சாப்பிட சென்று விட்டாள் .

அடுத்த வந்த நாட்களில் அருணை பார்க்கும் போதேல்லாம் ஒரு வித பரவச உணர்வை உணர்ந்தாள் மது.

இடையில் ஒரு நாள் அருண் யாரிடமும் சொல்லாமல் சிவனந்தனின் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டான்.

அன்று மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்த மதுவை பூட்டிய கதவே வரவேற்றது.

என்னவென்று தெரியாமல் மது முளித்துக்கொண்டு நிற்கும் போது பக்கத்து வீடு பெண்மணி அங்கே வந்தார்.

" அம்மாடி மது உங்க வீட்ல எல்லாரும் ஆஸ்பத்திரி பொய் இருகாங்க மா. நீ வந்தால் உன் கிட்ட சொல்ல சொன்னாங்க" என்று மொட்டையாக கூறினாள்.

" யாருக்கு என்ன ஆச்சு ஆண்ட்டி" என்று பதட்டத்துடன் கேட்டால் மது.

" உங்க வீட்டுக்கு ஒரு தம்பி வந்து இருக்குல்ல மா..."

"யாரு அருண் மாமாவா"

" ஆமா மா .அந்த தம்பி தான் உங்க அப்பாவோட வண்டிய எடுத்துட்டு போய் எங்கயோ விழுந்துருச்சாம். அதான் எல்லாரும் ஆஸ்பத்திரி போய் இருகாங்க "என்றாள்.

இதை கேட்டு மதுவின் உயிர் ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது.

மருத்துவமனையின் பெயரை கேட்டு கொண்டு அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு விரைந்தாள் மது.

ஆட்டோ செல்லும் ஒவ்வொரு நிமிடமும் அத்தனை பதட்டமாக உணர்ந்தாள் மது .அருணிற்கு பெரிதாக ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்று அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டே வந்தாள்.

மருத்துவனைக்குள் சென்று அவனை பார்க்கும் வரை அவள் உயிர் அவள் கையிலேயே இல்லை.

மருத்துவமனையில் அருணிற்கு பெரிதாக ஒன்றும் அடி படவில்லை .அங்கங்கு சில சிராய்ப்புகள் மட்டுமே.

ஆனால் அதை பார்க்கவே மதுவிற்கு அத்தனை துயரமாக இருந்தது. வேகமாக அவன் படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்றவள் அங்கு தனது தாய் தந்தை நின்றிருப்பதை கூட பொருட்படுத்தாமல் "ஏன் மாமா இப்படி பண்ணினீங்க. அறிவு இருக்கா உங்களுக்கு. உங்களை யார் அப்பாவின் வண்டியை எடுத்து கொண்டு போக சொன்னது." என்று படபடவென்று பொரிய ஆரம்பித்துவிட்டாள் .

அவளை பார்த்து அன்பாக சிரித்த அருண் "அம்மு அம்மு ஒன்னும் இல்ல டா .இங்க பாரு மாமா நல்லா தான் இருக்கிறேன் .முதலில் இப்படி உக்காரு "என்று தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டான்.

இன்னும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருக்கும் மதுவை பார்த்து "அம்மு மாமா வண்டி எல்லாம் நல்லாவே ஓட்டுவேன் டா என்றான்"

அவள் அவனை முறைப்பதை கவனித்து "சாத்தியமா டா" என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டான் .

பிறகு தொடர்ந்து "எதிரில் பள்ளி செல்லும் சிறிய பையன் ஒருவன் சைக்கிள்யை ஓட்ட தெரியாமல் தடுமாறிக்கொண்டு வந்தான். அவனை இடித்து விட கூடாது என்று ஒரு பக்கமாக ஒதுங்க போக வண்டி நிலைதடுமாறி விழுந்துவிட்டது டா "என்று சொல்லி முடித்தான்.

அப்பொழுதுதான் மது கொஞ்சம் சமாதானம் அடைந்தாள்.

சங்கரி மதுவிடம் திரும்பி" மது நீ அப்பா கூட வீட்டுக்கு போ டா .அருணை இன்று ஒரு நாள் இரவு இங்கு இருந்துவிட்டு செல்ல சொல்லி இருக்கிறார்கள் .நான் இங்கு இருக்கிறேன்" என்றாள்.

" இல்லை மா நான் தான் மாமாவுடன் இருப்பேன் "என்று பிடிவாதமாக கூறினால் மது.

அவர்கள் மூவரும் எத்தனை எடுத்து சொல்லியும் தான் அருணை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டாள் .

வேறு வழியில்லாமல் சங்கரி மது இருவரும் அங்கே விட்டுவிட்டு வீடு திரும்பினார் சிவானந்தன்.

அன்றைய இரவு மருந்தின் வீரியத்தால் அருண் சீக்கிரம் உறங்கி விட்டான்.

அவன் உறங்கியது உணர்ந்த சங்கரியும் அங்கிருந்த இன்னொரு கட்டிலில் படுத்து உறங்கி விட்டார்.

உறங்காமல் படுத்துக்கொண்டிருந்த மது மெதுவாக எழுந்து வந்து அருணின் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அந்த இரவின் அரை இருட்டில் காற்றில் தலை முடி லேசாக அசைந்தாட நிலா வெளிச்சத்தில் குழந்தைபோல் உறங்கும் அருணை காண காண தெவிட்டவில்லை மதுவிற்கு .

சில நாட்களாக தன் மாமனை காணும் போது தோன்றும் வித்தியாசமான உணர்விற்கு அந்த நொடி அர்த்தம் உணர்ந்தாள் அந்த பதினாறு வயது பாவை.

அந்த அறையின் ஜன்னல் வழியாக வந்த காற்று அவள் காதுகளில் மெதுவாக எதற்கு பெயர் தான் "காதல்" என்று உறைத்துவிட்டு சென்றது.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#22
part 18:

மறுநாள் காலை அருணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.

அருண் ஒரு புறம் ஓய்வு எடுக்க மது ஒரு புறம் தனது காதலை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் .

அருண் தான் தனது வாழ்வு என்று தெரிந்து விட்டாலும் சிறு பெண் அவளுக்கு அருணிடம் அதை சொல்லும் தைரியம் இல்லை.

வெகுவாக யோசித்து பின்பு தன்னை போல் அவனுக்கும் நிச்சயம் தோன்றும் அவனே தன்னிடம் வந்து சொல்லட்டும் என்று முடிவு பண்ணி பேசாமல் இருந்துவிட்டால்.

இரண்டு நாட்களுக்கு பிறகு அருண் ஊருக்கு கிளம்பினான்.

வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் மதுவிடம் வந்து "அம்மு மாமா கிளம்பறேன் டா .நல்ல படிக்கணும் என்ன" என்றான்.

மதுவிற்கு உள்ளுக்குள் மிகவும் கலக்கமாக இருந்தது.

இருந்தும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் "சரி மாமா திரும்ப எப்ப வருவீங்க" என்று கேட்டாள்.

" முடிந்த பொழுது கட்டாயம் வருகிறேன் டா" என்று கூறிவிட்டு கிளம்பினான் .

மது மனம் நிறைய கலக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

அன்று சென்ற அருண் மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்தே அங்கு வந்தான்.

அதற்குள் மது அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து முதலில் கோவப்பட்டு பின் வருத்தப்பட்டு கடைசியில் அவன் எப்படியும் வருவான் அப்பொழுது பார்த்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டால் .

அருண் அவர்கள் வீட்டிற்கு வந்த பொழுது மது கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள் .

"மது கீழே வா டா யார் வந்து இருக்கா பாரு "என்று சங்கரின் குரல் கேட்டது .

தனது புத்தகங்களை எடுத்து கொண்டு வெளியே வந்த மது அங்கு அருணை கண்டு ஸ்தமித்து நின்று விட்டாள்


கண் சிமிட்டாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். எங்கே சிமிட்டினால் மறைந்து விடுவானோ என்று பயம்.

அருணின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது


இத்தனை நாளாய் குழந்தையாய் பார்த்த அத்தை மகளை பருவப்பெண்ணாய் முதல் முதலாக பார்க்கிறான்.

வெள்ளை நிற சுடிதாரில் அதே நிறத்தில் காதணிகளும் கழுத்தணியும் அணிந்து தலைக்கு குளித்திருந்த முடியியை விரித்து விட்டு வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்தவளை கண்டு முதல் முறை இமைக்க மறந்தான் அருண் .

முதலில் சுதாரித்த மது "மாமா எப்படி இருக்கேங்க .அத்தை மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க" என்று விசாரித்தாள் .

அவள் குரலில் நினைவுலகிற்கு மீண்ட அருண் "ஆ ...நல்ல இருகாங்க டா "என்று ஒருவாறு பதில் கூறினான்.

" நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க மாமா நான் மதியம் வந்து விடுவேன்" மது

" உனக்கு விடுமுறை இல்லையா அம்மு "என்று குரலில் சிறு ஏமாற்றத்துடன் கேட்டான் அருண்.

அதில் மனம் நெகிழ்ந்த மது "இன்றைக்கு ஒரு நாள் தான் மாமா .நாளையில் இருந்து பத்து நாட்கள் தேர்வுக்கு படிக்கச் விடுமுறை தான்" என்று கூறினாள்.

அதில் மகிழ்ந்த அருண்" சரி டா .நான் காத்துக்கொண்டிருக்கிறேன் சீக்கிரம் வந்து விடு "என்று கூறினான் .

மெலிதாக சிரித்து தலை அசைத்த மது "சரி மாமா" என்று விட்டு சென்று விட்டாள்.

மது கிளம்பிய பிறகு சங்கரியிடம் "நான் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொள்கிறேன் அத்தை "என்று கூறிவிட்டு படுக்கை அறைக்கு வந்தவன் மதுவிடம் தனக்கு தோன்றிய உணர்வை பற்றி ஆராய தொடங்கினான் .

அதற்கு அவனுக்கு கிடைத்த விடை 'காதல் '.

அவனுக்கே அது அதிசயமாக தான் இருந்தது .சிறு வயதில் இருந்து மதுவின் மீது கொண்ட தனி அன்பு மற்றும் பெரியவர்கள் இவ்ரகள் இருவருக்கும் தான் திருமணம் என்று எப்பொழுதும் பேசி கொள்வது எல்லாம் சேர்ந்து தான் அவளை பார்த்த நொடி மனதிற்குள் காதல் நுழைந்து விட்டது என்றென்னினான்.

அந்த நொடி தனது வாழ்க்கை துணை மது மட்டுமே என்று முடிவு செய்து விட்டான்.

காதலை உணர்ந்ததும் மதுவை போல் தாமதிக்காமல் தனது காதலை தண்ணவளிடம் கூறி விட முடிவு செய்தான்.

அன்று மதியம் தனது அத்தையிடம் கூறிவிட்டு மதுவை அழைக்க அவனே சென்றான் .

கல்லூரியில் எப்பொழுதும் போல் தனது தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டே வந்த மது கல்லாரியின் வாயிலில் அருணை கண்டதும் ஒன்றும் புரியாமல் நின்று விட்டாள் .

ஒரு நொடி அவளுக்கு தான் ஏதோ கனவு தான் கண்டு கொண்டிருக்கிறோம் என்று தோன்றி விட்டது .

அவள் அருகில் இருந்த தோழி "ஏய் யாரு டீ அது உன்னையே பார்த்து கொண்டு வருகிறார் "என்று அவளை இடித்தாள் .

அதில் தன்னுணர்வு பெற்ற மது உண்மையிலேயே அருண் வந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து "என் மாமா டீ "என்று கூறினாள்.

" உன் மாமா செம ஹண்ட்ஸம் ஆ இருக்காரு டீ" என்று மதுவின் காதில் கிசுகிசித்தனர் .

அதில் மது அவர்களை முறைக்க தொடங்கிய போது அருண் அங்கே வந்து விட்டான்.
" அம்மு கிளம்பலாம் "என்று கேட்டான் .

"சரி மாமா "என்ற மது தோழிகளிடம் விடைபெற்று கிளம்பினாள் .

வண்டியில் அவன் பின்னல் ஏறி அமர்ந்த மது ஒரு நொடி அவனை பிடிப்பதா வேண்டாமா என்று யோசித்தால். பின்பு பிடிக்கமால் அமர்ந்தாள் தான் வித்யாசமாக தெரியும் என்றெண்ணி மெதுவாக அவன் தோள்களை பிடித்து கொண்டாள் .

அதில் வானில் சிறகடிக்க சென்ற மனதை அடக்கி வண்டியை கிளப்பினான் அருண் .

வீட்டிற்கு இரு தெருக்கள் முன்னிருந்த மாந்தோப்புக்கு முன் வண்டியை நிறுத்தினான் அருண் .

வண்டியில் இருந்து இறங்கிய மது "இங்க ஏன் மாமா நிறுத்திடீங்க என்றாள்"

" ஒரு ஐந்து நிமிடம் டா. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் "என்று கூறினான்.

அது மதுவின் தந்தையின் நண்பரின் தோப்பு தான் இவர்கள் சிறு வயது முதல் அங்கு நிறைய விளையாண்டு இருக்கிறார்கள் .அதனால் எந்த பொழுதில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று அருணிற்கு நன்றாக தெரியும். அதனாலேயே தைரியமாக இங்கு அழைத்து வந்தான்.

தோப்பின் உள்ளெ சென்ற மது கீழாக காய்ந்திருந்த மங்காவை பறித்து கடிக்க ஆரம்பித்தாள் .

பின்னாடியே வந்த அருண் அவள் கதருகில் சென்று "அம்மு "என்று மென்மையாக அழைத்தான் .

அவன் குரலில் தெரிந்த அதீத மென்மையில் அவனை திரும்பி பார்த்த மது அவன் கண்களில் தெரிந்த காதலில் இது நிஜம் தானா இல்லை தனக்கு தான் அப்படி தோன்றுகிறதா என்ற குழப்பத்தில் அவனையே வாய்த்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருங்கள்.

அவள் கண்களுக்குள் உற்று நோக்கிய அருண்" அம்மு என்ன உனக்கு பிடிக்கு மா டா" என்று மெதுவாக கேட்டான்.

" இது என்ன மாமா கேள்வி எனக்கு எந்த உலகத்திலேயே உங்கள தான் மாமா மிகவும் பிடிக்கும் "உறுதியாக ஒலித்தது மதுவின் குரல்.

அதில் சந்தோஷமடைந்தான் அருண்." அப்ப மாமா கூட கடைசி வரை இருப்பாயா டா என் மனைவியாக "என்று டக்கென்று கேட்டு விட்டான்.

அதில் முதலில் அதிர்ச்சி அடைந்த மது தனது கையில் இருந்த மாங்காயை தவற விட்டாள் .பின்பு தனது காதில் செரியாக தான் விழுந்ததா என்று திருதிருத்தாள் .

அவள் யோசித்த ஒரு நொடியில் பயந்து விட்ட அருண் "எnna டா மாமாவை பிடிக்கலையா" என்று கேட்டான் .

அவனது குரல் சிறிதாக தழுதழுத்து ஒலித்தது.

அதில் சுதாரித்த மதுவிற்கு முதலில் தோன்றியது வெட்கமே.

வெட்கத்தில் தலை குனிந்த மது மெதுவாக " இந்த பிறவியில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்களுடன் தான் மாமா" என்று கூறினாள் .

அவள் பதிலில் அருண் மிகவும் சந்தோஷமடைந்தான். அவனுக்கு சிறுவன் போல் கத்த வேண்டும் போல் இருந்தது.

அத்தனை சந்தோசமாக இருந்தான் .

மதுவிற்கு தனது இத்தனை வருட அன்பிற்கும் காதலிற்கும் ஒரு முடிவு கிடைத்த சந்தோசம்.

அதை அருணிடம் கூறலாம் என்றால் அவளுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.

அவள் பேசாமல் ஓடி விட்டாள்.

அவள் ஓடுவதை உணர்ந்த அருண் "ஏய் அம்மு இருடா நானும் வரேன்" என்று சிரித்துக்கொண்டே பின்னால் சென்றான் .

இருவரும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#23
Hi friends ,

How are u all... story epdi pogudhu , writing ok vaa , unga suggestions ,positive and negative comments ellam solunga friends plzz.. edhuvaraikum like matrum comment panina anaivarukum nandri.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#24
part 19:

மறுநாள் காலை எழுந்து மதுவிற்கு அன்றைய விடியல் மிகவும் அழகாக இருப்பதாக தோன்றியது.

இத்தனை வருடமாக என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்த தன் காதல் அழகாக நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் மது.

சமையல் அறையில் இருந்து அருணின் குரல் கேட்டது மதுவிற்கு .காலை நேரத்தில் அங்கு என்ன செய்கிறார் மாமா என்று யோசித்து கொன்டே காலை கடன்களை முடித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று எட்டி பார்த்தால் மது .

அங்கு காபி தான் தான் போடுவேன் என்று ஒரு கலவரமே நடத்தி கொண்டிருந்தான் அருண் .

சங்கரி அவனிடம் அருண் "ப்ளீஸ் டா .நான் போடறேன் டா. உனக்கு சுத்தமாக இதேல்லாம் வராது வம்பு பண்ணாம போ டா" என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.

அப்பொழுது தான் அங்கு வந்த மதுவை கவனித்த சங்கரி "மது இவனை கொஞ்சம் கூடிய கொண்டு போ மா என்றாள்"

மது அருணை பார்க்க அவன் "அம்மு நான் காபி போட்டு குடுத்தா நீ கூட குடிக்க மாட்டாயா" என்று சோகமாக கேட்டான் .

அவளால் எப்படி மாட்டேன் என்று சொல்ல முடியும் .

"நீங்க போட்டு கொடுங்க மாமா நான் குடிக்கிறேன் "என்று கூறிவிட்டாள்.

" என்னமோ பண்ணுங்க. ஆனா உங்களுக்கு ஐந்து நிமிடம் தான் டைம் .அதுக்குள்ள சமையல் அறையை விட்டு வெளியே வந்து விடணும் "என்று கூறி தலையில் அடித்து கொண்டே சென்று விட்டால் சங்கரி .

அருண் ஆர்வமாக " காபி போட தொடங்கினான் .அவன் அழகை அங்கு இருந்த மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் மது "

"அம்மு உனக்கு ஒன்னு தெரியுமா .உனக்கு காபி போடணும்னு தான் நான் இங்கே வந்தேன் .அதற்குள் அத்தை வந்து விட்டார்களா அதான் எல்லாருக்கும் போடறேன் என்று கூறினேன். அத்தை பயந்து விட்டார்கள்" என்று கூறி கண் சிமிட்டி சிரித்தான் .

அதில் அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள் .

பேசி கொண்டே காபி போட்டு முடித்த அருண் அதை அவளிடம் கொடுத்து" குடி அம்மு எப்படி இருக்குனு சொல்லு "என்றான் .

அவன் தனக்காக மெனக்கெடுவதை ஆசையாக பார்த்து கொண்டிருந்த மது அவன் கொடுத்த காபியை வாங்கி அவனை பார்த்து கொண்டே ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் ஒவ்வொரு வாயாக ரசித்து குடிப்பதை பார்த்த அருண் "காபி நல்லா இருக்கா அம்மு "என்று ஆவலுடன் கேட்டான்.

" ரொம்ப நல்லா இருக்கு மாமா "என்று அவனை பார்த்து கொண்டே கூறினால் மது .

அவள் கையில் இருந்து தீடிரென்று கப்பை பறித்தவன் அதை தான் குடித்து பார்த்தான் மிகவும் சுமாராக தான் இருந்தது .

அவன் கப்பை பறித்ததில் பொம்மையை இளந்த குழந்தை போல் திருத்திருவென முழித்து கொண்டிருந்த மதுவிடம் "இதை போய் எப்படி டீ ரசித்து குடிகர .நல்லாவே இல்லயே" என்றான் .

அவன் கையில் இருந்து வெடுக்கென்று காபியை பிடுங்கிய மது "அதெல்லாம் ஒன்னும் இல்ல .என் மாமா எனக்கு ஆசையா போட்டு குடுத்தது சூப்பரா இருக்கு" கூறிக்கொண்டே ஒரு சொட்டு விடாமல் கடைசி வரை குடித்து முடித்தாள் .

அவளது காதல் மனதை அறிந்த அருணிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#25
part 20:

ஒரு வாரம் ஓடி விட்டது.

அவர்களது காதலும் அழகாக வளர்ந்து கொண்டிருந்தது.

மாந்தோப்பில் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அருண்.

இந்த ஒரு வாரத்தில் அந்த மாந்தோப்பு அவர்களது காதலுக்கு சாட்சி இடம் ஆகி இருந்தது .

தூரத்தில் கொலுசின் ஒளி கேட்டது. அருணின் இதழ்களில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது .

மது கோவிலுக்கு போகிறேன் என்று கூறிவிட்டு அங்கு வந்து இருந்தால். மது நோக்கி மெலிதான புன்னகையுடன் கைய்களை விரித்து கட்டினான் அருண் .

அவனது கைகளுக்குள் வாகாய் ஓடி வந்து ஒண்டி கொண்டால் மது .


சிறிது அவன் இதயத்தின் சுகத்தை அனுபவித்த மது மெதுவாக நிமிர்ந்து அருணை பார்த்து" மாமா சீக்கிரமா நம்ம காதல் விஷயத்தை வீட்டில் சொல்லி விடலாம் மாமா" என்றாள் .

"ஏன் டா" அருண் .

"வீட்ல பொய் சொல்ல கஷ்டமா இருக்கு மாமா .நாம வீட்டில் மத்த வீடுகள் போல் இல்லையே மாமா நாம் சம்மதம் சொன்னாள் உடனடியாக திருமணமே செய்து வைத்து விடுவார்கள். எதற்கு இப்படி திருட்டு தனமாக சந்திக்க வேண்டும்" என்றாள் .

அவள் கூறியதை கேட்டு மெலிதாக சிரித்த அருண் "இப்படி திருட்டுத்தனமாக சந்திப்பதே தனி சுகம் தான் டீ. எல்லாருக்கும் தெரிந்து சந்திப்பதில் என்ன த்ரில் இருக்கு. இது தான் டீ செமயா இருக்கு "என்று கூறி கண்சிமிட்டினான் .

அவன் நெஞ்சில் ஓங்கி குத்தி சிரித்தாள் மது .

"ஸ்ஸ் ஆ வலிக்குது டீ "என்று கத்தினான் .

அன்று மாலை அவர்கள் வீடு திரும்பினார் .அப்பொழுது ஒரு இளம் வயது பையன் அங்கு அமர்ந்திருந்தான் .

அருண் அவனை யார் என்று யோசனையாக பார்க்க மது "கதிர் வா வா "என்று கூறி கொண்டே துள்ளி கொண்டு ஓடினாள் .

அதை பார்த்து புருவம் சுருக்கிய அருண் அவள் பின்னாலே சென்றான் .

"என்ன டா இந்த பக்கம்" என்று கதிரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மது


" மது உன் நோட்ஸ் கொஞ்சம் குடேன் .படித்து விட்டு கொடுத்துவிடுகிறேன்" என்றான்

மதுவும் உள்ளெ சென்று தனது நோட்டை எடுத்து கொண்டு வந்து குடுத்தாள்.

கதிர் சென்ற பிறகு அருண் மதுவிடம் வந்து "யார் அம்மு அது "என்று கேட்டான்.

" அவன் கதிர் மாமா.
சிறு வயதில் இருந்தே என் கூட தான் படிக்கிறான். அப்பா தான் அவன் படிப்பிற்கு எல்லா உதவியும் செய்கிறார் .நல்ல பையன் மாமா" என்றால்.

அவள் பதிலில் திருப்தி அடைந்த அருண்" சரி டா வா சாப்பிட போகலாம்" என்று கூறி சென்றான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் மீண்டும் மாந்தோப்பிற்கு சென்றனர்
அந்தோ பரிதாபம் அன்று அங்கு குழந்தைகள் விளையாண்டு கொண்டிருந்தனர் .

அருணின் முகம் சென்ற போக்கை பார்த்து மது கலகலவென சிரித்தாள்.

அவளை முறைத்த அருண் "என்ன பார்த்த உனக்கு சிரிப்பா இருக்கா டீ. வா பேசாம வீட்டுக்கே போகலாம்" என்று கிளம்ப திரும்பினான்.

அதற்குள் அங்கு வந்த ஒரு வாண்டு "மது அக்கா எங்க கூட விளையாட வாங்க அக்கா" என்று மதுவை பிடித்து இழுத்தது.

மது அருணை திரும்பி கெஞ்சுதலாக பார்த்தாள் வேறு வழி இல்லாமல் அவனும் அவர்களுடன் விளையாட சென்றான் .

முதலில் கடுப்புடன் விளையாட ஆரம்பித்தவன் பின்பு அந்த சிறுவர்களின் சந்தோஷத்தில் தானும் சேர்ந்து அவர்களுக்கு இணையாய் கூச்சலிட்டு கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டான்.

அவர்கள் கண்ணாமூச்சி விளையாண்டு கொண்டிருந்தனர்.

இது மது கண்ணை கட்ட வேண்டிய முறை அவள் கண்ணை விட்டு விட்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடி ஒளிந்து கொண்டனர் .

அருண் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

அவள் அவனை நெருங்கி வர வர ஒவ்வொரு மரமாக மாறிக்கொண்டிருந்தான்.

ஒரு வழியாக மது அவனை விட்டு வேறு பக்கம் தேட சென்று விட்டாள் .

அவன் தான் மறைந்திருந்த மரத்திற்கு பின்னால் இருந்து மெதுவாக எட்டி பார்த்தான்.

மது கைகளை ஆட்டி ஆட்டி தேடி கொண்டிருந்த அழகை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் அருண்.

அப்பொழுதுதான் கவனித்தான் மது அனைவரையும் தேடி கொண்டே அந்த தோப்பின் கடைசில் இருந்த கிணற்றை நோக்கி சென்று இருந்தால்.

சரியாக இன்னும் இரண்டு அடி பின்னால் வைத்தால் கிணற்றுக்குள் விழுந்து விடுவாள்.

அதை கவனித்து மது பார்த்து என்று கத்திகொண்டே அருண் ஓடி வருவதற்கும் மது கிணற்றுக்குள் விழுவதற்கு சரியாக இருந்தது.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#26
Frienda plz konjam comments podunga pa. Apa dhan nan epdi eludharenu enaku therium. Edhavadhu negatives irundhalum solunga plz.
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#27
part 21:

அருணிற்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை.

" அம்மு ...."என்ற அவனது அலறல் அந்த மாந்தோப்பு முழுவதும் எதிரொலித்தது.

அவனது சத்தத்தில் குழந்தைகளும் அங்கு வந்து சேர்ந்தனர். "என்ன ஆச்சு அங்கிள் "என்று ஒரு குழந்தை அருணிடம் கேட்டது .

"ம.. ம ..மது உள்ள விழுந்துட்டா டா "என்று திக்கி திக்கி ஒரு வாறு கூறினான்.

அவன் கூறியதை கேட்டு பதற்றமடைந்த அந்த சிறுவன் "இருங்க அங்கிள் நான் poi ஆளுங்களை கூட்டி கொண்டு வருகிறேன் "என்று ஓடினான்.

அவன் பின்னால் மத்த சிறுவர்களும் ஓடினர் .

அருண் கிணற்றுக்குள் பதற்றத்துடன் எட்டி பார்த்தான்.

அவன் கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை .

தான் சிறு வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இருந்ததை நினைத்து இப்பொழுது மிகவும் வருந்தினான் .சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று அலைபாய்ந்தது அவனது கண்கள் .யாரையும் காணாமல் சோர்வுடன் அந்த கிண்ணற்றடியில் அமர்ந்தவனுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

சிறுது நேரம் அழுதவன் இன்னும் யாரையும் காணவில்லை இனி தன் அம்முவை காப்பாற்றுவது கஷ்டம் தான் பேசாமல் தானும் குதித்துவிட வேண்டியது தான் என்று எண்ணி எழுந்தான்.

யாராவது காப்பாற்றினால் இருவரையும் காப்பாற்றட்டும் இல்லையெனில் அவளுடனேயே சென்று விட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக அவன் மனதில் தோன்றியது .

அவன் எழுந்து நின்ற நொடி கிணற்றுக்குள் இருந்து "மாமா" என்ற குரல் கேட்டது.

அருண் பதற்றமாக கிணற்றுக்குள் எட்டி பார்த்தான் மதுதான் கிணற்றை கடைசி படியில் நின்று கைகளை நீட்டி கொண்டிருந்தாள் "மாமா கை கொடுங்க மாமா" என்றாள்.

அவன் அவசரமாக தன் கைகளை அவள் புறம் நீட்டினான் .

மது அருணின் கைகளை பிடித்து கொண்டு லாவகமாக மேலே ஏறி வந்தாள் .

அதே நேரம் சிறுவர்களும் அங்கு சில பெரிய மனிதர்களுடன் வந்து சேர்ந்தனர் .

மதுவை பார்த்திவிட்ட அந்த சிறுவன் அவளிடம் ஓடி வந்து "அக்கா நீங்க வந்துடீங்களா நாங்க பயந்தே போய்ட்டோம்" என்றது .

அதற்குள் மதுவை காப்பாற்ற வந்தவர்கள் அவளை பார்த்துவிட்டு "அட நம்ம மது பாப்பா .பாப்பாக்கு நீச்சல் நல்ல தெரியுமே .உனக்கு ஒன்னும் இல்லைல பாப்பா" என்று கேட்டனர் .

"ஒன்றும் இல்லை அண்ணா நான் நன்றாக தான் இருக்கிறேன் "மது

"சரி மா பார்த்து ஜாக்கரதையாக இரு" என்று கூறிவிட்டு சென்றனர் .

'அக்கா நாங்களும் கிளம்பறோம் அக்கா "என்று கூறிவிட்டு சிறுவர்களும் சென்று விட்டனர்.

பிறகே மது அருணை திரும்பி பார்த்தால் .அவனோ தன் கண்களையே நம்ப முடியாது பார்த்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன் இருந்த பதட்டம் அவனுக்கு இன்னும் முழுமையாக குறையவில்லை.

" மாமா" என்று அழைத்தாள் மது .

"ம்ம்.. அம்மு என் கூட வா டா" என்று கூறி அவளது கையை பிடித்து கொண்டு தங்கள் மரத்திற்கு அடியில் கூட்டி சென்றான்.

ஒரு நிமிடம் அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த அருண் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான் அவனது இருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டே போனது அவனது பதட்டம் உணர்ந்து மதுவும் அவனுடன் ஒன்றி நின்றாள் .

சிறிது நேரம் பொறுத்து பார்த்த மது அருண் சமாதானம் ஆகும் வலி தெரியாததால் "மாமா "என்று மெதுவாக அழைத்தாள்.

அவனிடம் இருந்து "ம்...ம்" என்ற பதில் மட்டுமே வந்தது.

அவனது நடுக்கம் குறையவில்லை என்பதை உணர்ந்த மது மெதுவாக அவனது தலையில் தடவி குடுக்க ஆரம்பித்தாள்.

அவளது ஆறுதல் செயலில் சிறிது சிறிதாக நிதானத்திற்கு வந்தவன் மெதுவாக அவளை நிமிர்ந்து பார்த்தான் "கொஞ்சம் ஜாகர்தயா இருக்க கூடாத அம்மு .எனக்கு ஒரு நிமிடம் உயிரே போய் விட்டது" என்று நடுங்கிய குரலில் கூறினான் .

மது அவனது முகத்தை மெல்ல கையில் ஏந்தி "மாமா என்னை நன்றாக பாருங்க எனக்கு ஒன்னும் இல்ல .நீங்க நடுவில் இரண்டு வருடம் வரவில்லை இல்லையா அப்பொழுது நான் நீச்சல் நன்றாகவே கற்று கொண்டேன் மாமா" என்று மெதுவாக அவனுக்கு புரியும் படி கூறினால் .

அவளது பதிலில் சிறிது சமாதானம் அடைந்த அருண் "அது எனக்கு தெரியாதே அம்மு .அதான் ரொம்ப பயந்துட்டேன் "என்று சிறு குழந்தை போல் கூறினான்.

அதில் அவனது காதல் கொண்ட மனமே மதுவிற்கு தெரிந்தது .

சிறிது நேரம் நேரம் அவளை தன் தோளில் சாயவைத்து கொண்டு அமைதியாக நின்றவன் பின்பு" கிளம்பலாம் டா" என்று கேட்டான்.

சம்மதமாக தலையாட்டிய மது அவன் கைகளில் தன் கைகளை கோர்த்து கொண்டாள்.

அருண் அவள் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு அவளை அழைத்து சென்றான்
 

Aruna2014

Newbie
Penman of Penmai
Blogger
Joined
May 18, 2018
Messages
94
Likes
220
#29
part 22:

மறுநாளில் இருந்து மதுவிற்கு தேர்வுகள் தொடங்கியது.

அன்று காலை எழுந்த மது கல்லூரி செல்வதற்கு வேகமாக தயார் ஆகி கொண்டிருந்தாள் காலையில் படிக்கச் அமர்ந்த மதுவிற்கு படித்து விட்டு குளித்து கிளம்ப சிறிது தாமதம் ஆகி இருந்தது.

அதனால் தான் வேகமாக கிளம்பி கொண்டிருந்தாள். அன்றைய தேர்வின் புத்தகத்தையும் பேனாவையும் கையில் அள்ளி கொண்டு அவசரமாக வரவேற்பரைக்கு வந்தாள் .

"நான் கிளம்பறேன் மா. வரேன் மாமா "என்று அன்னையிடமும் அருணிடமும் விடை பெற்று கிளம்ப எத்தனித்தாள் .

"ஏய் கொஞ்சமாவது சாப்டுட்டு போடி "என்று கத்தி கொண்டே வந்தார் சங்கரி .

"இல்லா மா. இப்ப கிளம்பினாதான் சீக்கிரமா போய் பஸ்ஸ பிடிக்க முடியும்" என்றல் மது.

" நீ சாப்பிடு மது .நான் உன்னை கொண்டு போய் பேருந்து நிறுத்தத்தில் விடுகிறேன் "என்றான் அருண்.

அதை கேட்டு சங்கரியும் "ஆமாம் மா வா ரெண்டு இட்லியாவது சாப்டுட்டு கிளம்பு" என்று மதுவை அமர வைத்தார் .

மதுவும் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அருணுடன் கிளம்பினாள். அவளை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்ட அருண் "பதட்டப்படாம நல்ல பண்ணு டா அம்மு. எல்லாம் உனக்கு தெரிந்தது தான் வரும் "என்று மென்மையாக கூறிவிட்டு கிளம்பினான் .

மதுவும் அழகாக சிரித்து தலையசைத்து அவனுக்கி விடை கொடுத்தாள் .

அன்று மதியமும் அவனே வந்து மதுவை அழைத்து சென்றான் .

அன்றில் இருந்து அருணே மதுவை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு மீண்டும் அழைத்து வருவதை வாடிக்கையாக்கி கொண்டான்.

மதுவிற்கு ஒவ்வொரு பரீட்சைக்கும் இடையில் இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது அவள் அதனை நன்கு படிப்பதற்கே செலவு செய்தாள் அருணும் அவளை தொந்தரவு செய்யாமல் படிப்பில் அவளுக்கு தேவையான உதவிகளை மட்டும் செய்து கொண்டிருந்தான் .

அடுத்த முறை தேர்வு எழுதிவிட்டு வந்த மதுவிடம் "அம்மு அடுத்த பரிட்சையில் இருந்து ஒரு கால்மணி நேரம் முன்பே தேர்வை முடித்துவிட்டு இதற்க்கு முந்தைய பேருந்தில் வருகிறாயா டா ப்ளீஸ்" என்று பாவமாக கேட்டான்.

மதுவிற்குமே ஒரேடியாக அருணிடம் பேச முடியாமல் இருப்பது வருத்தமாக தான் இருந்தது

"கண்டிப்பாக முயற்சி பண்ணுகிறேன் மாமா" என்றாள்.

அவள் பதிலில் மகிழ்ச்சி அடைந்த அருண் சந்தோசமாக அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

சொன்னது போலவே அடுத்த பரீட்சையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்துவிட்டால் மது .

அருண் அவளை நேராக அவர்கள் ஆஸ்தான இடமான மாந்தோப்பிற்கு அழைத்து சென்றான் .

அவளை தங்களது மரத்திற்கு அடியில் அமர சொன்னவன் அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்.

" அம்மு உன் கூட பேச முடியுமா ரொம்ப கஷ்டமா இருந்தது டா .அதான் சீக்கிரம் வர சொன்னேன் இதனால் பரிட்சையில் ஒன்றும் பிரச்னை இல்லையே "எங்கே தன் காதல் அவள் படிப்பை பாதித்து விடுமோ என்ற பரிதவிப்பில் கேட்டான்.

" அதெலாம் ஒன்னும் இல்லை மாமா பரீட்சை எல்லாம் நன்றாகவே எழுதி இருக்கிறேன் நீங்க அதை பத்தி ஒன்றும் கவலை படாதீங்க" என்று மென்மையாக அவன் தலையை கோதி விட்டு கொண்டே கூறினாள் .

"அப்டினா சரி டா "என்று கூறி வாகாக அவள் மடியில் சாய்ந்து கொண்டான் .

அவனை பார்த்து மென்மையாக சிரித்து கொண்டிருந்த மது" மாமா நான் உன் கிட்ட ஒன்னு கேக்கணும் மாமா" என்றாள் தீடிரென்று .

"என்ன டா"

" நீ ஏன் மாமா என்னை மதுனே கூப்பிடமாட்டேங்கிற" என்றாள்

" எனக்கு அம்மு தான் டா பிடிச்சிருக்கு .நீ பிறந்த உடன் உன்னை முதல் முதலில் கைகளில் ஏந்திய அந்த நொடி என் மனதில் என் அம்மு என்று தான் டா தோன்றியது. அதை மாற்ற முடியவில்லை டா" என்றான் கூறினான்.

அவனது பதிலில் நெகிழ்ந்த மது அவனது நெற்றியை நோக்கி குனிந்து மென்மையாக முத்தமிட்டு நிமிர்ந்தாள்.

அடுத்த பரீட்சை முடிஞ்சு வந்த மதுவை சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் அருண். வரும் போதே வீட்டில் கூறிவிட்டு தான் வந்துஇருந்தான்.

சங்கரிக்கு ஏற்கனவே அவர்கள் பழகுவதை பார்த்து இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனரோ என்று தோன்ற ஆரம்பித்து இருந்தது.

அப்படி அவர்கள் விரும்பினால் மிகவும் சந்தோசம் என்றே நினைத்தார் சங்கரி .மது பிறந்த போதே இருவருக்கும் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பெரியவர்களுக்கு தோன்றி இருந்தது.

இருந்தாலும் சிரியவர்களை இதற்கு வற்புறுத்த கூடாது என்றெண்ணி அந்த பேச்சை அவர்களாக எடுக்காமல் இருந்தார்கள் .இன்று இவர்கள் இருவரும் விரும்பினால் அதை விட அந்த வீட்டு பெரியவர்களுக்கு வேறு சந்தோசம் இருக்க முடியாது.

************************

திருப்பூரில் புதிதாக திறந்திருந்த உணவகத்திற்கு மதுவை அழைத்து சென்றான் அருண் .

அங்கு குளிர் சாதன அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர் இருவரும் .

"அம்மு நீ என்ன டா சாப்பட்ற. சாம்பார் சாதம் ஆ பிரியாணி ஆ" என்றான்.

" எனக்கு நான், பன்னீர் பட்டர் மசாலா வேணும் மாமா" என்று கூறிய மதுவை ஆச்சர்யமாக பார்த்தான் அருண் .

அருணுக்கு தெரிந்தவரை அவளுக்கு மிகவும் பிடித்த உணவு என்றல் மேற்கூறிய இரண்டும் தான் .

"எப்ப இருந்து இதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்ச" என்று ஆச்சர்யம் குறையாமல் கேட்டான் அருண்.

" கல்லூரி தோழிகளுடன் வந்த பொழுது வாங்கி கொடுத்தார்கள் மாமா. அதில் இருந்து எனக்கு இது மிகவும் பிடித்து விட்டது "என்றாள் மது.

அவள் கூறியதை கேட்டு சிரித்து கொண்ட அருண்" சரி டா .அதே ஆர்டர் பண்றேன்" என்று கூறி அவள் விரும்பியதையே ஆர்டர் குடுத்தான் .

இருவரும் சந்தோஷமும் சிரிப்புமாக சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர். சிரித்த முகத்துடன் முகம் கொள்ளா சந்தோசத்துடன் வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்து சங்கரி் மனது நிறைந்து இருந்தது. பாவம் அதுதான் அவர்கள் கடைசியாக சேர்ந்து சிரிக்கும் நாள் என்று தெரியாமல் போனது அவருக்கு.

மதுவின் கடைசி தேர்வன்று காலையில் அருணிற்கு சிறிது உடம்பு முடியவில்லை .

மது அருணிடம் "நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க மாமா. நான் போய் கொள்கிறேன். மதியமும் நானே வந்துவிடுகிறேன் .நீங்க வர வேண்டாம் "என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள் .

அப்பொழுது இருந்த அலுப்பில் அருணும் seri என்றுவிட்டான்.
சிறிது நேரம் தூங்கி எழுந்தவனுக்கு தலை வலி சரி ஆகி விட்டது .

வீட்டில் இருக்க மனசில்லாமல் சங்கரியிடம் "அத்தை நான் போய் மதுவை கூட்டி கொண்டு வருகிறேனே" என்றான்

"இப்பொழுதே நேரம் ஆகி விட்டதே டா .அவள் பாதி தூரம் வந்து இருப்பாளே"

" பரவாயில்லை அத்தை நான் போய் அழைத்தது கொண்டு வருகிறேன். ப்ளீஸ்..." என்றான் .

அவன் கேட்ட தினுசில் சங்கரிக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து கொண்டே "சரி டா. உன் இஷ்டம்" என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

வண்டியை எடுத்து கொண்டு சென்ற அருணிற்கு தூரத்தில் மாந்தோப்பு அருகில் மது வருவது தெரிந்தது.

அவளை நோக்கி ஆவலாக செல்ல தொடங்கியவனை அவனது கைபேசி அழைத்தது. எடுத்த பார்த்தால் அவன் அன்னை தான் அழைத்திருந்தால் .

அதற்குள் மது மாந்தோப்பிற்குள் நுழைந்திருந்தாள் அவளை பார்த்து கொண்டே போனை எடுத்தவனுக்கு அந்த பக்கத்தில் இருந்து வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்தது .

அவனது தந்தைக்கு தீடிர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருப்பதாகவும் அவனை உடனடியாக கிளம்பி வரவும் என்றும் அழுது கொண்டே கூறினார் சீதாலட்சுமி.

அன்னை கூறியதை கேட்டு அதிர்ந்த அருண் முதலில் அன்னையை சமாதானம் செய்து தான் உடனே கிளம்பி வருவதாகவும் அன்னையை பயப்படவேண்டாம் என்று கூறியும் போனை வைத்தான்.

மதுவிடம் கூறிவிட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று வேகமாக மாந்தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நேராக தங்கள் மரத்தை நோக்கி சென்றவனுக்கு அன்றைய இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது .தனது இருகைகளையும் மதுவின் கன்னங்களை கையில் ஏந்தி மதுவின் முகம் நோக்கி குனிந்து கொண்டிருந்த கதிரின் முதுகையே அவன் பார்த்தது .

அந்த நொடி கோவம் அவன் கண்ணை மறைத்தது .அருண் நின்றிருந்த இடத்தில இருந்து அவர்களை பார்ப்பதற்கு நிச்சயம் அவன் கண்களுக்கு தவறாக தான் தெரிந்தது. ஒரு வேலை அவன் அவர்கள் பக்கத்தில் போய் பார்த்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும்.

ஆனால் அன்று ஏற்கனவே அவனை தாக்கி இருந்த அதிர்ச்சி அவன் மூளையை மழுங்கடித்திருந்தது. அவன் கண்களால் பார்த்ததை தவிர வேறு எதுவும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.

மதுவை அந்த நிலையில் பார்த்தவனுக்கு முதலில் தோன்றியது கட்டுக்கடங்காத கோவம் மட்டுமே. தன்னை ஏமாற்றி விட்டாலோ என்ற சந்தேகம், தன்னுடன் இருக்கும் அதே மரத்தடியில் அவனுடனும் எப்படி நிற்கிறாள் என்றாள் அதற்கு என்ன அர்த்தம் ,தான் இன்று கூப்பிட வரமாட்டேன் என்று கூறியும் ஏன் இங்கு வந்தால் இப்படி அனைத்தும் தப்பு தப்பாகவே தோன்றியது அருணிற்கு .

குழம்பி இருந்த மனதிற்கு நல்லதாக ஒன்றும் நினைக்க தெரியவில்லை. மனதில் எழுந்த கோபத்துடன் விறுவிறு வென்று வீட்டுக்கு திரும்பி விட்டான் அருண் .அத்தையிடம் தனது தந்தையின் நிலையை கூறிவிட்டு தனது துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.


மாந்தோப்பில் இருந்து வீட்டுக்கு திரும்பிய மது எதிர் கொண்டது பெட்டியுடன் வெளியே வந்த அருணையே.

அவளை நேருக்கு நேராய் பார்த்தவனை மது குழப்பத்துடனும் கலகத்துடனும் பார்க்க அவனோ அவளை முறைத்து விட்டு ஒன்றும் கூறாமல் விறுவிறு வென்று அவளை கடந்து சென்று விட்டான்.

*************************

மதுவிற்கு ஒன்றும் புரியவில்லை உள்ளே சென்ற மது தனது தாயிடம் enna நடந்தது என்று கேட்க அவர் மகாலிங்கத்திற்க்கு உடல் நலம் சரி இல்லை என்றும் அதனால் தான் அருண் அவசரமாக கிளம்பி செல்கிறான் என்றும் கூறினார்.

மாமாவின் உடல் நிலை குறித்து வருத்தமாக இருந்தாலும் அவன் தன்னை ஏன் கோவமாக பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்ற குழப்பம் மதுவிற்கு தோன்றத்தான் செய்தது .

அதை பிறகு பார்த்து கொள்ளலாம் இப்பொழுது மாமாவின் உடல் நிலை தான் முக்கியக் என்று பேசாமல் இருந்து விட்டாள் .

அடுத்த இரண்டு நாட்களாக அவள் அருணிற்கு அழைத்த அழைப்புகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

சிவானந்தன் குடும்பத்துடன் சென்னை செல்லலாம் என்று கிளம்பும் அன்று மகாலிங்கம் இறந்து விட்டார் என்ற இடி செய்தி வந்து சேர்ந்தது.

மனதை தாக்கிய துயரத்துடன் அனைவரும் சென்னைக்கு கிளம்பி சென்றனர் .அவர்கள் சென்ற போது மகாலிங்கத்தின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பித்தது.

சீதாலட்சுமி மிகவும் ஓய்ந்திருந்தார். அவரால் கணவரின் பிரிவை தாங்கி கொள்ளவே முடியவில்லை

அழுது அழுது ஓய்ந்தவரை மது தான் அருகில் இருந்து பார்த்து கொண்டாள் .சங்கரியும் அங்கே இருந்தார்.

சிவானந்தன் அருணிற்கு உதவி செய்து கொண்டிருந்தார். மகாலிங்கத்தின் உடலை எடுத்து செல்லும் போதும் சீதாலட்சுமி வெளியே வர வில்லை. அவரை எடுத்து செல்வதை பார்க்கும் சக்தி நிச்சயமாக அவருக்கு இல்லை.

அதை உணர்ந்திருந்த அனைவரும் அவர் வெளியில் வராமல் இருப்பதே நல்லது என்று பேசாமல் விட்டு விட்டனர் .

மதுதான் அவருடன் இருந்தாள். அடுத்து வந்த நாட்களில் அருணை மதுவால் பார்க்கவே முடியவில்லை.

அவள் அங்கிருந்து கிளம்பும் வரை அருண் அவள் கண்களில் தட்டுப்படவே இல்லை.

சீதாலட்சுமி இங்கு இருந்தால் இன்னும் இன்னும் வருந்தி கொண்டு தான் இருப்பார் என்று அவரை தங்களுடன் அழைத்து செல்ல முடிவு செய்தனர் சங்கரி தம்பதியினர்.

அருணை கடைசி வரை காண முடியாமல் தவித்த மது கிளம்பும் முன் தன் அன்னையிடம் வந்து" அம்மா மாமா கிட்ட சொல்லிட்டு போக வேண்டாமா "என்றாள்.

" அவன் வீட்டிற்கே வர முடிவதில்லை மது .தீடிரென்று தொழில் அவன் கைகளில் வந்துவிட்டதால் இரவு பகல் பாராமல் அதை பார்க்கவேண்டி உள்ளது மா .அவன் அத்தையை நம்முடன் அழைத்து செல்ல சொல்லிவிட்டான்
நாம் செல்லலாம் டா "என்றாள்.

கடைசியாக ஒரு முறை அவன் போனிற்கு முயற்சித்து பார்த்தால் மது .எப்பொழுதும் போல் அது எடுக்க படவில்லை.

வேறு வலி இல்லாமல் மனம் நிறைய பாரத்துடன் தங்கள் இல்லம் நோக்கி பயணப்பட்டாள் மது .

இங்கு அருணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. தந்தை இறந்த அதிர்ச்சி வருத்தம் எதையும் முழுதாக அனுபவிக்க முடியாமல் தொழில் பிரச்சனைகள் அவனை சூழ்ந்து கொண்டது.

தீடிரென்று மொத்த தொழிலும் கைக்கு வந்ததால் மிகவும் தடுமாறி போனான் அருண்.

கீழே வேலை செய்பவர்களை வைத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் உள்ள சிக்கல்களை புரிந்து கொண்டு வளர்ச்சி அடைய ஆரம்பித்தான். தாயை கூட தன் மாமாவையே திரும்பி கொண்டு வந்து விட சொல்லி விட்டான்.

தாயை அழைத்து செல்ல நிச்சயம் அருண் வருவான் அப்பொழுது அவனிடம் பேசி கொள்ளலாம் என்று நினைத்திருந்த மது தான் மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.

அவன் தன் மீது ஏதோ கோவத்தில் இருக்கிறான் என்பது நிச்சயமாக தெரிந்தது மதுவிற்கு. ஆனால் எத்தனை யோசித்தும் என்னவாக இருக்கும் என்று தான் தெரியவில்லை.

அருணிற்கு தொழில் ஒருவாறு சமநிலை படவே மூன்று வருடங்கள் ஓடி விட்டது.

ஒருவாறு எல்லாம் சீரான பிறகு அவனுக்கு அடிக்கடி மதுவின் நினைவு வர ஆரம்பித்தது
அவளை அழைத்து பேசவேண்டும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்

ஆனால் அவன் பார்த்த கட்சி கண் முன்னாள் வந்து அவனை தடுத்து விடும்.

இப்பொழுது அவனுக்கு அன்று போல் கோவம் வரவில்லை. சிறிது யோசிக்க தான் செய்தான் .ஆனால் அவனால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

இந்நிலையில் இருவருக்கும் வீட்டில் திருமண பேச்செடுத்தனர் .மதுவிடம் அருணை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு "மாமாவிற்கு சம்மதம் என்றல் எனக்கும் சம்மதம்" என்று கூறிவிட்டாள்.

அருணிடம் கேட்ட பொழுது சிறிது யோசித்தவன் மதுவை தவிர தன்னால் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தே இருந்தான் .

முதலில் "மது என்ன கூறினாள்" என்று கேட்டான்

அவள் கூறியதை சீதாலட்சுமி சொன்னவுடன் தனக்கு சம்மதம் என்று கூறிவிட்டான் .வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவர்க்கும் அதனை மகிழ்ச்சி.

மதுவிற்கு மிகவும் மகிழ்ச்சியே .இருந்தும் அருண் எப்பொழுதும் தன்னுடன் பேசாமல் இருப்பது தான் சிறிது உறுத்தி கொண்டே இருந்தது .

அருண் அவளை முழு மனதுடன் தான் திருமணம் செய்து கொண்டான். திருமணத்திற்கு பிறகு மது நடந்து கொண்ட முறையில் அவன் மனதில் இருந்த சிறு உறுத்தலும் மறைந்தது.

ஒரு வேலை அவள் தவறே செய்திருந்தாலும் இன்றைய தன் மனைவி தன்னை மிகவும் நேசிக்கிறான் என்று உணர்ந்து அவளை மனமார நேசித்து ஆவலுடன் வாழ ஆரம்பித்தான் .

மதுவும் அவனின் கோவத்தை ஆராயாமல் அவனது அன்பே போதும் என்று தான் இன்று வரை வாழ்ந்து வந்தால் .
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.