எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலாம&#

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,359
Location
Puducherry
#1
எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலாம்..?


ஆண்டின் தொடக்கத்தில் எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலாம் 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிதி ஆண்டு தொடங்க போகும் தருணத்தில் மாத சம்பளம் வாங்குபவர்கள், இது ஒரு சாதாரண விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் வருமானவரி என்கிற ஒரு விஷயம் அவர்களுக்கு நிதி ஆண்டை நிச்சயமாக நினைவுபடுத்தும். இந்த இக்கட்டான நிலைமையை எவ்வாறு சமாளிப்பது, நிதி திட்டமிடுதலின் மூலம் இந்த வருடத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்கலாம் என்பது பற்றி இங்கு பார்ப்போம்...!

நிதி திட்டமிடுதலின் அவசியம்

பணம் சம்மந்தபட்ட விவகாரங்களில் ஜனவரி, பிப்ரவரி... போன்ற மாதங்களில் அதிக கவனம் பெறுவது வரி என்ற வார்த்தைதான். பொதுவாக உயர் வகுப்பினர்கள் தங்களின் 30 சதவீத வரியை செலுத்தும் வகையில், அவர்களின் பண வரத்து சீராகவும், நிலையாகவும் இருப்பது போல திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மீதமுள்ள நடுத்தர பிரிவினர்கள் திட்டமிடாமல் பணத்தை விரையம் செய்கிறார்கள். வருடம் முழுவதும் இப்படி விரையம் செய்வதன் மூலம் நாம் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது.

அனைவரின் வாழ்விலும் திட்டமிடுதலும், அதை முறைப்படி செயல்படுவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இந்த திட்டமிடுதல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை திட்டமிடுதல், செலவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் இலக்குகளையும், தேவைகளையும் உணர்தல் ஆகும்.

திட்டமிடுதல்

வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் பொருளாதாரம் என்ற கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான விஷயம். நிதி திட்டமிடலில் பட்ஜெட் தான் முதல் பாகம். எனவே முதலில் நம்மை பொருளாதாரரீதியில் பாதுகாத்துக் கொள்ள நமக்கு வரும் வருமானத்தை ஆண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரலில்) கணக்கிட்டு சிறிய அளவில் பட்ஜெட் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாதம் பிறந்த உடன் வரும் சம்பளத்தில், அடுத்த ஒரு வருடத்திற்கான அத்தியாவிசய செலவுகளான குழந்தைகள் பள்ளி கட்டணம், இன்ஷூரன்ஸ், அரசாங்க வரிகள், போன்றவைகளுக்கு என தனியாக மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். இது தவிர எதிர்கால சேமிப்புகாக ஒரு சிறிய தொகையை வங்கி அல்லது தபால் நிலையங்கள் (குனுஇ சுனு) போன்ற அரசாங்க சம்மந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் மாதந்தோறும் சேமிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நமக்கு தெரியாமலேயே ஒரு முதலீடு நம்மிடம் இருக்கும். அது தகுந்த நேரங்களில் நம்மை வந்தடைவதை பொறுத்து நமது திட்டங்கள் அமைய வேண்டும்.

செலவுகளை கட்டுப்படுத்துதல்

வளர்ந்து கொண்டே இருக்கும் சமுதாயத்தில், கட்டாயத்தின் பேரில் நமக்கே தெரியாமல் நாம் நிறைய செலவினங்கள் செய்து வருகிறோம். இதை அறிந்து குறைப்பதன் மூலம் நாம் இன்னும் பல இன்னல்களில் இருந்து தப்பிக்கலாம். அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அதிகமாக உடைகள், வாகனங்கள், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் மற்றும் இதர செலவினங்கள் போன்றவைகளில் இருந்து நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். நடந்து செல்வது என்பது அறிதாகிவிட்ட இந்த காலகட்டத்தில், வாகனங்களின் தேவைகளை குறைத்து தினந்தோறும் நடந்து செல்லக் கூடிய தூரத்தில் இருக்கும் வேலைகளை வாகனங்கள் துணை இல்லாது செய்யும் போது, எரிபொருள் மிச்சம், உடல்நலம் பேணி காக்கப்படும்.

இலக்குகளையும், தேவைகளையும் உணருங்கள்

நம்மில் பலருக்கு எது தேவை, எது இலக்கு என்பதே தெரியாமல் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்துமுடிக்க வேண்டியவை இலக்குகள் ஆகும். தேவைகள் என்பது வீடு, மனை வாங்க விரும்புவது. இது போன்ற எதிர்கால தேவைகளுக்கும் இன்றைய சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். அன்றாட இலக்குகளையும், எதிர்கால தேவைகளையும் அறிந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,532
Location
Madras @ சென்னை
#2
Re: எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலா&#299

Tfs friend.

 

Attachments

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,672
Location
Malaysia
#3
Re: எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலா&#299

Very good sharing, Durga :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.