என் கிறுக்கல்கள்

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#1
உயிர் தீ !

உயிர்
மனிதா உனக்கு
மட்டுமே சொந்தமானதா ?

மரமாகிய
நான் என்ன கொடுமை
செய்தேன் ?
காற்று தந்தது தவறா ?
நீ
அமர ,உறங்க என்று
எல்லாவற்றிகும் நான்
உதவினேன் .

பிறப்பில் இருந்து
இறப்பு வரை
உன்னுடன் நான்
ஆனால்
வேண்டாத போது
வெட்டி எறிவதே
மனிதனின் வேலை !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#2
இயற்கை

பளிச் ! பளிச் ! என
மின்னும் மின்னல்
அரக்கன்
வானிலே தோன்றிவிட்டான்
இனி பயமில்லை !இனி பயமில்லை !
இயற்கை அன்னை நம் துயர்
துடைத்திடுவாள் !

இடி !இடி ! என
இடிக்கும் இடி அரக்கன்
வானிலே தோன்றி விட்டான்
இனி பயமில்லை !இனி பயமில்லை !
இயற்கை அன்னை நம் துயர்
துடைத்திடுவாள் !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#3
பெண்

பெண் என்பவள் மகாசக்தி
அவள் ஆக்கவும்
அழிக்கவும் ,தேற்றவும்
தாயாய் !
சகோதரியாய் !
மனைவியாய் !
மகளாய் !
எல்லாமுமாய் இருப்பவளை

போகப் பொருளாக்கி
அழிக்கும் மானுடா !
உன்னில் ஒரு பெண்
இருக்கிறாள்
அதை உணர்ந்துகொள்

எப்போது அதை உணருகிறாயோ
அப்போது பெண்ணின் சக்தியை
உணர்ந்து கொள்வாய் !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#4
அம்மா

வீட்டிற்கு ஒரு
தெய்வம்
அவள் !

உயிரையும்
உதிரத்தையும்
கொடுத்தவள்

உன் சிரிப்பையும்
உணதழுகையும்
தனதாக்கி
தனகென்று ஒரு
உணர்வில்லாமல்
போனவள் !

அம்மா நீ
அன்பின்
வடிவம் !

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#5
என்னவனே

என் உயிரில் கலந்து
உணர்வில் நுழைந்து
என்னுள் எல்லாமே நீ
எப்போது நான் நீயானாய் ?

உன் முகம் கண்டபோது
அதில் நானிருந்தேன்
என்னில் எல்லாமும்
நீயானாய் எப்போது ?

உடல் வேறு மனம் வேறல்ல
நீ வேறு நான் வேறல்ல !
உன் வலி ,ரணம் ,மகிழ்வு
எல்லாம் நானே !

மன்னவனே என்னில்
உன்னை கொண்டு
உன்னை என்னவனாக
கொண்ட நானே
நீ !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#6
கவிதையின் புலம்பல்

அரசன் மகளாகப்
பிறந்து யாப்பும்
அணியும் அணிந்து
எதுகையும் மோனையுடன்
வளம் வந்த நான்
இன்று ஆண்டியின்
மகளாகி ஆடையிழந்து
நிற்கின்றேன் !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#9
ஜீவ நதி

வற்றாத ஜீவ நதிகள்
ஆயிரம் இருந்தாலும்
பெண்ணின் கண்ணிரே
உலகத்தின் தண்ணீர்
பஞ்சம் தீர்க்கும்
ஜீவநதி அதற்கு
என்றுமில்லை ஒய்வு !
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#10
மனிதனின் மறுபக்கம்

புழுக்களும் ,பூச்சிகளும்
நம் முன்னோர்கள்
அவை சொந்தம்
கொண்டாடவில்லை
இவ்வுலகை !
பசுமை நிறைந்த மரங்களும்
பறவை இனமும் மிருகங்களும்
விரும்பவில்லை மாற்றத்தை
உன் மாற்றம் பூமிக்கு
பாரத்தைக் கூட்டியது
மனிதா யாரிந்த
உரிமையை உனக்கு
தந்தது ?
எது உன்னை
சுயநலமாக்கியது ?


1
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.