என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுகம&am

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#1
அன்பு வாசகர்களே!


எதிர்வரும் நத்தார் தினமன்று வெளிவரவிருக்கும் ‘என் பூக்களின் தீவே!’ எனும் நாவல், இணையத்தில் வெளிவராது நேரடியாக நூல் வடிவம் பெறுகின்றது.

அதனால், கதை பற்றிய சிறு அறிமுகமும் , முன்னோட்டமும் பார்க்கலாமா?

காதல்… என்பது எப்போதுமே அழகுதான் இல்லையா? அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?


அதுவே இங்கும் நிகழ்கின்றது.


வருண் , அகல் …காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இவர்களுள் நுழைந்த காதல், அவர்களை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது என்பதையும்,


ராகவ், அனு… கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும், கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுமாக நகர்கின்றது கதை.


ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை உங்கள் மனங்களில் இடம்பிடிக்குமென்று நம்புகிறேன். கதையை வாசித்து முடிக்கையில் உங்கள் வதனம் முறுவலால் நிறைந்திருக்கும் .


இன்னொரு ரகசியம் … ஆமாம் மக்களே ரகசியமேதான் .


இந்தக் கதையில் வரும் சில சுவாரசியமான காட்சிகளின் சொந்தக்காரர் இங்கே தான் உலவித் திரிகின்றார்.


ஹே…ஹே…யார் என்று கேட்டால் சொல்லவே மாட்டேனாம். பிறகு copyright issues ஆகிவிடும்!


உங்களால் அனுமானிக்க முடிகின்றதா என்று, கதையை வாசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் .கதையிலிருந்து …


“சரிதான் போடா மண்டைக்கொழுப்பா!’ என்றவாறே, விசுக்கென்று திரும்பி நடந்தவளின் இதழ்களிடையே நெரிந்தது, பொங்கியெழுந்த நகைப்பு!
“ஏய்ய்ய்! வேண்டாம்டி ஒல்லிக்கோம்பை; கையில் மட்டும் அகப்பட்டாயோ சட்னிதான்!” படித்துக்கொண்டிருந்த வருண், அடங்காத கோபத்தோடு கதிரையை(இருக்கை) தள்ளிகொண்டு விசுக்கென்று எழுந்தான்.
“அதே..அதேயேதான் நானும் கேட்டேன்; குத்து மதிப்பா இருபது தோசைகளை…அப்படியே குழைத்து விழுங்க சட்னி தேவைதானே? அதுக்குத்தான் தேங்காய் துருவித்தாங்க என்றேன்!” என்றவள், கோபத்தில் முகம் சிவக்கத் தன்னை நோக்கிப் பாய்ந்தவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில், ஒரே பாய்ச்சலாக மாடிப்படிகளில் தாவியிறங்கி, வலப்புறமாகத் திரும்பி, எதிரே வந்துகொண்டிருந்த சந்திரனில் மோதி, “ஏன்மா இப்படி கண்மண் தெரியாமல் ஓடி வாறாய்?” என்ற அவரின் கண்டிப்பைக் காதில் வாங்காது, “ஆன்ட்டி!” என்ற கூவலோடு சமையலறை நோக்கி ஓடினாள்.
*****

“இப்போ என்ன சொல்ல வாறீங்க? நான் இங்க இருப்பதால் உங்க நிம்மதி கெட்டுப் போகுதா?” சீறலாகக் கேட்டவளுக்குச் சட்டென்று பதில் சொல்லாது, வெகு அசட்டையாக தோள்களைக் குலுக்கியவாறே கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவளை நோக்கிய பார்வையில் அப்பட்டமான கேலி!
“இதில் சந்தேகமான கேள்வி வேற! ஹ்ம்ம்…அதுதான் இந்த வீட்டு பூஸுக்கும் பொன்சோவுக்குமே தெரியுமே…” என ஆரம்பித்தவனை, “தம்பி போதும்; சாப்பிட வந்தால் அந்த வேலையை பார்!” ஆரம்பித்து வைக்கிறானே என்கின்ற அலுப்பில் அதட்டினார் செல்வி.
அதோடு, சிலுப்பிக்கொண்டு எதுவோ சொல்ல முயன்ற அகல்யாவையும் கண்டிப்போடு பார்த்தார்.
“உனக்கும் தான்; இனி மாறி மாறி கதை வளர்த்தால் இரண்டு பேரும் முறையாக வாங்குவீங்க!” என்றதுக்கும் வருணுக்கே முறைப்பு பறந்தது.
“இப்போ உங்களுக்கு குளுகுளுவென்று இருக்குமே! இப்படி என்னையும் ஆன்டியையும் கொழுவி விடத்தான் இந்தாள் பிளான் போட்டார்; அது தெரியாம நீங்க அவுட் ஆன்ட்டி.” முறைத்தவளை நோக்கி,
“நீயெல்லாம் ஒரு ஆளென்று கதைக்க வாறாயே! உன்னை கொழுவி விட ரூம் போட்டு யோசிக்கிறேனாக்கும்; நினைப்புத்தான்!” என்றவாறே, வெகு அலட்சியமாக ஒரு பார்வையை வீசினான் வருண்.
அதோடு நிறுத்தாது, “ஏய்! முதல் அங்கால போடி; இங்க நின்று கத்துவதற்கு அப்படியே வெளியில இறங்கி பின்னுக்குப்போய் கத்து; பொன்சோ, தனக்கு ஜோடி கிடைத்துவிட்டது என்று சந்தோசப்படும்.” என்றவனுக்கே, தன் செல்ல நாயோடு இவளை ஜோடி சேர்த்ததில் நகைப்பு பீறிட்டது!
“என்றாலும் பொன்சோ பாவம்தான் இல்லையாப்பா! ஹா..ஹா..” விடாது வம்பிழுத்தவனையும், சேர்ந்து சிரித்த சந்திரனையும் கொலைவெறியோடு பார்த்தாள் அகல்.
“வேண்டாம் சொல்லீட்டன், பிறகு சம்பல் உள்ளே போகாது தலையில் கொட்டி விடுவன்.”
“சரிதான்; முடிந்தால் கொட்டிப்பார் பார்ப்போம்; கலவாய்க்குருவி!” இப்படி, மையம் கொள்ள முனைந்த அனல்காற்றின் ஆரம்பத்தில் விசுக்கென்று குறுக்கிட்டது செல்வியின் கோபக்குரல்.
“இங்க பாருங்க, இரண்டு பேரும் வாயை மூடுவது என்றால் இங்க இருந்து சாப்பிடலாம்; இல்லையோ, வெளியே போய் நின்று சண்டைபிடித்து, சமாதானம் ஆகீட்டு வாங்க!” குரல் உயர்ந்திருப்பதில் தாய்க்கு கோபம் வந்து விட்டதை உணர்ந்தாலும் அவ்வளவு இலேசில் விட மனமில்லை வருணுக்கு!
“அய்யே! மனிசனாகப் பிறந்தவன் இவளோடு சமாதானம் ஆவானா? அதற்கு நானும் கொள்ளிவாய்ப்பிசாசாக இருக்க வேண்டுமே!” என்றவன், அவள் முகம் போன போக்கில் உள்ளுக்குள் வெகுவாகவே நகைத்தான்; அவன் உதடுகளிலும் அதன் சாயல் படர்ந்தது!
“ஆன்ட்டி வேண்டாம்…இப்போ நீங்களே பார்க்கிறீங்க தானே, எத்தனை பட்டப் பெயர் சொல்லுது இந்த ஊத்தப்பம்.”
“ஏய்ய்ய்!” எழுந்து விட்டான் வருண்.
“யாரடி ஊத்தப்பம்? சின்னப்பிள்ளையில நீயும் குண்டுப்பூசனி தானே! அங்க அனலைதீவு கதியால் குருத்து, தென்னங்குரும்ப, கள்ள மாங்காய், புளியங்காய், நாகதாளிப்பழம் என்று எதை அரைக்காமல் விட்டாய்? அதையெல்லாம் நான் சொல்லியா காட்டுறன். எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறன், அப்படிச்சொல்லாதே என்று; இங்க பார்; என்னை வடிவா பார்; அப்படியா இருக்கிறன்.” அவள் கழுத்தில் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைக்க, கையிலிருந்த மர அகப்பையால்சுளீரென்று அவன் முதுகில் இழுத்தார் செல்வி.
“ஆஆஆஆஆ அம்மா! உண்மையாகவே அடிக்கிறீங்க! நோகுதம்மா! ஐயோ நிற்பாட்டுங்க. அப்பா…காப்பாத்துங்க…” அலறினான் வருண்.

இனி , புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் மக்களே!

நத்தார் தினத்திலிருந்து, அனைத்து முன்னணிக் கடைகளிலும் கிடைக்கும்.


எப்போதும் போல உங்கள் கருத்துக்களை அறிய மிக மிக ஆவலாகக் காத்திருக்கிறேன்.


online இல் வாங்க விரும்புவோர் MarinaBooks.com இல் இப்போதே முன்பதிவினைச் செய்யலாம் .

அழகுற அச்சிட்டு வெளியிடும் சிறகுகள் பதிப்பகத்துக்கு நன்றிகள் !
 

Attachments

Last edited by a moderator:

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,290
Likes
2,993
Location
Singapore
#3
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#

Congrats sissy....
Ebook ilaiye apo....
Online la thaapo vanganum.... Singapore la kidikuma... have to check... lets c sissy...thank u..
:) happy Christmas:cheer:
 
Last edited:

banumathi jayaraman

Friends's of Penmai
Joined
Aug 11, 2016
Messages
370
Likes
321
Location
Coimbatore
#5
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#2990

:cheer: :cheer: உங்களுடைய இந்த ''என் பூக்களின் தீவே''
புதிய, அழகான, அருமையான நாவலுக்கு, என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ரோஸி கஜன் டியர்
 

VaSun

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 19, 2016
Messages
542
Likes
1,092
Location
Chennai
#6
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#2990

"Rosei akka oda adutha kadhai vandhachu!!!!yayy......"appadinu 100% amarkalam padavidama ipadi oly hardcopy nu solipteengala!!!!!:tape::tape:
Y sago y????!!!!
Ebook or undudhane??? (illanu solidadheengalen!)

above all....vazhthukkal ka:):)yet another achievement!!! :)
 

kaviraja28

Friends's of Penmai
Joined
Mar 5, 2016
Messages
217
Likes
217
Location
chennai
#7
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#2990

hi rosei..
congrats dear....a direct book....!!definetely i ll read n tell u abt this book dear.....
merry christmas :cheer:
 

kala_sv

Friends's of Penmai
Joined
Mar 15, 2011
Messages
345
Likes
329
Location
Coimbatore
#8
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#2990

Congrats Rosei.

Wishing you good luck.
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#9
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#

Hahahahaha... Copy Rights.. :p Nalla Adi Kidaikum Kaa :lol: அடி உதை எல்லாம்:p

BTW Congrats kkow.. :love:
நன்றிம்மா ...........
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#10
Re: என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுக&#

Congrats sissy....
Ebook ilaiye apo....
Online la thaapo vanganum.... Singapore la kidikuma... have to check... lets c sissy...thank u..
:) happy Christmas:cheer:
அங்க லைபிறறிக்கு வரும் மா ...வாசித்தால் எப்படி என்று சொல்லுங்க . நன்றிடா ..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.